Friday, October 12, 2007
மழை
மழை!
ஒரு வரி
ஹைக்கூ கவிதை!
பெருவிருட்சங் கொண்ட
வனாந்தரங்கள்
ஜீவராசிக்கனுப்பும்
வான்வெளிக் கடிதம்!
நீலக்கடல்,
நீர் வீழ்ச்சி,
நீர் நிலைகளனைத்தினதும்
உதடுகள் முணுமுணுக்கும்
தாய் மொழி!
மேகத் துணி மூட்டையை
யாரோ இறுக்கிப் பிழிந்து விட்டு
சூரியனின் மேலே
காயப் போட்டார்களோ;
இப்படி இருண்டு கிடக்கிறதே!
மழைச் சாரல்
சற்று அதிகரித்துவிடின் - நம்
மானிடர் விழிகளில்
தொடர்ச்சியாய் தூறல்;
ஒன்று காய்ச்சலால்,
மற்றது வெள்ளப் பாய்ச்சலால்!
ஒரு நாழிப் பொழுதில்
ஒரு கோடிப் பிரசவங்கள்
ஆகாயத்திற்கு;
ஒரு ஊழிப் பொழுதின்
வேதனைகளை வெளிப்படுத்தும்
இடி மின்னல் வார்த்தைகள்
புரிகிறதா உனக்கு....?
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அன்பின் ரிஷான்
இந்தக் கவிதையும் தொடக்க நிலையில் தான் உள்ளது.
சில இந்தியக் கவிஞர்களின் கவிதைகளை நினைவூட்டும் வரிகளுடன்
எனினும் தற்போது உங்களால் இதைவிடவும் சிறப்பானதொரு கவிதையை எழுத முடியும்
ஈழத்தின் தனித்துவத்துடன்..
அன்புடன்
பஹீமாஜஹான்
ஆமாம் சகோதரி...இதுவும் எனது ஆரம்பகாலக் கவிதைகளில் ஒன்று.கவிதைகளின் படிக்கட்டுக்களில் தவழத் தொடங்கிய பொழுதுகளில் எழுதியது...!
இனிமேல் எழுதலாம் உங்கள் ஆதரவோடும் வழிகாட்டலோட்டும்...!
நன்றிகள் சகோதரி...!
//சில இந்தியக் கவிஞர்களின் கவிதைகளை நினைவூட்டும் வரிகளுடன்
எனினும் தற்போது உங்களால் இதைவிடவும் சிறப்பானதொரு கவிதையை எழுத முடியும்
ஈழத்தின் தனித்துவத்துடன்..
//
:)))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி :)
Post a Comment