Tuesday, October 12, 2010

விலகிப் போனவன்

பூக்களை ஏந்திக் கொண்டவன்
வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன்
தனித்த பசிக்குச் சுய சமையலையும்
விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில்
மனதோடு இசைக்கப் பாடல்களையும்
அருகிலிருந்து சொல்லித் தந்தவன்

சொல்லியோ சொல்லாமலோ
அன்பின் பிடியிலிருந்து
யாரோவாகி அவன் நகர்ந்தவேளை
தெரியாமலே போயிற்று

இறுதியில் தெரிந்தது
ஆழ்கிணறுகளின் பழுப்பு தோய்ந்த
சிதிலங்களுக்கிடையில் துளிர்க்கும்
பசுந்தளிர், சிறு மலர்களைப் போன்று
பார்த்துப் பார்த்து மகிழும்படியான
வாழ்வினை அவன் விட்டுச் செல்லாதது

சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இருட்டுமாக
இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
26032009



நன்றி
# அம்ருதா இதழ் - 51, அக்டோபர் 2010
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை
# உயிர்மை

26 comments:

செவத்தப்பா said...

//சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இருட்டுமாக
இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்// ஆழமான சிந்தனைகளை அடக்கி எழுதப்பட்ட அழகான கவிதை!

இக்கவிதையை இங்கே பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ரிஷான் ஷெரீஃப்.

Ahmed Ashfaq said...

முதல் முறை வாசிக்கும் பொழுது புரியவில்லை....மீண்டும் ஒருமுறை வாசித்தேன்...வசீகரமாய் இருந்தது....வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் செவத்தப்பா,

////சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இருட்டுமாக
இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்// ஆழமான சிந்தனைகளை அடக்கி எழுதப்பட்ட அழகான கவிதை!

இக்கவிதையை இங்கே பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ரிஷான் ஷெரீஃப்.//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் அஷ்ஃபாக்,

//முதல் முறை வாசிக்கும் பொழுது புரியவில்லை....மீண்டும் ஒருமுறை வாசித்தேன்...வசீகரமாய் இருந்தது....வாழ்த்துக்கள்//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :-)

Ashok D said...

//காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்//

உண்மைதாங்க

M.Rishan Shareef said...

அன்பின் D.R. அஷோக்,

////காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்//

உண்மைதாங்க//

:-(
நிச்சயமாக நண்பரே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

பூங்குழலி said...

அழகான கவிதை ரிஷான். வழக்கமாக உங்கள் கவிதைகள் இனிமையிலிருந்து சோகத்திற்கு பயணமாகும் ,இது மாற்று பாதையில் இருக்கிறது

"உழவன்" "Uzhavan" said...

அருமையா இருக்கு.

rvelkannan said...

வாழ்வியல் .. இதை கற்று தரும் எதுவுமே அருமை தான் நண்பரே .. இந்த கவிதையை போல

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//அழகான கவிதை ரிஷான். வழக்கமாக உங்கள் கவிதைகள் இனிமையிலிருந்து சோகத்திற்கு பயணமாகும் ,இது மாற்று பாதையில் இருக்கிறது//

:-)
நீண்ட காலத்திற்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்..நலமா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் உழவன்,

//அருமையா இருக்கு.//
:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் வேல்கண்ணன்,

//வாழ்வியல் .. இதை கற்று தரும் எதுவுமே அருமை தான் நண்பரே .. இந்த கவிதையை போல//

:-)
உங்கள் கருத்து மகிழ்வைத் தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

Ponniah Karunaharamoorthy said...

அன்புத்தோழா; உமது ஊனமுற்ற இராணுவவீரனும் புத்தரும் மொழிபெயர்ப்பை வாசித்துவிட்டு உமது வலைத்தளத்தை உலவிடும்வரையில் உம்மை தமிழகத்துச்சகோதரர் என்றெல்லவா எண்ணிக்கொண்டிருந்தேன். உமது கவிதைகள், மொழி பெயர்ப்புக்கள் இரண்டுமே அபாரம். வாழ்த்துக்கள்!
நல்...ல ரசிகந்தானே நல்ல கவிஞனாகவும் இருக்கமுடியும்?

Shammi Muthuvel said...

a good one rishan...a lesson of life....sands of time....

Fathima Rizafa said...

மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் ஆக்கம்.வாழ்த்துக்கள்!!!

M.Rishan Shareef said...

அன்பின் பொன்னையா கருணாகரமூர்த்தி,

//அன்புத்தோழா; உமது ஊனமுற்ற இராணுவவீரனும் புத்தரும் மொழிபெயர்ப்பை வாசித்துவிட்டு உமது வலைத்தளத்தை உலவிடும்வரையில் உம்மை தமிழகத்துச்சகோதரர் என்றெல்லவா எண்ணிக்கொண்டிருந்தேன். உமது கவிதைகள், மொழி பெயர்ப்புக்கள் இரண்டுமே அபாரம். வாழ்த்துக்கள்!
நல்...ல ரசிகந்தானே நல்ல கவிஞனாகவும் இருக்கமுடியும்?//

:-)
நான் இலங்கையைச் சேர்ந்தவன். அனேகர் தமிழகத்தைச் சேர்ந்தவனென்றே எண்ணிக் கொள்கிறார்கள். அவர்களிடம் இலங்கையன் எனச் சொன்னதும் முதலில் கேட்கும் கேள்வி எப்படித் தமிழ் தெரியும் என்றுதான். :-)

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

Dear Shammi Muthuvel,
Thanks for the comment friend :-)

M.Rishan Shareef said...

அன்பின் ஃபாத்திமா ரிஸாஃபா,

//மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் ஆக்கம்.வாழ்த்துக்கள்!!!//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :-)

ஆதவா said...

தவழ்ந்து, அடிவாங்கி, காதலித்து, பின் அது வலித்து, சுமையேறி கரை கடந்து, சுமை வலியாகி, பின் அடிபட்டு......
சிலசமயம் இந்த அடிபடல் வாழ்க்கையிலிருந்து தள்ளி நேராகவே சென்று, ஒரு சோம்பேறி போல......
வாழ்வியல் எப்படிவேண்டுமானாலும் அமையலாம்..
ஆசிரியனது வாழ்வு பெரும்பாலும் கசப்புத் தோட்டங்களில்தான் விளைகிறது. ஆனால் விளைவுகள் ஆரோக்கியமானது.

பார்த்து பார்த்து மகிழும் வாழ்வு விட்டுச் செல்லவில்லைதான்... ஆனால் பார்த்துப் பார்த்து மகிழும் வாழ்வைக் கொடுத்துச் சென்றவன்@
விட்டுச் சென்றவன் என்ற படிமம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம்.... காதலாகவும் கூட.

வாழ்த்துக்கள் ரிஷான்.

Anonymous said...

Sandhya Giridhar

சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இருட்டுமாக
இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்

Really wonderful thoughts presented in touching words.... Rishan you are really great.....

Thamarai said...

"இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்.......


Great lines Rishan...

Yellorukkullum erukkum ore ninaivu, oru silaraal mattume velippadutha mudihirathu.."

Jehana Mohamed Jareer said...

அருமையா இருக்கு.நல்ல தமிழ்நடையும், பக்குவமாய்ச் சொல்லும் பாங்கும்கொண்ட உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது,தொடர்வீர்கள் என எதிர் பார்க்கிறேன் ரிஷான்

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவா,

//தவழ்ந்து, அடிவாங்கி, காதலித்து, பின் அது வலித்து, சுமையேறி கரை கடந்து, சுமை வலியாகி, பின் அடிபட்டு......
சிலசமயம் இந்த அடிபடல் வாழ்க்கையிலிருந்து தள்ளி நேராகவே சென்று, ஒரு சோம்பேறி போல......
வாழ்வியல் எப்படிவேண்டுமானாலும் அமையலாம்..
ஆசிரியனது வாழ்வு பெரும்பாலும் கசப்புத் தோட்டங்களில்தான் விளைகிறது. ஆனால் விளைவுகள் ஆரோக்கியமானது.

பார்த்து பார்த்து மகிழும் வாழ்வு விட்டுச் செல்லவில்லைதான்... ஆனால் பார்த்துப் பார்த்து மகிழும் வாழ்வைக் கொடுத்துச் சென்றவன்@
விட்டுச் சென்றவன் என்ற படிமம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம்.... காதலாகவும் கூட.

வாழ்த்துக்கள் ரிஷான்.//

மிக அருமையான, நிதர்சனமான கருத்து. மிகவும் ரசித்தேன். :-)

நீங்கள் சொல்வது உண்மைதான். கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சந்தியா கிரிதர்,

//சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இருட்டுமாக
இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்

Really wonderful thoughts presented in touching words.... Rishan you are really great.....//

:-)

நீண்ட காலத்தின் பின்னர் உங்களைக் காண்கிறேன். நலமா சகோதரி?

வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் Jehana Mohamed Jareer

//அருமையா இருக்கு.நல்ல தமிழ்நடையும், பக்குவமாய்ச் சொல்லும் பாங்கும்கொண்ட உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது,தொடர்வீர்கள் என எதிர் பார்க்கிறேன் ரிஷான்//

உங்களைப் போன்ற அன்புள்ளங்களுக்காக இன்ஷா அல்லாஹ் நிச்சயம் தொடர்வேன் சகோதரி. கருத்துக்கு நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் தாமரை,

//"இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்.......


Great lines Rishan...

Yellorukkullum erukkum ore ninaivu, oru silaraal mattume velippadutha mudihirathu.."//

:-)
கருத்துக்கு நன்றி தோழி!