Thursday, January 10, 2008

தீயெனத் தனிமை சுட ...!


எந்தவொரு மேகக்கூட்டமும்
எனக்கென்று நிற்காதவொரு
பெரும்பரப்பில் நான்;
பேசக்கேட்க யாருமற்றுத்
தனித்திருக்கிறேன் !

இப்பொழுதுக்குச் சற்றுப்பின்
வலி மிகும் தொனியுடனான
எனது பாடல்
மணற்புயலடித்துக் கண்ணையுருத்தி
உடற்புழுதியப்பும்
இப்பாலைவனம் பூராவும்
எதிரொலிக்கக் கேட்கலாம் !

எனைச் சூழ ஒலித்தோயும்
எந்தவொரு அழைப்பும்
எனக்கானதாக இருப்பதில்லை ;
எனைச் சிதைத்து ஆளும்
இப் பெருவலியையும்
எவரும் உணர்வதில்லை !

இப்படியே போனாலோர் நாளென்
முதல்மொழியும் மறந்துவிடுமென
எண்ணிச் சோர்ந்த பொழுதொன்றில்
விழும் துளியொவ்வொன்றுமென்
செவிக்குள் ரகசியம் பேசித்
தசை தடவிக் கீழிறங்கி,
மணலுறிஞ்சி மறைந்து போக
சிறு தூறலாய் மழைத்துளி வீழ்ந்து
நெஞ்சம் நனைக்கக் காண்பேனா?

எனைச் சூழ்ந்திருக்கும்
தனிமையையும் , மௌனத்தையும்
பெரும் சாத்தான் விழுங்கிச்சாக - என்
தோள்தொட்டுக் கதை பேசவொரு
சினேகிதம் வேண்டுமெனக்கு.
நீயென்ன சொல்கிறாய் ?


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

18 comments:

Anonymous said...

"தீயெனத் தனிமை சுட"
கவிதை நன்றாக உள்ளது.

உங்கள் கவி மொழி மேலும் கூர்மையடைந்து கொண்டு செல்வது மகிழ்ச்சி தருகிறது.

உங்களைச் சூழ்ந்திருக்கும் தனிமையின் அவதிகளை எல்லோருக்கும் பொதுவான உணர்வுகளோடு விபரித்துள்ள விதம் நன்றாக உள்ளது.
பஹீமாஜஹான்

M.Rishan Shareef said...

மிகவும் நன்றிகள் சகோதரி.
உங்கள் ஊக்க்கம் தரும் கருத்துக்கள்தான் எனது கவிமொழி கூர்மையடையக் காரணங்கள்.தொடர்ந்தும் உங்களை எதிர்பார்க்கிறேன்.

naan yaar said...

///- என்
தோள்தொட்டுக் கதை பேசவொரு
சினேகிதம் வேண்டுமெனக்கு.
நீயென்ன சொல்கிறாய் ? ///

answer "yes"nu vandhuchaa??

:))

M.Rishan Shareef said...

வாங்க வாணி...

//answer "yes"nu vandhuchaa??//

ஒன்று,இரண்டுன்னா சொல்லலாம்... :P

Anonymous said...

என்
தோள்தொட்டுக் கதை பேசவொரு
சினேகிதம் வேண்டுமெனக்கு.
நீயென்ன சொல்கிறாய் ?

naan ready nee ready yaa.
summa vasanam..

thinam thinam en manathu intha valiyilthaan thudikirathu..
sunnambu kalavaasal vekkai pola

avan varamalae en vazhvu mudinthuvidumo

M.Rishan Shareef said...

வாங்க 'அனானி' சகோதரி,
நண்பர்கள் என்றால் நான் மாட்டேனென்றா சொல்லப் போகிறேன்?

நீங்கள் யாருக்காகக் காத்திருக்கிறீர்களொ,அவர் உங்களிடம் வந்து சேர வாழ்த்துக்கள் நண்பி. :)

ரௌத்ரன் said...

//விழும் துளியொவ்வொன்றுமென்
செவிக்குள் ரகசியம் பேசித்
தசை தடவிக் கீழிறங்கி,
மணலுறிஞ்சி மறைந்து போக
சிறு தூறலாய் மழைத்துளி வீழ்ந்து
நெஞ்சம் நனைக்கக் காண்பேனா? //

அழகான ஈர வரிகள் ஷெரீப்.

M.Rishan Shareef said...

வாங்க ரௌத்ரன் !

//அழகான ஈர வரிகள் ஷெரீப்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

naan yaar said...

///ஒன்று,இரண்டுன்னா சொல்லலாம்... :P //

ஓஓஓ...கதை அப்படி போகுதா??

;)))))

M.Rishan Shareef said...

ஹா ஹா ஹா :D

Sakthy said...

அழகான வரிகள் ரிஷான்.
எல்லோருக்குமே தேடல்கள் இருக்கத்தான் செய்கிறது இல்லையா.....

M.Rishan Shareef said...

//எல்லோருக்குமே தேடல்கள் இருக்கத்தான் செய்கிறது இல்லையா.....//

நிச்சயமாக சக்தி...
ஒரு தேடல் முடிந்துவிடின் இன்னொன்றைத் தேடி மனம் அலைந்து கொண்டேயிருக்கும் உயிருள்ளவரை...!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

கோகுலன் said...

கவிதை வாசித்து அசந்து போனேன் ஒருகணம்..

தனிமை நல்லது என்றாலும் , பருவத்தில் கொடியது தான் :(

அனுபவம் சொன்னேன்

Kavinaya said...

//எனைச் சூழ ஒலித்தோயும்
எந்தவொரு அழைப்பும்
எனக்கானதாக இருப்பதில்லை ;
எனைச் சிதைத்து ஆளும்
இப் பெருவலியையும்
எவரும் உணர்வதில்லை ! //

வார்த்தைகள் உங்களுக்கெனவே தனி நேர்த்தியுடன் வந்து விழுகின்றனவே! இந்த உணர்வு எனக்கும் புதிதில்லை ரிஷான் :)

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

//கவிதை வாசித்து அசந்து போனேன் ஒருகணம்..

தனிமை நல்லது என்றாலும் , பருவத்தில் கொடியது தான் :( //

பருவத்தில் மட்டுமில்லை நண்பா..முதுமையிலும் தான் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//வார்த்தைகள் உங்களுக்கெனவே தனி நேர்த்தியுடன் வந்து விழுகின்றனவே! இந்த உணர்வு எனக்கும் புதிதில்லை ரிஷான் :)//

உண்மையிலேயே பெண்களுக்குத்தான் தனிமை அதிகமாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.அவர்களின் வாழ்க்கையானது எப்பொழுதுமே இன்னொருவரைச் சார்ந்திருக்கையில் ஒருவர் விலக நேர்ந்தால் கூடத் தனிமையானது கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

MSK / Saravana said...

//எந்தவொரு மேகக்கூட்டமும்
எனக்கென்று நிற்காதவொரு
பெரும்பரப்பில் நான்;
பேசக்கேட்க யாருமற்றுத்
தனித்திருக்கிறேன் ! //

நானும்தான்..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)