Sunday, June 15, 2008
துயர் துடைக்கும் விரல்கள் கொடு !
இறகுகளற்ற தேவதையவள்;
அள்ளிச் சூடும் ஆபரணங்களோ,
அலங்கார வார்த்தைகளோ,
தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ
அவளெழிலில் தோற்றுத்தான் போகும் !
ஆனால்...
அவள் பிரசவித்த விழிநீரே
துளித்துளியாய்ச் சேர்ந்து,
நாணல்கள் வளைத்துக் கரையுடைத்து,
அவளுக்கான எல்லைகளுடைத்து
அலையாய்,நதியாய்ப் பெருக்கெடுக்க
மீண்டும் மீண்டும்
சாட்டையாலடித்து வதை செய்யவென்றே
நாற்திசைகளிலும் காத்திருக்கிறது
சாத்தான்களுக்குப் பிறந்த கூட்டமொன்று !
தனிமையின் கொடுவாய்க்குள்
தன்னைத் தின்னக் கொடுத்துவிட்டு
காயங்களைப் போர்த்தி
ஆகாயம் பார்த்தபடி நடுநடுங்கி நிற்குமவளைக்
கொண்டு போ ராசகுமாரனே
அந்த மலைகளைத் தாண்டி...!
மாய உலகின் கரங்களை விலக்கி
மரங்களுக்கும் அதனுடனான தென்றலுக்கும்
தூதனுப்புகிறேன்
தூய பனிபடர்ந்த தேசமொன்றின்
குளிர்ந்த சோலைகளின்
அழகிய பெருவாழ்வை
அவளுக்குத் தருவாய்தானே நீ ?!
சாபங்கள் சூழ்ந்த
அவளது துயர வாழ்வைப் பாடுவதால்
ஆகப்போவது ஏதுமில்லையெனக்
கூறுபவர்கள் முன்னால் வரலாம் !
அலறல் மட்டுமே சுமக்கும் அவளது இசை
காற்றுடன் கலந்து போயொரு நாள்
சூரியனை விழுங்கிவிடும்,
நிலமிருட்டிப் பாதம் உதைக்க
எரிமலைகள் வெடித்துப் பிளக்கும்
நாளது வெகுதொலைவிலில்லையென்ற
அச்சத்தில் நடுநடுங்கியே
நானிதனை எழுதுகிறேன் !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
அழகா எழுதி இருக்கீங்க ரிஷான் :-)
கவிதை மனசை உருக்குது...
என் உயிரும் நிரம்பி
வழிந்து கொண்டிருக்கிறது இப்போது ரிஸானின் கவிதைகளைப் படிக்கும்போது. வார்ப்புவில் பலமுறை படித்துள்ளேன். வலைப்பூவின் வடிவமைப்பும் புகைப்படங்களும் கொள்ளை கொள்கின்றன.
www.pa-veli.blogspot.com
கண்கள் கலங்கியது இதனைப் படிக்கையில். என் மனநிலைக்கேற்ப அமைந்ததால் கொஞ்சம் ஆறுதலாகவும்...
//இறகுகளற்ற தேவதையவள்;
அள்ளிச் சூடும் ஆபரணங்களோ,
அலங்கார வார்த்தைகளோ,
தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ
அவளெழிலில் தோற்றுத்தான் போகும் !//
எத்தனையோ பேர் அழகை வர்ணித்திருக்கிறார்கள்.. ஆனால் அழகிலும் இது அழகு!
//அவள் பிரசவித்த விழிநீரே
துளித்துளியாய்ச் சேர்ந்து,
நாணல்கள் வளைத்துக் கரையுடைத்து,
அவளுக்கான எல்லைகளுடைத்து
அலையாய்,நதியாய்ப் பெருக்கெடுக்க//
வார்த்தைகள் கோர்த்து நதியாய் பெருக்கெடுத்து மனதை அள்ளிக் கொண்டு போவதில் உங்களுக்கு ஈடில்லை தம்பீ!
//காயங்களைப் போர்த்தி
ஆகாயம் பார்த்தபடி நடுநடுங்கி நிற்குமவளைக்
கொண்டு போ ராசகுமாரனே//
ஹும்...
//அலறல் மட்டுமே சுமக்கும் அவளது இசை
காற்றுடன் கலந்து போயொரு நாள்
சூரியனை விழுங்கிவிடும்,
நிலமிருட்டிப் பாதம் உதைக்க
எரிமலைகள் வெடித்துப் பிளக்கும்//
இது தவிர்க்க முடியாதது, ரிஷான்!
மாம்ஸ் செளக்கியமா??
உடம்பு எதும் சரியில்லையா???
என்னடா கவிதை பத்தி கமெண்ட் போடலைனு பாக்குறீங்களா?? எனக்கு கவிதை அவ்வளவா புரியாது மாம்ஸ்.
உங்களை ஊக்கப் 'படுத்தறதுக்கு'தான் இந்த கமெண்ட்
வர்ட்டா
அன்பு ரிஷான்,
கவிதை வாசித்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. மனசு கொஞ்ச நேரம் நிலைத்துப்போனது..
தனிமையின் வலியையும், துணைக்காக காத்திருக்கும் மனநிலைஅயையும் அழகாக சொன்னாய் நண்பனே..
இராஜகுமாரன் விரைவில் ஓடி வருவான்.. தேவதையை கூட்டிக்கொண்டு பறந்து போவான்.. :))
தம்பி ரிஷான்...ஏன்? ஏனிந்த சோகம்...
தேவதையை கண்டேன்...அப்படிங்கற மாதிரி ஒரு ஜில் கவிதை வேண்டுமப்பா!!! சீக்கிரமா போடுங்க.
rishi...
endha varinu sollurathunu theriala ella varigalum azhagaga sethuka patta varigal...ennaku kanneer vara vaitha varigal...oru pennin thanimaiyin kodumaiyinai unarunthu ezhuthi irukeeraai thambii...
vazhuthukkal pa....
anbudan
natchatraa
rishi...
endha varinu sollurathunu theriala ella varigalum azhagaga sethuka patta varigal...ennaku kanneer vara vaitha varigal...oru pennin thanimaiyin kodumaiyinai unarunthu ezhuthi irukeeraai thambii...
vazhuthukkal pa....
anbudan
natchatraa
//Heidi ~ The Angel said...
அழகா எழுதி இருக்கீங்க ரிஷான் :-)
கவிதை மனசை உருக்குது...//
அன்பின் சகோதரி,
உங்கள் முதல் வருகை என நினைக்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி. :)
அன்பின் ஜெ.நம்பிராஜன்,
//என் உயிரும் நிரம்பி
வழிந்து கொண்டிருக்கிறது இப்போது ரிஸானின் கவிதைகளைப் படிக்கும்போது. வார்ப்புவில் பலமுறை படித்துள்ளேன். வலைப்பூவின் வடிவமைப்பும் புகைப்படங்களும் கொள்ளை கொள்கின்றன. //
உங்கள் வருகை நல்வரவாக அமையட்டும்.
உங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.
கவிஞர் வைரமுத்துவால் தேர்ந்தெடுக்கப்பட்டு குங்குமம் இதழில் வெளியான உங்கள் 'ரயில் பயணங்களில்' கவிதை மிக அருமையான கவிதை.
அவலங்கள் சூழ்ந்த வாழ்வினைக் கொண்ட ஒரு குடியிருப்பைக் கண்ணில் காட்டி மனதில் நீங்கா ஒரு கவிதையாக அது இருக்கிறது.
உங்களுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
எனது முகவரி msmrishan@gmail.com
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அருமை ரிஷான்...
உங்கள் கவிதை சொல்ல மறந்ததை அந்த படம் சொல்லுகிறது.வழியும் கண்ணீர்த்துளி படிக்கும் அனைவரின் கண்களிலும் வரலாம்..அதுவே உங்களெழுத்திற்கான வெற்றி
வாழ்த்துக்கள் தோழா
நட்புடன்
ஸ்நேகிதி..
வாங்க கவிநயா :)
//கண்கள் கலங்கியது இதனைப் படிக்கையில். என் மனநிலைக்கேற்ப அமைந்ததால் கொஞ்சம் ஆறுதலாகவும்...
எத்தனையோ பேர் அழகை வர்ணித்திருக்கிறார்கள்.. ஆனால் அழகிலும் இது அழகு!
வார்த்தைகள் கோர்த்து நதியாய் பெருக்கெடுத்து மனதை அள்ளிக் கொண்டு போவதில் உங்களுக்கு ஈடில்லை தம்பீ!//
உங்கள் பாராட்டுதலுடனான வார்த்தைகள் எனக்கு மிகவும் மகிழ்வைத் தருகின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
கவிதைக்கான சந்தர்பபம் கட்டாரோடு சம்பந்தப்பட்டிருக்குமோ அல்லது...????
எதுவாக இருந்தாலும் உணர்கிறேன்....மற்றும்
நேர்த்தியாக கோர்க்கப்பட்ட வார்த்தைகள்...தரம்
"தனிமையின் கொடுவாய்க்குள்
தன்னைத் தின்னக் கொடுத்துவிட்டு
காயங்களைப் போர்த்தி
ஆகாயம் பார்த்தபடி நடுநடுங்கி நிற்குமவளைக்
கொண்டு போ ராசகுமாரனே
அந்த மலைகளைத் தாண்டி...!'
ராச குமாரன் வழிமாறிப் போய் விட்டான். அவனுக்காகவே காத்திருந்த அவள் நாளைகள் என்று எதுமற்ற ஒரு சூனிய உலகத்தில் இன்று தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறாள்
"குளிர்ந்த சோலைகளின்
அழகிய பெருவாழ்வை
அவளுக்குத் தருவாய்தானே நீ ?! "
அவளவள் வாழ்வில் விட்டுச் சென்றதெல்லாம் பாலைவனங்கள் தான்.
ராசகுமாரன்கள் காவியங்களுக்குள்ளும் கதைகளுக்குள்ளும் நின்று கொண்டான்கள்.வெளியே அலையும் சாத்தான்களிடம் பெண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.
//அவளது இசை
காற்றுடன் கலந்து போயொரு நாள்
சூரியனை விழுங்கிவிடும்இ
நிலமிருட்டிப் பாதம் உதைக்க
எரிமலைகள் வெடித்துப் பிளக்கும்
நாளது வெகுதொலைவிலில்லை//
மிக அருமையான கவிதை.
அருமையான வரிகள்....
உங்களுடைய அத்தனை கவிதைகளையும் ஒருசேர வாசித்து முடித்தேன். ஏதோ ஓர் வினோதமான தனிமையுணர்வு என்னுள் படர்ந்துவிட்டிருப்பதை உணர முடிகிறது!! எளிதாக புரியக்கூடியக் கவிதைகள்.. புரியாத சில கவிதைகள்... மற்றுமொருமுறை வாசிக்கத் தூண்டிய பல கவிதைகளென பகதரப்பட்ட கவிதைகள்.. தமிழ் உங்கள் விரல்களில் தாண்டவமாடுகிறது... மென்மேலும் பல கோணல்களிலும் பல களங்களிலும் கவிதைகள் இயற்றிட வாழ்த்துக்கள்...
உங்கள் கவிதைகள் சிலவற்றைப் படித்தேன்.பிடித்திருக்கிறது.
//மங்களூர் சிவா said...
மாம்ஸ் செளக்கியமா??
உடம்பு எதும் சரியில்லையா???
என்னடா கவிதை பத்தி கமெண்ட் போடலைனு பாக்குறீங்களா?? எனக்கு கவிதை அவ்வளவா புரியாது மாம்ஸ்.
உங்களை ஊக்கப் 'படுத்தறதுக்கு'தான் இந்த கமெண்ட் //
வாங்க சிவா :)
நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
வருகைக்கும் ஊக்கப்'படுத்தலு'க்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கோகுலன்,
//இராஜகுமாரன் விரைவில் ஓடி வருவான்.. தேவதையை கூட்டிக்கொண்டு பறந்து போவான்..//
தேவதையின் மகிழ்ச்சி இராசகுமாரனின் வருகையிலேயே தங்கியிருக்கிறது.தேவதைக்கு இனி எந்தத் துன்பத்தையும் தராமல் அவர் பார்த்துக் கொள்வார் தானே ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் மௌலி,
//தம்பி ரிஷான்...ஏன்? ஏனிந்த சோகம்...
தேவதையை கண்டேன்...அப்படிங்கற மாதிரி ஒரு ஜில் கவிதை வேண்டுமப்பா!!! சீக்கிரமா போடுங்க. //
நிச்சயமாக சீக்கிறம் போடலாம் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நட்சத்திரா,
//endha varinu sollurathunu theriala ella varigalum azhagaga sethuka patta varigal...ennaku kanneer vara vaitha varigal...oru pennin thanimaiyin kodumaiyinai unarunthu ezhuthi irukeeraai thambii...
vazhuthukkal pa.... //
உங்கள் கருத்து எனக்கு மிகவும் மகிழ்வினைத் தருகிறது.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி. :)
அன்பின் சக்தி,
//அருமை ரிஷான்...
உங்கள் கவிதை சொல்ல மறந்ததை அந்த படம் சொல்லுகிறது.வழியும் கண்ணீர்த்துளி படிக்கும் அனைவரின் கண்களிலும் வரலாம்..அதுவே உங்களெழுத்திற்கான வெற்றி
வாழ்த்துக்கள் தோழா //
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)
அன்பின் தமிழன்,
//கவிதைக்கான சந்தர்பபம் கட்டாரோடு சம்பந்தப்பட்டிருக்குமோ அல்லது...????//
என் வாழ்வோடு சம்பந்தப்பட்டது.அவ்வளவுதான்..வேறொன்றுமில்லை நண்பா.
//நேர்த்தியாக கோர்க்கப்பட்ட வார்த்தைகள்...தரம் //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அன்பின் பஹீமாஜஹான்,
//ராச குமாரன் வழிமாறிப் போய் விட்டான். அவனுக்காகவே காத்திருந்த அவள் நாளைகள் என்று எதுமற்ற ஒரு சூனிய உலகத்தில் இன்று தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறாள் //
அந்தளவுக்கு தேவதையை இடறச் செய்தவன் ராசகுமாரனாக இருக்கமாட்டான்.பெரும் சாத்தானாகவோ,சூனியக்காரனாகவோ இருந்திருப்பான்.
ஆனால் இப் பூவுலகில் அனைத்து அன்பினையும் நெஞ்சினில் தாங்கிய ராசகுமாரன்கள் இன்னும் இன்றும் தேவதைகளுக்காகக் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் சுல்தான்,
உங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும். :)
//மிக அருமையான கவிதை.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ஜி,
//உங்களுடைய அத்தனை கவிதைகளையும் ஒருசேர வாசித்து முடித்தேன். ஏதோ ஓர் வினோதமான தனிமையுணர்வு என்னுள் படர்ந்துவிட்டிருப்பதை உணர முடிகிறது!! எளிதாக புரியக்கூடியக் கவிதைகள்.. புரியாத சில கவிதைகள்... மற்றுமொருமுறை வாசிக்கத் தூண்டிய பல கவிதைகளென பகதரப்பட்ட கவிதைகள்.. தமிழ் உங்கள் விரல்களில் தாண்டவமாடுகிறது... மென்மேலும் பல கோணல்களிலும் பல களங்களிலும் கவிதைகள் இயற்றிட வாழ்த்துக்கள்...//
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள் முதல்வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது.உங்கள் பொறுமை எனக்கு ஆச்சரியமளிக்கிறது. :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ஹேமா,
எனது தாய்நாட்டிலிருந்து இன்னுமொரு சகோதரி.உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
//சாபங்கள் சூழ்ந்த
அவளது துயர வாழ்வைப் பாடுவதால்
ஆகப்போவது ஏதுமில்லையெனக்
கூறுபவர்கள் முன்னால் வரலாம் !//
யாருக்கிருக்கிறது அத்தைரியம்?
//அலறல் மட்டுமே சுமக்கும் அவளது இசை
காற்றுடன் கலந்து போயொரு நாள்
சூரியனை விழுங்கிவிடும்,
நிலமிருட்டிப் பாதம் உதைக்க
எரிமலைகள் வெடித்துப் பிளக்கும்
நாளது வெகுதொலைவிலில்லையென்ற
அச்சத்தில் நடுநடுங்கியே
நானிதனை எழுதுகிறேன் !//
அச்சத்தில் நடுங்கி என்பதை விட மிச்சமுள்ள அவள் நாளை ஒளிமயமாக்க அக்கறையுடன்
ராசகுமாரனை அழைத்து அவளது துயரை தங்கள் விரல்களுக்கிடையே பிடித்திட்ட தூரிகையால் துடைக்க முயன்றிருக்கும் விதம் அற்புதம் ரிஷான்.
நல்ல கவிதை ரிஷான்
பிடித்த வரிகள் கீழே
தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ
அவளெழிலில் தோற்றுத்தான் போகும் !
அவள் பிரசவித்த விழிநீரே
துளித்துளியாய்ச் சேர்ந்து,
நாணல்கள் வளைத்துக் கரையுடைத்து,
அவளுக்கான எல்லைகளுடைத்து
அலையாய்,நதியாய்ப் பெருக்கெடுக்க
மீண்டும் மீண்டும்
சாட்டையாலடித்து வதை செய்யவென்றே
நாற்திசைகளிலும் காத்திருக்கிறது
சாத்தான்களுக்குப் பிறந்த கூட்டமொன்று !
அலறல் மட்டுமே சுமக்கும் அவளது இசை
காற்றுடன் கலந்து போயொரு நாள்
சூரியனை விழுங்கிவிடும்,
ரிஷ்..
//தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ//
அழகிய வரி இது!
அவள் பிரசவித்த விழிநீரே
துளித்துளியாய்ச் சேர்ந்து,
நாணல்கள் வளைத்துக் கரையுடைத்து,
அவளுக்கான எல்லைகளுடைத்து
அலையாய்,நதியாய்ப் பெருக்கெடுக்க
மீண்டும் மீண்டும்
சாட்டையாலடித்து வதை செய்யவென்றே
நாற்திசைகளிலும் காத்திருக்கிறது
சாத்தான்களுக்குப் பிறந்த கூட்டமொன்று
கண்ணீர் பொங்கி பெரிய அலையாவது போலவே சொற்களின் வேகமும் கூடிக் கொண்டே போகிறது .நன்றாக இருக்கிறது .
உங்கள் கோபம் கடைசி வரிகளில் எனக்கும் உடன் பாடே
கவிதை மிக அருமை நண்பரே ..மிக அதிகம் ரசித்தேன் உங்கள் கவிதையை ...
வாழ்த்துக்களுடன்
அன்புடன்
விஷ்ணு
அன்பின் நண்பர் புகாரி,
//நல்ல கவிதை ரிஷான்//
உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கின்றது. நன்றி நண்பரே :)
அன்பின் காந்தி,
//ரிஷ்..
//தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ//
அழகிய வரி இது!//
:))
நன்றி சகோதரி :)
அன்பின் பூங்குழலி,
//கண்ணீர் பொங்கி பெரிய அலையாவது போலவே சொற்களின் வேகமும் கூடிக் கொண்டே போகிறது .நன்றாக இருக்கிறது .//
அழகிய கருத்து.
நன்றி சகோதரி :)
அன்பின் பிச்சுமணி
//உங்கள் கோபம் கடைசி வரிகளில் எனக்கும் உடன் பாடே//
:)))
நன்றி நண்பரே :)
அன்பின் விஷ்ணு,
//கவிதை மிக அருமை நண்பரே ..மிக அதிகம் ரசித்தேன் உங்கள் கவிதையை ...
வாழ்த்துக்களுடன் //
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)
அன்பின் ரிஷான்...
கவிதைகள் பலவிதம்...
சில கவிதைகளின் வார்த்தைகள்
விலாசமிட்டு சொல்லும் எழுதியவரின்
பெயரை!
சில கவிதைகள்... சில்லென்று
ஓர் சாறலை நம் இதயத்தினை
நனைத்திவிடும்
சில கவிதைகள்... படித்தபின்னும்
அசை போட வைத்துக்கொண்டிருக்கும்
சில கவிதைகள்... சிக்கலான வாழ்வியலை
சொல்லியழும்...
சில கவிதைகள்... கற்பனையினை
காட்டி நகைக்க வைக்கும்...
இப்படி எத்த்னையோ கவிதைகளை..
படித்து வருகின்றேன்... நான்..
இருந்தாலும்.... ரிஷான் கவிதையிது
என்று.... நீ வைக்கும் முற்றுபுள்ளிகளோ
எழுத்துக்களோ... வரிகளோ... சட்டென்று
நம்மை நிற்க வைத்து...சொல்கிறதே..
அதை நினைத்து நான் அகமகிழ்கின்றேன்...
வரிகள் சொல்லும் வலிகளிலும்...
என் கண்ணீரை சிந்துகின்றேன்....
வாழ்த்துக்கள்... ரிஷான்..
அன்புடன் இளங்கோவன்..
அன்பின் இளங்கோ,
கவிதை வடிவிலான உங்கள் எண்ணக் கருத்துக்களைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். தொடர்ந்து எழுத எனக்கு உங்கள் வரிகள் ஊக்கமளிக்கின்றன.
அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி நண்பரே !
பெண்ணின் துயரை கவிதைகளில் சொல்லியிருப்பது அருமை ரிஷான்..
வார்த்தைகள் அற்புதமா இருக்கு.. நிறைய எழுதுங்க..
அன்பின் ஷேன்,
//பெண்ணின் துயரை கவிதைகளில் சொல்லியிருப்பது அருமை ரிஷான்..
வார்த்தைகள் அற்புதமா இருக்கு.. நிறைய எழுதுங்க..//
எழுதுகிறேன் !
அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே :)
Post a Comment