அத்திவாரத்தை
வெடிபொருட்களால் நிரப்பி
அது இறுகிச் சேர்ந்திட
மனிதக் குருதி சேர்த்து
நெருப்புக்களால் ஆன
வீடொன்று கட்டு உனக்கு.
பேய்களே அதற்குக் காவலிருக்கட்டும் !
முன்பு புதைத்த
சவங்களைத் தோண்டியெடுத்து
அதன் எலும்புகளால் சில யன்னல்களும் வை.
இரவானாலும் - எந்த
இருளானாலும்
அவை மூடப்படாமலே கிடக்கட்டும் ;
அனல்காற்றும்,
அரைவேக்காட்டுப் பிணவாடையும்
மட்டுமே சுமந்தது உள்ளே வரட்டும் !
உருகிச் சிவந்து சூடு சுமக்கும்
தட்டை இரும்பினாலோர்
ஒற்றைக் கதவு வை.
வெப்பத்திறவுகோலால்
சாத்தான்களுக்கு மட்டுமதனைத்
திறந்து வழிவிட்டு நகர் !
பிணக்கால்களின் மூட்டுக்கள் கொண்டு
உன் சிம்மாசனம் அமையட்டும்,
மண்டையிலடித்துக் கொன்றொழித்த
பெண்களின் முத்துப் பற்களை
அழகுக்காகப் பதி ;
சிறு மழலையின் மண்டையோடு
செங்கோலின் கைப்பிடியை அலங்கரிக்கட்டும் !
இளம்பெண்களின் அலறலும்,
குழந்தைகளின் அழுகையும்,
மனிதர்களின் ஓலமும்
துயர் சுமந்த ஒப்பாரிகளும்
உன் வீட்டை இசையாக
நிரப்பட்டும் !
விருந்தினர் வருகையில்-கொதிக்கும்
விஷபானம் குடிக்கக் கொடு ;
அவர்கள் தொண்டை வழியே உருகிவழிகையில்
உன் வீரவாள் கொண்டு
வெட்டிக் கறி சமை !
அவர்கள் கண்களைத் தோண்டி-அதில்
ஆயிரம் அலங்காரம் பண்ணி,
நாக்குகளை அறுத்துத் துணைக்குத்
தொட்டுக் கொள்ளவை !
உன் பசி தீர்ந்ததா?
இப்பொழுது சொல்.
நான் சொன்னபடி கட்டிய
உன் வீட்டுக்கும்
என் தாய்தேசத்துக்கும்
என்ன வித்தியாசம் இன்று?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
இணைய வானொலியில் ஒலிபரப்பான இக்கவிதையை பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்களது குரலில் கேட்க...
35 comments:
இப்படி ஒரு கவிதயை கண்டதில்லை யாம். ரணங்களும் ரத்ததையுமே கண்டு வளரும் இலங்கையில் அமைதி தவழ இறைவனை பிராத்திப்போம்.
என்றும் அன்புடன்
இளையகவி
Miga arumai!!Innum thezhivaga irunthirun thaal rasipatharku nandraga irunthirukum. It's really Amazing!!!1
இந்த கவிதையை இணைய இதழில் ஏற்கனவே வாசித்தேன்.. என்ன சொலவதென்றே தெரியவில்லை..
நாட்டில் அமைதிக்காய் பிரார்த்தனை மட்டும் செய்கிறேன் நண்பா!!!
வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழுத்தில் தெரிகிறது ரிஷான்
ரிஷான்,
பாராட்டுக்கள் ரிஷான். யுத்த வெறியின் கொடூரக் கோரத்தை விரக்தியின் ஆழத்திலிருந்து நோக்கி எழுதியிருக்கிறீர்கள்.
கவிதையின் ஆழம், தேசம்படும்பாட்டை வலியோடு கண்ணை நனைக்கிறது.
உள்ளே இழுத்துச்சென்று கூறு போடுகிறது உங்கள் வரிகள்.
வாழ்த்துகள்.
//வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழுத்தில் தெரிகிறது ரிஷான்//
repeateeeeeeeeeeeeeeee
//வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழுத்தில் தெரிகிறது ரிஷான்//
ஆமாம், அதேதான் ரிஷு. அற்புதம்! ஒவ்வொரு வரியும் படிக்கையிலேயே நெஞ்சில் வலி சேர்த்து கண்ணில் குருதி பெருக வைக்கிறது :( படமும் மிகப் பொருத்தம். விரைவில் நாட்டில் அமைதி நிலவ என்னால் ஆனது பிரார்த்தனைகள் மட்டுமே.
மறக்க நினைக்கின்ற ,மறக்கவே முடியாத நினைவுகள்...அப்படி என்ன ஆசை ரிஷான் உங்களுக்கு...
எம்மை அழ வைத்து பார்ப்பதில்...
உங்கள் எழுத்தின் ஆழத்தில் , என் நாசி நுகர்கிறது.. ரத்த வாடையும்,பிணவாடையையும்.....
//வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழுத்தில் தெரிகிறது ரிஷான்//
Oru repeat ithukku..
:(((
உங்கள் எழுத்தின் செழுமை வியப்பில் ஆழ்த்துகிறது ரிஷான்,
மனதை கணமாக்கும் வரிகள்:(
அன்பின் இளையகவி,
//இப்படி ஒரு கவிதயை கண்டதில்லை யாம். ரணங்களும் ரத்ததையுமே கண்டு வளரும் இலங்கையில் அமைதி தவழ இறைவனை பிராத்திப்போம்.//
நிச்சயமாக...!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
//smilingsmilers said...
Miga arumai!!Innum thezhivaga irunthirun thaal rasipatharku nandraga irunthirukum. It's really Amazing!!! //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கோகுலன்,
//இந்த கவிதையை இணைய இதழில் ஏற்கனவே வாசித்தேன்.. என்ன சொலவதென்றே தெரியவில்லை..//
பிரவாகம் ஆண்டுமலர் மற்றும் கீற்றில் பிரசுரமானது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கானாபிரபா,
//வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழுத்தில் தெரிகிறது ரிஷான் //
உங்கள் சாதனைகளோடு பார்க்கும்போது இது ஒன்றுமேயில்லை.. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நிர்ஷன்,
//ரிஷான்,
பாராட்டுக்கள் ரிஷான். யுத்த வெறியின் கொடூரக் கோரத்தை விரக்தியின் ஆழத்திலிருந்து நோக்கி எழுதியிருக்கிறீர்கள்.
கவிதையின் ஆழம், தேசம்படும்பாட்டை வலியோடு கண்ணை நனைக்கிறது.//
பார்த்துக் கேட்டு வளர்ந்த சோகம், எழுத்தின் முதுகில் ஏறியிருக்கிறது. அவ்வளவுதான் நண்பா :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
//ஆடுமாடு said...
உள்ளே இழுத்துச்சென்று கூறு போடுகிறது உங்கள் வரிகள்.
வாழ்த்துகள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
// மதுரையம்பதி said...
//வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழுத்தில் தெரிகிறது ரிஷான்//
repeateeeeeeeeeeeeeeee //
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கவிநயா,
//ஒவ்வொரு வரியும் படிக்கையிலேயே நெஞ்சில் வலி சேர்த்து கண்ணில் குருதி பெருக வைக்கிறது :( படமும் மிகப் பொருத்தம். விரைவில் நாட்டில் அமைதி நிலவ என்னால் ஆனது பிரார்த்தனைகள் மட்டுமே.//
இதுபோன்ற அன்புள்ளங்களின் பிரார்த்தனைகளாலாவது சீக்கிரம் அமைதி நிலவட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் சக்தி,
//உங்கள் எழுத்தின் ஆழத்தில் , என் நாசி நுகர்கிறது.. ரத்த வாடையும்,பிணவாடையையும்.....//
இந்த எழுத்துக்கள் உங்கள் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறதென எண்ணுகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி..!
அன்பின் ஜி,
////வயதுக்கு மீறிய ஆளுமை உங்கள் எழுத்தில் தெரிகிறது ரிஷான்//
Oru repeat ithukku.. ///
:).
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் திவ்யா,
//உங்கள் எழுத்தின் செழுமை வியப்பில் ஆழ்த்துகிறது ரிஷான்,
மனதை கணமாக்கும் வரிகள்:( //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)
உடல் நடுங்கும் வார்த்தைகள்.. கவிதைகளாக உருவெடுத்து மிரட்டும் குரலின் உச்சம்.. தனியாத கோபத்தைக் கொன்று கிழிக்கும் இந்தக் கவிதை நன்று..
தொடருங்கள்..
அன்பின் ரகசிய சிநேகிதி,
எனது வலைத்தளத்துக்கான உங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
//உடல் நடுங்கும் வார்த்தைகள்.. கவிதைகளாக உருவெடுத்து மிரட்டும் குரலின் உச்சம்.. தனியாத கோபத்தைக் கொன்று கிழிக்கும் இந்தக் கவிதை நன்று..
தொடருங்கள்..//
அழகான வரிகளில் கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி. :)
வணக்கம் ரிஷான்
உங்கள் கவிதை அப்துல் ஜபார் ஐயாவின் குரலில் இன்னும் வலியை வலிமையாகப் பதிகின்றது. இதை நமது வானொலியிலும் நாளை ஒலிபரப்புச் செய்கின்றேன்.
இந்தக் கவிதையை எத்தனை முறை வாசித்திருப்பேன்-னு எனக்கே தெரியாது!
ஏதாச்சும் சொல்லும் முன்னர், அப்படியே மனம் கனத்துப் போய் சொல்லாமல் போய் விடுவேன்!
அதுவும் இந்திய சுதந்திர நாள் அன்று இடப்பட்ட கவிதையின் டைமிங்!
ஆனால் இன்று படிக்காமல், திரு அப்துல் ஜபாரின் குரலில் கேட்டு மட்டுமே விட்டு, பின்னூட்டுகிறேன்!
புதைகுழி வீடு, இன்பப் புதையல் வீடாக மாற வேண்டும்! நல்லூரான் நினைவில் இது ஊற வேண்டும்!
//இதை நமது வானொலியிலும் நாளை ஒலிபரப்புச் செய்கின்றேன்.
//
காபி அண்ணாச்சி...சூப்பர்! :)
//நான் சொன்னபடி கட்டிய
உன் வீட்டுக்கும்
என் தாய்தேசத்துக்கும்
என்ன வித்தியாசம் இன்று?//
ஆழ்மனதின் வலி வேதனை இவை ஓங்கிக் கேட்கின்ற கேள்வி.
ஒவ்வொரு வரியும் அருமை..பாராட்டுக்கல் ரிஷான்
அன்பின் கானாபிரபா,
//உங்கள் கவிதை அப்துல் ஜபார் ஐயாவின் குரலில் இன்னும் வலியை வலிமையாகப் பதிகின்றது. இதை நமது வானொலியிலும் நாளை ஒலிபரப்புச் செய்கின்றேன். //
என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கும் உங்கள் செய்கைக்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் நண்பரே..!
அன்பின் KRS,
//புதைகுழி வீடு, இன்பப் புதையல் வீடாக மாற வேண்டும்! நல்லூரான் நினைவில் இது ஊற வேண்டும்!//
உங்கள் பிரார்த்தனைதான் எம் அனைவரினதும் வேண்டுதல்களாக இருக்கின்றன. சீக்கிரமே இவை பலிக்கட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ராமலக்ஷ்மி,
//ஆழ்மனதின் வலி வேதனை இவை ஓங்கிக் கேட்கின்ற கேள்வி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
//ஒவ்வொரு வரியும் அருமை..பாராட்டுக்கல் ரிஷான்//
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)
ஹ்ம்
"இலங்கை நாடு எம் நாடு
இனிய எங்கள் தாய் நாடு
அழகு மலைகள் நிறை நாடு
ஆறுகள் பாய்வது எம்நாடு"
:(((((((((((((((((((((
அன்பின் பஹீமா ஜஹான்,
//"இலங்கை நாடு எம் நாடு
இனிய எங்கள் தாய் நாடு
அழகு மலைகள் நிறை நாடு
ஆறுகள் பாய்வது எம்நாடு"//
சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்தது. இன்னும் பாடத்திட்டத்தில் இப்பாடல் இருக்கிறதா என்ன? இருப்பின், எந்த உண்மைகளைச் சுமந்து இவ்வரிகளை உச்சரிக்கப் போகிறோம்?
:(((((((((((((((((((((
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
Post a Comment