Wednesday, January 20, 2010

நீ விட்டுச் சென்ற மழை




எனது மௌனத்தின் பின்புறத்தில்
ஒளிந்திருந்தன
உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட
கதையொன்றின் மிச்சங்கள்

அதனூடு
இருப்பின் மகிழ்வுகளை எங்கோ
தொலைதூரத்துக்கு ஏகிவிட்டு
தீராப்பளுவாய் வந்தமர்ந்திருக்கிறது
தனிமை

செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது
வழமைபோலவே
மழைக்கு நனைந்த வீட்டை
வெயிலுலர்த்திப் போகிறது
வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி

எல்லாமறிந்தும்
ஏதுமறியாய் நீ

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர் எழுத்து இலக்கிய இதழ் - அக்டோபர், 2009
# நவீன விருட்சம்
# திண்ணை






38 comments:

மாதவராஜ் said...

கவிதை முழுக்க ரசித்தாலும்..//செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது// இந்த வரிகள் என் மீது சொட்டிக்கொண்டே இருக்கின்றன. அருமை!

மன்னார் அமுதன் said...

அருமையான கவிதை ரிஷான்

அருமையான வார்த்தைத் தெரிவுகள்

வாழ்த்துக்கள்

Gowripriya said...

//செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது//
அழகு..

//வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி//

மனதில் கனமேற்றும் வரிகள்..

sathishsangkavi.blogspot.com said...

//எனது மௌனத்தின் பின்புறத்தில்
ஒளிந்திருந்தன
உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட
கதையொன்றின் மிச்சங்கள்//

கவிதை அழகு...

மாதேவி said...

"வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி " நெகிழச் செய்கின்றது ரிஷான்.

vasu balaji said...

/வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி/

அருமை ரிஷான்

ஃபஹீமாஜஹான் said...

"செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது'

நன்றாக உள்ளது ரிஷான்.கவிதையிலுள்ள எல்லாச் சொற்களும் கச்சிதமாக அமைந்துள்ளன.
வாழ்த்துக்கள்

தமிழ் said...

/செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது
வழமைபோலவே
மழைக்கு நனைந்த வீட்டை
வெயிலுலர்த்திப் போகிறது
வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி

எல்லாமறிந்தும்
ஏதுமறியாய் நீ/

அருமை

அன்புடன் அருணா said...

மழையும் எதையாவது இப்படி அடிக்கடி விட்டுச் சென்று கொண்டேயிருக்கிறது.அருமை!

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'நீ விட்டுச் சென்ற மழை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 20th January 2010 02:07:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/172189

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

சந்திரவதனா said...

அழகான கவிதை

ஆசிப் மீரான் said...

நல்லா இருக்கு ரிஷான்!!

DREAMER said...

அருமையான கவிதைகள்...

Toto said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க

-Toto
Roughnot.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

//வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி//

வாவ்... வரிகளில் வீழ்ந்தது என் இதயம். அருமை இன்றுதான் தங்கள் தளம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

Siva Ranjan said...

அருமை ரிஷான்...

விஜி said...

நிகழ்தலை ஒன்றுபடுத்தி உணர்வுகளை வெளிப்படுத்திய வரிகள் ரிஷான்.

பூங்குழலி said...

தீராப்பளுவாய் வந்தமர்ந்திருக்கிறது
தனிமை


செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது
வழமைபோலவே
மழைக்கு நனைந்த வீட்டை
வெயிலுலர்த்திப் போகிறது
வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி

மிக மிக அருமையான கவிதை ரிஷான்

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை ரிஷான்.

//செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது
வழமைபோலவே
மழைக்கு நனைந்த வீட்டை
வெயிலுலர்த்திப் போகிறது
வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி

எல்லாமறிந்தும்
ஏதுமறியாய் நீ//

நான் ரசித்த வரிகளும்..!

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் மாதவராஜ்,

//கவிதை முழுக்க ரசித்தாலும்..//செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது// இந்த வரிகள் என் மீது சொட்டிக்கொண்டே இருக்கின்றன. அருமை!//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் அமுதன்,

//அருமையான கவிதை ரிஷான்

அருமையான வார்த்தைத் தெரிவுகள்

வாழ்த்துக்கள்//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்பின் கௌரிப்ரியா,

////செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது//
அழகு..

//வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி//

மனதில் கனமேற்றும் வரிகள்..//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சங்கவி,

////எனது மௌனத்தின் பின்புறத்தில்
ஒளிந்திருந்தன
உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட
கதையொன்றின் மிச்சங்கள்//

கவிதை அழகு...//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்பின் மாதேவி,

//"வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி " நெகிழச் செய்கின்றது ரிஷான்.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் வானம்பாடிகள்,

///வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி/

அருமை ரிஷான்//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமாஜஹான்,

//"செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது'

நன்றாக உள்ளது ரிஷான்.கவிதையிலுள்ள எல்லாச் சொற்களும் கச்சிதமாக அமைந்துள்ளன.
வாழ்த்துக்கள்//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் திகழ்,

///செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது
வழமைபோலவே
மழைக்கு நனைந்த வீட்டை
வெயிலுலர்த்திப் போகிறது
வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி

எல்லாமறிந்தும்
ஏதுமறியாய் நீ/

அருமை//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்புடன் அருணா,

//மழையும் எதையாவது இப்படி அடிக்கடி விட்டுச் சென்று கொண்டேயிருக்கிறது.அருமை!//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சந்திரவதனா,

//அழகான கவிதை//


நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ஆசிப் அண்ணா,

//நல்லா இருக்கு ரிஷான்!!//

நன்றி அண்ணா :)

M.Rishan Shareef said...

அன்பின் ஹரீஷ் நாராயண்,

//அருமையான கவிதைகள்...//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்பின் Toto,

//ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க //

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்பின் சே.குமார்,

////வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி//

வாவ்... வரிகளில் வீழ்ந்தது என் இதயம். அருமை இன்றுதான் தங்கள் தளம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்பின் சிவரஞ்சன்,

//அருமை ரிஷான்...//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//நிகழ்தலை ஒன்றுபடுத்தி உணர்வுகளை வெளிப்படுத்திய வரிகள் ரிஷான்.//

:)
கருத்துக்கு நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//மிக மிக அருமையான கவிதை ரிஷான்//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//அருமையான கவிதை ரிஷான்.

//செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது
வழமைபோலவே
மழைக்கு நனைந்த வீட்டை
வெயிலுலர்த்திப் போகிறது
வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி

எல்லாமறிந்தும்
ஏதுமறியாய் நீ//

நான் ரசித்த வரிகளும்..!//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

கயல் said...

//வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி//

கவித்துவம்!அழகு!