Wednesday, November 17, 2010

கல்லா(ய்) நீ


எனதென்று சொல்ல
அத்தாட்சிகளேதுமற்ற வெளியொன்றில்
பயணிக்கிறதுனது பாதங்கள்
ஒரு வழிகாட்டியாகவோ
ஒரு யாசகனாகவோ
நானெதிர்க்கத் தலைப்படவில்லை

எனைச் சூழ
ஒரு பெரும் மௌனத்தைப் பரத்தியிருக்கிறேன்
அதன் சிறு பூக்கள் அடிச்சுவடுகளில் நசியுற
ஆகாயம் கிழிக்கும் மின்னலாய்
பார்வையை அலைய விட்டபடியிருக்கிறாய்

காலத்தின் தேவதைகள்
தம் விலாக்களில் இறகு போர்த்தி
காதலின் பாடலொன்றை
மெல்லிய குரலில் இசைத்தபடி
சோலைகளைச் சுற்றிப் பறந்தபடி இருக்கிறார்கள்

நீ தேவதைகளின் முகம் பார்க்கிறாய்
உனக்கவை கோரமாய்த் தெரிந்திட
இறகு நோக்கிக்  கூரம்பெறிந்து
அவற்றையும் முடக்கிட முனைகிறாய்

உன் துர்புத்தி அறிந்து
தேவதைகளின் காவலன்
உனைக் கல்லாய் மாறிடச் சபிப்பானாயின்
இப்பொழுது எனை விலங்கிட்டு
வசந்தங்களுக்கு மீளவிடாமல்
ஆக்கிரமித்திருப்பதைப் போல
அப்பொழுதும் என் கல்லறை அடைத்து
நடுகல்லாய்க் கிடப்பாயோ ?

20092008

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# அம்ருதா இதழ் 51, அக்டோபர் 2010
# உயிரெழுத்து - ஞாயிறு வீரகேசரி இதழ்  24.10.2010
# காற்றுவெளி இதழ், நவம்பர் 2010
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் எழுத்தாளர்கள்

18 comments:

Ragavan Samuel said...

ரிஷான்... அருமையான கவிதை... அழகான சொற்க்கட்டு, படித்தவுடன் எந்த முகாந்திரமும் இல்லாமல் பிடித்தது... உங்கள் கவிதைகள் நிறைய படிக்கிறேன்... கதைகளும் உங்கள் ஆளுமையை சொல்கின்றன... வாழ்த்துக்கள்...!
- ராகவன்

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் ராகவன்,
கவிதைகள் குறித்தான உங்கள் கருத்து மகிழ்வையும் ஊக்கத்தையும் ஒன்றாக அளிக்கிறது.
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

பூங்குழலி said...

இப்பொழுது எனை விலங்கிட்டு
வசந்தங்களுக்கு மீளவிடாமல்
ஆக்கிரமித்திருப்பதைப் போல
அப்பொழுதும் என் கல்லறை அடைத்து
நடுகல்லாய்க் கிடப்பாயோ ?


ஏன் ரிஷான் இப்படி ?என்ன இப்படி ஒரு விரக்தி ....கல்லறை வரை துன்பம் தொடர வேண்டுமா ?சோகத்தின் நிழலே தொடாமல் ஒரே ஒரு கவிதை எழுதுங்களேன் ரிஷான் (கவிதை மென்மையாகவும் ஆனால் வலியை உணர்த்துவதாகவும் அருமையாக இருக்கிறது)

ம.தி.சுதா said...

/////காலத்தின் தேவதைகள்
தம் விலாக்களில் இறகு போர்த்தி
காதலின் பாடலொன்றை
மெல்லிய குரலில் இசைத்தபடி/////
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
mathisutha.blogspot.com

ஆதவா said...

ரிஷான்...
கவிதை நன்றாக வந்திருக்கிறது! வார்த்தைகள் நன்றாக இருக்கின்றன...

விசாலம் ராமன் said...

அன்பு ரிஷான் சூப்பர் கவிதை .எனக்கு ரொம்பவும் பிடித்தது
வாழ்த்துகள்

அன்புடன் மலிக்கா said...

வரிகள் ஏதோ வலியைச்சொல்வதுபோல்
உணர்வுகளை உணர்த்தியிருக்கிறது..
வாழ்த்துக்கள்..

ஷஹன்ஷா said...

அருமையான படைப்பு.......

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//ஏன் ரிஷான் இப்படி ?என்ன இப்படி ஒரு விரக்தி ....கல்லறை வரை துன்பம் தொடர வேண்டுமா ?சோகத்தின் நிழலே தொடாமல் ஒரே ஒரு கவிதை எழுதுங்களேன் ரிஷான் (கவிதை மென்மையாகவும் ஆனால் வலியை உணர்த்துவதாகவும் அருமையாக இருக்கிறது)//

நீங்கள் சொன்ன பின்னர் சோகத்தின் நிழலே இல்லாத ஒரு கவிதையை புத்தாண்டு தினத்தில் இட்டிருக்கிறேன் சகோதரி.. (எனதாக நீயானாய் - கவிதை) :-)

வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி சகோதரி!

M.Rishan Shareef said...

அன்பின் ம.தி.சுதா,

//அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்...//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்புடன் மலிக்கா,

//வரிகள் ஏதோ வலியைச்சொல்வதுபோல்
உணர்வுகளை உணர்த்தியிருக்கிறது..
வாழ்த்துக்கள்..//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் ஜனகன்,

//அருமையான படைப்பு.......//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவா,

//ரிஷான்...
கவிதை நன்றாக வந்திருக்கிறது! வார்த்தைகள் நன்றாக இருக்கின்றன...//

ஊக்கம் தரும் கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் விசாலம் அம்மா,

//அன்பு ரிஷான் சூப்பர் கவிதை .எனக்கு ரொம்பவும் பிடித்தது
வாழ்த்துகள்//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்மா :-)

ஆதவா said...

ரிஷான்...
கவிதை நன்றாக வந்திருக்கிறது! வார்த்தைகள் நன்றாக இருக்கின்றன...

கோவிந்த் said...

கல்லா(ய்) நீ -
தலைப்பும் அழகு...
கவியும் அழகு...

'ஆகாயம் கிழிக்கும் மின்னலாய்
பார்வையை அலைய விட்டபடியிருக்கிறாய்'-
நல்ல கற்பனை.

வாழ்த்துக்கள் ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவா,

//ரிஷான்...
கவிதை நன்றாக வந்திருக்கிறது! வார்த்தைகள் நன்றாக இருக்கின்றன... //

உங்கள் கருத்து மகிழ்வையும் ஊக்கத்தையும் தருகிறது.
நன்றி நண்பா :-)

M.Rishan Shareef said...

அன்பின் கோவிந்த்,

//கல்லா(ய்) நீ -
தலைப்பும் அழகு...
கவியும் அழகு...

'ஆகாயம் கிழிக்கும் மின்னலாய்
பார்வையை அலைய விட்டபடியிருக்கிறாய்'-
நல்ல கற்பனை.

வாழ்த்துக்கள் ரிஷான்.//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)