Wednesday, March 2, 2011

பூக்கள் விசித்தழும் மாலை

வானை எடுத்து வாவென
காற்று வெளியெங்கும் 
பட்டத்தை அனுப்புகிறேன் பகலில்

சூரியனோ பௌர்ணமியோ எதுவோ
குளிரிரவில் நட்சத்திரங்களாலெறிந்து
என் மீதுள்ள கோபத்தைக் காட்டுகிறது

செடிகளில் விழும் எரிநட்சத்திரங்கள்
மொட்டுக்களாகிப் பூத்திடும்
விடிகாலையில்

மாலைகளாக்கப்படுபவற்றுக்கு
தெரியாது
எந்தச் சடங்குகளுக்காகக் கோர்க்கப்படுகிறோமென்று

எனினும் மாலையிலுதிரும்
பூக்கள் விசித்தழுகின்றன
மேடை நிழல்களிலிருந்தும்
பூத்த மரங்களின் கீழிருந்தும்

காலையில் பனி சொட்டிக் கிடக்கிறது

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

நன்றி

# அதீதம் இதழ்

# காற்றுவெளி

# தமிழ்முரசு

# வீரகேசரி வார இதழ்

# திண்ணை

# வார்ப்பு

# தமிழ் எழுத்தாளர்கள்


9 comments:

ராமலக்ஷ்மி said...

//மாலைகளாக்கப்படுபவற்றுக்கு
தெரியாது
எந்தச் சடங்குகளுக்காகக் கோர்க்கப்படுகிறோமென்று

எனினும் மாலையிலுதிரும்
பூக்கள் விசித்தழுகின்றன
மேடை நிழல்களிலிருந்தும்
பூத்த மரங்களின் கீழிருந்தும்//

அருமை ரிஷான்.

Gowripriya said...

மிக அருமை..
:)

ம.தி.சுதா said...

அருமையான வரிகள்...

பூங்குழலி said...

எனினும் மாலையிலுதிரும்
பூக்கள் விசித்தழுகின்றன
மேடை நிழல்களிலிருந்தும்
பூத்த மரங்களின் கீழிருந்தும்


அருமை ரிஷான் ...( இணையம் பக்கமே அதிகம் வருவதில்லை போலிருக்கிறது ? )

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//அருமை ரிஷான்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் கௌரிப்ரியா,

//மிக அருமை..
:)//

:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி..நலமா?

M.Rishan Shareef said...

அன்பின் ம.தி.சுதா,

//அருமையான வரிகள்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் ஜோன் தனுஷன்,

//நல்ல பதிவு//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//
அருமை ரிஷான் ...( இணையம் பக்கமே அதிகம் வருவதில்லை போலிருக்கிறது ? )//

வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோதரி.
வேலைப்பளு அதிகமென்பதால் இணையம் வர நேரம் வாய்க்கவில்லை. இனிமேல் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன் சகோதரி. நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?