Thursday, January 19, 2012

நான் குருடனான கதை

தேவ வனங்களின் வண்ணங்களில் தோய்த்து
மொழிகளையொன்றாக்கி வரைந்திட்ட ஓவியத்துக்குக்
கண்களற்றுப் போயிற்று
காலம் நகரும் கணங்களின் ஓசையைக் கேட்கக்
காதுகளற்றுப் போயிற்று
காணச் சகித்திடா அவலட்சணத்தை
தன்னுள் கொண்டது நவீனத்துக்குள் புதைந்தது
புதிதாக மின்னக் கூடுமென்ற நம்பிக்கையோடு

யாரும் காணாச் சித்திரத்தின் உதடுகளில்
வண்ணங்கள் முணுமுணுத்துக் கண்களைத் தேடிற்று
எங்கும் தன் விம்பங்களைப் பொருத்தியபடி
திசைகள் தோறும் ஓடியது உயிரற்ற ஓவியம்
எனது விழிகளை உருவிக்கொண்டு

- எம்.ரிஷான் ஷெரீப்
13122008

நன்றி
# வடக்குவாசல் இதழ் - நவம்பர், 2012
# திண்ணை

3 comments:

பத்மநாபபுரம் அரவிந்தன் said...

ரிஷான்,

நல்ல கவிதை… ” வண்ணங்கள் முணுமுணுத்துக் கண்களைத் தேடிற்று
எங்கும் தன் விம்பங்களைப் பொருத்தியபடி

திசைகள் தோறும் ஓடியது உயிரற்ற ஓவியம்

எனது விழிகளை உருவிக்கொண்டு” மிகவும் பிடித்தது.

- பத்மநாபபுரம் அரவிந்தன்

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் ரத்னவேல்,

//அருமை.
வாழ்த்துகள்.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பத்மநாபபுரம் அரவிந்தன்,

//ரிஷான்,

நல்ல கவிதை… ” வண்ணங்கள் முணுமுணுத்துக் கண்களைத் தேடிற்று
எங்கும் தன் விம்பங்களைப் பொருத்தியபடி

திசைகள் தோறும் ஓடியது உயிரற்ற ஓவியம்

எனது விழிகளை உருவிக்கொண்டு” மிகவும் பிடித்தது.//

கருத்துக்கு நன்றி நண்பரே !