Thursday, November 8, 2012

வீழ்தலின் நிழல்



ஒரு கோட்டினைப் போலவும்
பூதாகரமானதாகவும் மாறி மாறி
எதிரில் விழுமது
ஒளி சூழ்ந்த
உயரத்திலிருந்து குதிக்கும்போது
கூடவே வந்தது
பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து
ஒரு புள்ளியில் ஐக்கியமாகி
ஒன்றாய்க் குவிந்ததும்
உயிரைப் போல
காணாமல்போன நிழலில்
குருதியொட்டவே இல்லை



- எம். ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்மை
# திண்ணை
# நவீன விருட்சம்

6 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்

http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html

நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html) சென்று பார்க்கவும்... நன்றி...

பூங்குழலி said...

உங்கள் கவிதைகளின் இறுதி வரிகள் முகத்தில் அறைந்தார்போலே இருக்கும் ..அது போல இதுவும்

M.Rishan Shareef said...

அன்பின் முனைவர்.இரா.குணசீலன்,

மிகவும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் தனபாலன்,

பார்த்தேன் நண்பரே.
தகவலுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//உங்கள் கவிதைகளின் இறுதி வரிகள் முகத்தில் அறைந்தார்போலே இருக்கும் ..அது போல இதுவும் //

சில சமயம் வலிகள் எழுத்தில் வந்து விழும்போது அவ்வாறான தோற்றம் காட்டும். :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புச் சகோதரி !