Wednesday, January 1, 2014

இடையனின் கால்நடை


காலை வெயில் அலைமோதும்
பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில்
மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை

ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும்
தனித்திருந்த கொட்டகையின் கூரைகள்
பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை
வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும்

வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய
கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம்
உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது
எங்கும் தப்பிப் போய்விடாது எனினும்
வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ
அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது

மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல முடியாத அடைமழை நாட்களில்
எங்கெங்கோ அலைந்து
தீனிச் செடி குலைகளை எடுத்து வருவாய்
உன் தலை தடவலில் உயிர்த்திருக்கும் அதனுலகம்
தீனிக்கென நீ வைத்திடும் எல்லாவற்றையும்
அன்பென எண்ணிச் சுவைக்கும்
அதட்டலுக்குப் பயந்து அடிபணியும் - பிறகும்
அகலாதிருக்க இவ் வாழ்வும்
உன் பரிவும் நிலைத்திடக் கனவு காணும்

தசை, தோல், எலும்பென கூறிட்டுப் பணம்பார்க்க
அதன் எடை கூடும் காலமெண்ணிக் காத்திருக்கும் உன்
கத்தியைக் கூர் தீட்டும் நாளில்
அதன் மேனியிலிருந்து எழக் கூடும்
விடிகாலைத் தாரகையோடு
பசும்புல்வெளியில் உலர்ந்த உன் பாசத்தின் வாசம்

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ், அக்டோபர் 2013நவீன விருட்சம்திண்ணைபதிவுகள், காற்றுவெளி இதழ்

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அன்புடன் DD

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் திண்டுக்கல் தனபாலன்,

வருகைக்கும், கருத்துக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

zaheernm said...

Super.... Kadaisi varigal silirkavaithadhu... Vazhthukal anna...

zaheernm said...

Super.... Kadaisi varigal silirkavaithadhu... Vazhthukal anna...

zaheernm said...

Superb.... Kadaisi varigal silirkavaithadhu..... Vazhthukal anna..

Ramani S said...

தசை, தோல், எலும்பென கூறிட்டுப் பணம்பார்க்க
அதன் எடை கூடும் காலமெண்ணிக் காத்திருக்கும் உன்
கத்தியைக் கூர் தீட்டும் நாளில்
அதன் மேனியிலிருந்து எழக் கூடும்
விடிகாலைத் தாரகையோடு
பசும்புல்வெளியில் உலர்ந்த உன் பாசத்தின் வாசம்

ஆழமான பொருள் கொண்ட
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

ஷைலஜா said...

ரிஷான் எந்த கிரஹத்துலபோய் வசிக்கிறீங்க என் சின்னத்தம்பியே ஏன் இப்படி
மின்னல்போல வரீங்க ரிஷூ
//
உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது
எங்கும் தப்பிப் போய்விடாது எனினும்
வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ
அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது//

ம்ம் கவிதையில் பதில் இருக்கு கவிஞரே மிக்க நன்றி:)

பவளசங்கரி said...

அருமை. வாழ்த்துகள் திரு ரிஷான் ஷெரீப்.

அன்புடன்
பவளா

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஸஹீர்,

//Super.... Kadaisi varigal silirkavaithadhu... Vazhthukal anna...//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் திரு.ரமணி,

//ஆழமான பொருள் கொண்ட
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

பூங்குழலி said...

ரிஷான் ,அழகான புல்வெளியை கண்முன் விரியவிட்டு ,கத்தி முனையில் முடித்திருக்கிறீர்கள் வழமை போலவே ...அருமையான கவிதை ரிஷான் .....வழமை போலவே தான்

Chellappa Yagyaswamy said...

நெஞ்சைத்தொடும் கருத்தாழமுள்ள கவிதை. பாராட்டுக்கள் நண்பரே!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சகோதரி ஷைலஜா,

//ரிஷான் எந்த கிரஹத்துலபோய் வசிக்கிறீங்க என் சின்னத்தம்பியே ஏன் இப்படி
மின்னல்போல வரீங்க ரிஷூ
//
உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது
எங்கும் தப்பிப் போய்விடாது எனினும்
வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ
அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது//

ம்ம் கவிதையில் பதில் இருக்கு கவிஞரே மிக்க நன்றி:)//

இனி தொடர்ந்து வருவேன். :-)கருத்துக்கு நன்றி சகோதரி !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பூங்குழலி,

//ரிஷான் ,அழகான புல்வெளியை கண்முன் விரியவிட்டு ,கத்தி முனையில் முடித்திருக்கிறீர்கள் வழமை போலவே ...அருமையான கவிதை ரிஷான் .....வழமை போலவே தான் //

:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நண்பர் Chellappa Yagyaswamy,

// நெஞ்சைத்தொடும் கருத்தாழமுள்ள கவிதை. பாராட்டுக்கள் நண்பரே!//

வருகைக்கும், கருத்துக்கும், அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !