எதனாலும் நிற்காமலும்
எதுவாகவும் ஆகாமலும்
எப்படிப் போகிறது வாழ்க்கை...?
சடுதியாய்ச் சந்திப்புகள் - குருதிச்
சகதியாய் விபத்துகள்,
எவராலும் தடுக்க முடியாதவையாக
அன்றாடம் நிகழ்கின்றன.
விரும்பியபடியே வாழ்க்கையெனினும்,
வாழ்க்கையின் மௌன ஓவியத்தை
விரும்பிய நிறங்களைக் கொண்டு
வரைய முடிவதேயில்லை !
வாழ்க்கை போகிறது
அதனுடனே நானும்...
சிலவற்றைப் பெற்றுக் கொண்டும்...
நிறைய இழந்து கொண்டும்...
- எம்.ரிஷான் ஷெரீப் , மாவனல்லை, இலங்கை.
9 comments:
your poems are simply superb and touching the inner soul. All the best and god blesw you
Hi rishan kavithaigal migavum arumai. vazhthukkal. Rajan, iniyathamizhoosai. Im also in doha qatar and im on vacation now
மிக நன்றிகள் ராஜன்,மற்றும் பதிந்து சென்ற மற்ற நண்பருக்கும்.
ரிஸான்!
எனது வாழ்க்கையை பிரதிபலிக்கிறீர்கள் நீங்கள். நான் என்னேரமும் ஏதோ ஒரு வெறுமையை உணர்கிறேன். ஏதோ நான் அர்த்தமற்ற கவிதை போல...
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்
கண்ணன்
எதனாலும் நிற்காமலும்
எதுவாகவும் ஆகாமலும்
எப்படிப் போகிறது வாழ்க்கை...?
//
அருமையான வரிகள் ரிஷான்.
//Kannan said...
ரிஸான்!
எனது வாழ்க்கையை பிரதிபலிக்கிறீர்கள் நீங்கள். நான் என்னேரமும் ஏதோ ஒரு வெறுமையை உணர்கிறேன். ஏதோ நான் அர்த்தமற்ற கவிதை போல...//
அன்பின் கண்ணன்,
நீங்கள் மட்டுமல்ல நண்பரே.
நிறையப்பேர் இந்தத் தனிமை நோயை வாழ்நாளில் ஒரு முறையாவது அனுபவிக்கின்றனர்.
நீங்கள் ஒரு போது அர்த்தமற்ற கவிதையல்ல நண்பரே.
அனைத்து இன்பங்களும் உங்களைச் சூழக் காத்திருக்கின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நிர்ஷன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
எனது வாழ்க்கையை பிரதிபலிக்கிறீர்கள் நீங்கள்..
//எதனாலும் நிற்காமலும்
எதுவாகவும் ஆகாமலும்
எப்படிப் போகிறது வாழ்க்கை...?
சடுதியாய்ச் சந்திப்புகள் - குருதிச்
சகதியாய் விபத்துகள்,
எவராலும் தடுக்க முடியாதவையாக
அன்றாடம் நிகழ்கின்றன.
விரும்பியபடியே வாழ்க்கையெனினும்,
வாழ்க்கையின் மௌன ஓவியத்தை
விரும்பிய நிறங்களைக் கொண்டு
வரைய முடிவதேயில்லை !
வாழ்க்கை போகிறது
அதனுடனே நானும்...
சிலவற்றைப் பெற்றுக் கொண்டும்...
நிறைய இழந்து கொண்டும்...//
அன்பின் சரவணகுமார்,
உங்கள் முதல்வருகை எனக்கு மகிழ்வினைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment