Monday, September 1, 2008

கனவு முகங்களில் தொலையும் இரவு !

வெள்ளைப் பூனையின் மென்மயிரென
இலகுவாக உதிர்ந்துவிடுகிறதா என்ன
என் நிராசைக் கனவுகளின் நீட்சி ?

ஒரு சவத்தைப் பின்பற்றுகின்றது
என் பாதங்களின் அடிச்சுவடு ;
பின்னால் வருகின்றாயென்பதை
உணர்ந்து நடந்து மண்டியிட்டு
பிணத்துக்காகப் பிரார்த்திக்கையில்
சவப்பெட்டியில் படுத்திருப்பதுவும்
நீதானெனக் கண்டதிர்ந்து
துயில் கலைகிறேன் !

கனவுகளுக்குள்ளான போலிமுகத்தின்
புருவத் தீற்றலைக் கண்டறியும்
சாஸ்திரங்களைக் கற்றவனல்ல நான் ;
எனவே சொல்...
பிணத்தின் முகம்தனை
எவ்வாறு சூடிக் கொண்டாய் ?
உடலசையா உறக்கத்தினை
எங்கிருந்து கற்றறிந்தாய் ?

உனது நினைவுகளைச் சேர்த்துக்
கொழுவி வைத்திருக்கிறேன்,
ஒவ்வொரு கண முகங்களிலும்
வித்தியாசமாகவே தெரிகிறாய் !

கண்ணாடி விம்பம்தனில்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் ;
நிராதரவாகிப் போன
நந்தவனத்து மான்குட்டியொன்றின்
மருண்ட பார்வைகளைத் தாங்கிக்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் !

அந்த விழிகளை மூடித் துயிலுறுமிரவினில்
இன்றெந்த முகத்தைத் தாங்கிக்
கனவினில் வருவாயோ ?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

29 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

//கனவுகளுக்குள்ளான போலிமுகத்தின்
புருவத் தீற்றலைக் கண்டறியும்
சாஸ்திரங்களைக் கற்றவனல்ல நான்//

//உனது நினைவுகளைச் சேர்த்துக்
கொழுவி வைத்திருக்கிறேன்,
ஒவ்வொரு கண முகங்களிலும்
வித்தியாசமாகவே தெரிகிறாய் !//

நல்லதொரு கற்பனை ரிஷான்.
உங்கள் எழுத்தின் ஆற்றல் வியக்கவைக்கிறது.

Kavinaya said...

அருமையான சொல்லாற்றல் ரிஷான். உங்களுக்கு வார்த்தைகள் வந்து விழும் விதம் எப்போதும் வியக்க வைக்கும். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

MSK / Saravana said...

எப்போதும் போல் மிக மிக அருமையான மனதிற்கு நெருக்கமான கவிதை..

MSK / Saravana said...

//கவிநயா said...

அருமையான சொல்லாற்றல் ரிஷான். உங்களுக்கு வார்த்தைகள் வந்து விழும் விதம் எப்போதும் வியக்க வைக்கும். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.//

வழிமொழிகிறேன்..

Anonymous said...

anpin nirshan

pls visit

www.vimbam.blospot.com

and drop your comments

anpudan

apuchchi

M.Rishan Shareef said...

அன்பின் நிர்ஷன்,

//நல்லதொரு கற்பனை ரிஷான்.
உங்கள் எழுத்தின் ஆற்றல் வியக்கவைக்கிறது.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//அருமையான சொல்லாற்றல் ரிஷான். உங்களுக்கு வார்த்தைகள் வந்து விழும் விதம் எப்போதும் வியக்க வைக்கும். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.//

வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

//எப்போதும் போல் மிக மிக அருமையான மனதிற்கு நெருக்கமான கவிதை..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

/// Saravana Kumar MSK said...

//கவிநயா said...

அருமையான சொல்லாற்றல் ரிஷான். உங்களுக்கு வார்த்தைகள் வந்து விழும் விதம் எப்போதும் வியக்க வைக்கும். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.//

வழிமொழிகிறேன்..///

உங்கள் கருத்தும் என்னை மகிழ்விக்கிறது சரவணகுமார்.
நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் அப்புச்சி,

உங்கள் கவிதைகள் கண்டேன்.நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே :)

Sakthy said...

கவிதை மிக நன்று ரிஷான்,
உங்கள் வார்த்தைகளின் நளினம் அபாரம்.....அழகான வரிகள்
வாழ்த்துக்கள் .

ஃபஹீமாஜஹான் said...

அன்பின் ரிஷான்

சிக்கலான கவிதைப் பொருளைக் கொண்டு வரிகளை நகர்த்தியிருக்கிறீர்கள்.

இந்தக் கனவின் பொருளைப் போலவே கவிதையின் பொருளையும் வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்க முடிகிறது.

இன்னுமின்னும் எழுதுங்கள்

கோகுலன் said...

அன்பின் ரிஷான்,

அருமையான வரிகள்.. சொற்பிரயோகம் மிக மிக நன்று..
கவிதையின் பாடுபொருளில் உங்களின் அதீத அன்பு புலப்படுகிறது..

கனவுகளின் நீட்சி மறைந்து தாயின் அரவணைப்பையொத்த கரங்கள் விரைவில் கிடைக்க பிரார்த்திக்கிறேன்!

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//கவிதை மிக நன்று ரிஷான்,
உங்கள் வார்த்தைகளின் நளினம் அபாரம்.....அழகான வரிகள்
வாழ்த்துக்கள் .//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் பஹீமாஜஹான்,

//இன்னுமின்னும் எழுதுங்கள்//

நிச்சயமாக சகோதரி. உங்கள் அன்பும், ஆதரவும், ஊக்கமும் தொடர்ந்து தர வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

//அருமையான வரிகள்.. சொற்பிரயோகம் மிக மிக நன்று..
கவிதையின் பாடுபொருளில் உங்களின் அதீத அன்பு புலப்படுகிறது.. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

ராமலக்ஷ்மி said...

//வெள்ளைப் பூனையின் மென்மயிரென
இலகுவாக உதிர்ந்துவிடுகிறதா என்ன
என் நிராசைக் கனவுகளின் நீட்சி ?//

ஆரம்ப வரிகளே அழுத்தமாகச் சொல்லி விட்டனவே உள்ளத்தின் உணர்வுகள்தனை..

நினைவுகளின் தாக்கத்தால் நீளுகின்ற இரவுகளைச் சொல்லி முடித்திருக்கும் விதமும் அருமை ரிஷான்!

//அந்த விழிகளை மூடித் துயிலுறுமிரவினில்
இன்றெந்த முகத்தைத் தாங்கிக்
கனவினில் வருவாயோ ?//

வாழ்த்துக்கள்!

Divya said...

உங்கள் எழுத்து ஆற்றல் ஒவ்வொருமுறையும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது,
எங்கிருந்து இத்தனை அழகான வார்த்தைகள் கற்றுக்கொண்டீர்கள் ரிஷான்??

மனமார்ந்த பாராட்டுக்கள்!!

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

நீண்ட கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

வருகைக்கும் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் நன்றி தோழி :)

thamizhparavai said...

இக்கவிதை மயிலிறகு போல் வருடினாலும்,வருடும் போதெல்லாம் பாரத்தை ஏற்றி வைத்தது....
வாழ்த்துக்கள் ரிஷான்...

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்ப்பறவை,

//இக்கவிதை மயிலிறகு போல் வருடினாலும்,வருடும் போதெல்லாம் பாரத்தை ஏற்றி வைத்தது....
வாழ்த்துக்கள் ரிஷான்...//

அழகான வரிகளில் கருத்து சொல்கிறீர்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

hai from india,'23rd comment to your blog like vadivelu film 23 -m pulikesi.... you have solputhi and suyaputhi take it in the right spirit. your opt photo with poem really takes it turn according to the poetic vibration and very much eager to receive further

M.Rishan Shareef said...

அன்பின் நாரதர்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Thenammai Lakshmanan said...

உங்கள் கவிதை மனதில்மிதந்து கொண்டிருக்கிறது ரிஷான்..

Jehana Mohamed Jareer said...

"இவ்வளவு அழகாக ,ஆழமாக எழுத முடியுமா என்ற வியப்பு எழுந்தது. ...இவ்வளவு எழுத நிச்சயம் திறமை வேணும்,,,,.மென்மேலும் வளர வாழ்த்துக்கல் ..."

M.Rishan Shareef said...

அன்பின் தேனம்மை லக்ஷ்மணன்,

//உங்கள் கவிதை மனதில்மிதந்து கொண்டிருக்கிறது ரிஷான்..//

எனது கவிதைத் தளத்திற்கான உங்கள் முதல்வருகை மகிழச் செய்கிறது. உங்கள் வருகை நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் Jehana Mohamed Jareer,

உங்கள் கருத்து பெரிதும் ஊக்கமளிக்கிறது.
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :-)

Anonymous said...

really amezing rishan ... your words are always astonishing me.
best wises ma...
ur's snehidhi
sakthy rasiah