துரோகத்தைப் போர்த்தி வந்தது
பொய்யானதொரு நேசம்,
அதனிசை மிகப் பிடித்தமானதாகவும்,
சாத்தியப்படாச் சுவைகளைப் பூசி வந்ததாகவும்
இருந்ததைக் கவனித்தபோதே
சுதாகரித்திருக்க வேண்டும் !
நீர்வீழ்ச்சிக்குள் தூண்டிலிட்டுக் காத்திருந்த
மடத்தனத்தை என்சொல்ல ?
நேசங்களின் மையப்புள்ளி
தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,
இணையமும் வாழ்க்கையும்
பேருவகையைத் தருவதாகத் தோன்றிட
எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !
வார்த்தைகளால்
பார்த்துப் பார்த்துக் கட்டிய
அன்பின் மாளிகையை உடைக்க
கலவரத்தைக் காலத்தின் கரங்கள்
பொத்திவந்தன ;
ஒரு நெஞ்சம் ஏமாந்து நின்றநேரம்
பிளந்து உள்ளே எறிந்திட்டன !
மறு நெஞ்சம் சிரித்தவாறே
அதனைப்பார்த்து ரசித்திருந்தது
சிரித்த அதன் பற்களிடையே
முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்
சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !
செத்துப்போகிறேன் ;
நாளைய உதடுகளில் நல்லதாகவோ தீயதாகவோ
என் பெயர் உச்சரிக்கப்படக் கூடும்..
உடலைப் புதைகுழி
முற்றாகத் தின்றுமுடித்ததன் பிற்பாடு
அதுவும் மறக்கடிக்கப்படலாம் !
இனிமேலும்,
துரோகத்தைப் போர்த்திப்
பொய்யானதொரு நேசம் வரும்பொழுதின்
இசையில் மயங்காமலும்,
அதன் சுவைகளில் உறையாமலும்
கவனமாக இருப்பீராக !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
17 comments:
Nice poem!
But I don't agree with the fact that Suicide is being romanticised in this piece of work.
Suicide is not sexy, it's absolutely stupid!
If you were dumped by your lover, find a new1, there are plenty of women/men in this world to choose!
//இருந்ததைக் கவனித்தபோதே
சுதாகரித்திருக்க வேண்டும் !//
//இசையில் மயங்காமலும்,
அதன் சுவைகளில் உறையாமலும்
கவனமாக இருப்பீராக !//
ரொம்ப நல்லா இருக்கு கவிதை..
Hi Rishan,
Congrats!
Your story titled 'எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: ஒரு தற்கொலைக் குறிப்பு !' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th September 2008 03:49:18 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/4445
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
அருமையான வரிகள்
தொடருங்கள்
கவிதையாய் நன்றாய் இருக்கிறது.. கருத்து மனதை வலிக்கச்செய்கிறது..
தீராத வன்மங்களை விட்டுச்செல்வதில் துரோகத்திற்கு நிகர் துரோகம்தான். ஞாபகங்களைக் கிளறிய கவிதை ரிஷான்.
அன்பின் அனானி,
கவிதையைக் கவிதையாக மட்டும் பார்க்கவும். இது என் வாழ்க்கைக் குறிப்பல்ல. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சரவணகுமார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சுபாஷ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கோகுலன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் rvc,
//தீராத வன்மங்களை விட்டுச்செல்வதில் துரோகத்திற்கு நிகர் துரோகம்தான். //
தீராத வன்மங்கள் மட்டுமல்ல.
காலமாற்றா மாறாத் தழும்புகளையும் தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
http://blogintamil.blogspot.com/2008/09/blog-post_17.html
ஒரு எட்டு பார்த்திடுங்க…
அன்பின் விக்னேஷ்வரன்,
//http://blogintamil.blogspot.com/2008/09/blog-post_17.html
ஒரு எட்டு பார்த்திடுங்க…//
பார்த்தேன்.மகிழ்ந்தேன்.
எனது கவிதைகளின் இணைப்பையும் அங்கே சேர்த்தமைக்கு நன்றி நண்பரே :)
ரிஷான் ஷெரீப் உங்கள் தளத்துக்கு அடிக்கடி வந்துள்ளேன், ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை, காத்திரமான கவிதைகளைப் பிரசவிப்பதால் என்னுடைய http://www.kalamm2.blogspot.com/ எனும் "இலக்கியமேட்டில்" உங்களது வலைப்பூவின் சுட்டியையும் இணைத்துள்ளேன்.
பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
அன்பின் ஈழவன்,
அழகான பெயர் உங்களுடையது.
உங்கள் வருகையும், சுமந்து வந்த செய்தியும் மகிழ்வினைத் தருகிறது.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
"நேசங்களின் மையப்புள்ளி
தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,
இணையமும் வாழ்க்கையும்
பேருவகையைத் தருவதாகத் தோன்றிட
எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !"
ஏமாற்றம் என்பது எல்லாரும் வாழ்வில் எதிர்கொள்கின்ற ஒன்று . ஆனால் இங்கு எமாற்றமே ஒரு அழ்கிய கவிதை கவிதையாக
அன்பின் தியாகு,
//ஏமாற்றம் என்பது எல்லாரும் வாழ்வில் எதிர்கொள்கின்ற ஒன்று . ஆனால் இங்கு எமாற்றமே ஒரு அழகிய கவிதை கவிதையாக //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment