நான் பசியிலிருக்கிறேன்
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றா.
உனக்குத் தெரிந்த கல்நெஞ்சுக்காரன் நீ
எனது கூடாரங்களில் விளக்கெரித்தாய்
தீப்பற்றியது எனதெளிய இருப்பிடம்
சற்று நகர் - அனல் தெறிக்கும்
என் கண்களிலிருந்தும்
வாகை சூழ்ந்த பார்வை
வஞ்சனை சூழ்ந்த நெஞ்சு
நெஞ்சின் மேலொரு மழலை
யார் கண்டது
நாளை அதுவுமுனக்கு இரையாகலாம்
இப்பொழுதைப் போல அப்பொழுதும்
அப்பாவியாக நடித்தபடியிருப்பாய்
ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாயுனக்கு
ஆயிரத்தெட்டுப் பெயர்கள்
அதிலொன்றைத்தான் - என்னை
உருகி உருகி அழைக்கவைத்தாய்
எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்
கானகங்கள் பூத்திருக்கும்
வானம் சடாரெனப் பொழிந்திருக்கும்
தேசாந்திரிகளைத் தேடிப் பாசங்கள் நகர்ந்திருக்கும்
கபடங்களைச் சுற்றிச் சுற்றி இப்பொழுது
யாருக்கெல்லாம் பகிர்ந்தபடியிருக்கின்றாய் ?
உன் மிதியடியாக மட்டும்
என் பூக்களை விரித்திருக்கிறாய்
நான் பசியிலிருக்கிறேன்
பூக்களை இழந்த செடியின் மௌனத்தோடு
உனது அல்லது உன்னைப்பற்றிய
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றாப் பொழுதொன்றில்
ஆமாம்
தனித்திருக்கிறேன்..!
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
10 comments:
//ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாயுனக்கு
ஆயிரத்தெட்டுப் பெயர்கள்
அதிலொன்றைத்தான் - என்னை
உருகி உருகி அழைக்கவைத்தாய்
எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்
கானகங்கள் பூத்திருக்கும்
வானம் சடாரெனப் பொழிந்திருக்கும்
தேசாந்திரிகளைத் தேடிப் பாசங்கள் நகர்ந்திருக்கும்
கபடங்களைச் சுற்றிச் சுற்றி இப்பொழுது
யாருக்கெல்லாம் பகிர்ந்தபடியிருக்கின்றாய் ?
உன் மிதியடியாக மட்டும்
என் பூக்களை விரித்திருக்கிறாய்
//
இந்த வரிகளை பெரிதும் நேசிக்கிறேன்.
கவிதை அருமை...
//நான் பசியிலிருக்கிறேன்
பூக்களை இழந்த செடியின் மௌனத்தோடு
உனது அல்லது உன்னைப்பற்றிய
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றாப் பொழுதொன்றில்
ஆமாம்
தனித்திருக்கிறேன்..!//
அட.. பின்னீட்டீங்க போங்க..
அருமையா இருக்கு கவிதை..
/ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாயுனக்கு
ஆயிரத்தெட்டுப் பெயர்கள்
அதிலொன்றைத்தான் - என்னை
உருகி உருகி அழைக்கவைத்தாய்
எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்
கானகங்கள் பூத்திருக்கும்/
/உன் மிதியடியாக மட்டும்
என் பூக்களை விரித்திருக்கிறாய்........../
/நான் பசியிலிருக்கிறேன்
பூக்களை இழந்த செடியின் மௌனத்தோடு
உனது அல்லது உன்னைப்பற்றிய
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றாப் பொழுதொன்றில்
ஆமாம்
தனித்திருக்கிறேன்..!/
அருமையான வரிகள் ...
கொஞ்சம் புரிந்தும் கொஞ்சம் புரியாமலும் ....
எப்போதும் போலவே அழகு ரிஷான் உங்கள் கவிதை ...
வாழ்த்துக்கள்
//எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்
கானகங்கள் பூத்திருக்கும்
வானம் சடாரெனப் பொழிந்திருக்கும்
தேசாந்திரிகளைத் தேடிப் பாசங்கள் நகர்ந்திருக்கும்//
அருமை ரிஷு.
//பூக்களை இழந்த செடியின் மௌனத்தோடு//
செடிகள் பூக்களை இழந்தாலும் பூக்கள் மீண்டும் மீண்டும் பூக்கும். கவலை வேண்டாம் :)
அன்பின் நிர்ஷன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அன்பின் நிமல்,
உங்கள் முதல்வருகை நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சரவணகுமார்,
//அட.. பின்னீட்டீங்க போங்க..
அருமையா இருக்கு கவிதை..//
உங்கள் தொடர்வருகையும், கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சக்தி,
//அருமையான வரிகள் ...
கொஞ்சம் புரிந்தும் கொஞ்சம் புரியாமலும் ....
எப்போதும் போலவே அழகு ரிஷான் உங்கள் கவிதை ...
வாழ்த்துக்கள் //
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)
அன்பின் கவிநயா,
//செடிகள் பூக்களை இழந்தாலும் பூக்கள் மீண்டும் மீண்டும் பூக்கும். கவலை வேண்டாம் :)//
காற்றடிக்க,வேர் காய,மரம் வாடப் பூக்கள் உதிர்கிறதே :(
வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி சகோதரி :)
Post a Comment