நீர்ச்சலனத்திற்கு ஏதுவான
ஒரு கூழாங்கல்லைப் போல
உருண்டு திரண்டு
பொலிவாகிவிட்டது இதயம்
திரவப்பரப்பினைத் தொட்டகலும்
நாணல்களுக்குத் தெரிந்திருக்கலாம்
அதிலொரு சிறு சிற்பம் வடிக்கும்
நோக்குடன் நீ வருகிறாயென
நீர் மாறி, நிறம் மாறி
சிற்பமாகலாம் இவ்விதயம் - அன்றி
சிதறியும் போய்விடலாம்
உனக்கென்ன
ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு
சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்...!
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
15 comments:
நல்ல கவிதை..
முழுமை அனுபவம் பெறாத சிற்பியின் கையில் சிற்பமாகாமல் உடைந்து போகும் கற்கள் அதிகம்தான்.. (வாழ்க்கை) கற்கும் படலத்தில் அதை தவிர்க்க முடியாதவையாகின்றன..
என்ன ஒன்று.. உடைந்த இதயங்களை அன்பு மீண்டும் ஒட்டி சிற்பமாக்கலாம் எந்நேரமும்..
//உனக்கென்ன
ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு
சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்...!//
நல்ல வரிகள்..
கவிதை நன்று. என்ன செய்வது?உருண்டு திரண்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கூழாங்கற்களால் அறிய முடிவதில்லை, தன்னை உருவாக்கும் சிற்பிக்கும் உடைக்கும் சிற்பிக்கும் உள்ள வித்தியாசத்தை.
அழகான வரிகள்..
எப்போதும் போலவே..சகோதரனின் பேனா வார்த்தைகளை அழகாகவே வடித்துள்ளது
//நீர் மாறி, நிறம் மாறி
சிற்பமாகலாம் இவ்விதயம் - அன்றி
சிதறியும் போய்விடலாம்//
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
//சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்//
நிதர்சனம் தான்.
தலைப்பே பிடித்துபோய்விட்டது ரிஷான். :)
அழகான கவிதை.. மனசுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது..
அன்பின் கோகுலன்,
//என்ன ஒன்று.. உடைந்த இதயங்களை அன்பு மீண்டும் ஒட்டி சிற்பமாக்கலாம் எந்நேரமும்..//
ஆமாம். அன்பு மீளவும் ஒட்ட வைக்கலாம். காலமும் ஆற்றா உடைசல்களையும் வெடிப்புக்களையும் என் செய்வது?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அன்பின் கவிநயா,
//கவிதை நன்று. என்ன செய்வது?உருண்டு திரண்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கூழாங்கற்களால் அறிய முடிவதில்லை, தன்னை உருவாக்கும் சிற்பிக்கும் உடைக்கும் சிற்பிக்கும் உள்ள வித்தியாசத்தை.//
ஆமாம்..ஆனால் கற்களின் வலியை சிற்பிகள் உணர்வதில்லையே :(
அன்பின் கவிநயா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.
அன்பின் தூயா,
//அழகான வரிகள்..
எப்போதும் போலவே..சகோதரனின் பேனா வார்த்தைகளை அழகாகவே வடித்துள்ளது//
நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். எப்படியிருக்கிறீர்கள் சகோதரி?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் ராமலக்ஷ்மி,
//அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//
வருகைக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பா :)
அன்பின் குட்டிச் செல்வன்,
//நிதர்சனம் தான்.
தலைப்பே பிடித்துபோய்விட்டது ரிஷான். :)//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அன்பின் சரவணகுமார்,
//அழகான கவிதை.. மனசுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது..//
மனதில் உணர்ச்சிகள் வரிகளாகியிருக்கின்றன. ஒவ்வொரு மனதும் உணரக் கூடிய உணர்ச்சிகள். நீங்களும் உணர்ந்ததில் மகிழ்ச்சி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
//உனக்கென்ன
ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு
சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்...//
அழகான கவிதை ...
தெரிந்ததோ ,தெரியாமலோ வீசப்படும் கூழங்கல்லுக்கு தெரியாது இல்லையா உடைந்த இதயத்தின் வலி ...
அன்பின் சக்தி,
//அழகான கவிதை ...
தெரிந்ததோ ,தெரியாமலோ வீசப்படும் கூழங்கல்லுக்கு தெரியாது இல்லையா உடைந்த இதயத்தின் வலி ...//
சரிதான். ஆனால் தெரிந்தே வீசப்படும் கற்களால்தான் வலிக்க வலிக்க இதயங்கள் நொருங்குகின்றன அல்லவா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்னேகிதி :)
Post a Comment