Saturday, August 1, 2009
ஒலி மிகைத்த மழை
மின்னலைப் பார்த்திருக்கும்
விழிகளுக்குச் சலனமேதுமில்லை
அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன
தவளைகள் கத்தும் சத்தம்
மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது
இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை
இப்பெருத்த மழைக்கு
கூட்டுக் குஞ்சுகள் நனையுமா
சாரலடிக்கும் போது
கூட்டின் ஜன்னல்களை மூடிவிட
இறக்கைகளுக்கு இயலுமா
மிகுந்த ஒலியினைத் திருத்த
இயந்திரக் கரங்களோடு எவனும் வரவில்லை
இரைச்சல்கள் அப்படியே கேட்டபடியிருக்கின்றன
நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு
மனநிலையைக் கொண்டிருக்கிறாய்
இறுதிவரையிலும்
உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# கலைமுகம் இலக்கிய இதழ் - 49 (ஜனவரி - ஜூன், 2009)
# நவீன விருட்சம்
# திண்ணை
Labels:
ஈழம்,
கலைமுகம்,
கவிதை,
சமூகம்,
சிறப்பு,
திண்ணை,
நவீன விருட்சம்,
நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
Hi
Fantastic.
எங்களுடைய இணையத்தில் தாங்கள் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. மேலும் தங்களுடைய பிளோக்கினை எங்களுடைய தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி.
இப்படிக்கு
செய்திவலையம் குழுவினர
கவிதை நன்றாக இருக்கிறது ரிஷான்.
"கூட்டின் ஜன்னல்களை மூடிவிட
இறக்கைகளுக்கு இயலுமா"
இவ்வரிகளை மிகவும் ரசித்து படித்தேன்.
"மின்னலைப் பார்த்திருக்கும்
விழிகளுக்குச் சலனமேதுமில்லை
அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன"
"நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு
மனநிலையைக் கொண்டிருக்கிறாய்
இறுதிவரையிலும்
உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல"
இவை கவிதையின் உள்ளார்ந்த கருத்தைச் சொல்லுகின்றன.
ரிஷான்,
நித்தமும் இடி, மின்னல்கள் குமுறிக் கொண்டிருக்கும் ஒரு உள்ளத்தின் எதிரே எந்த ஆறுதல் வார்த்தைகளும் பயனளிக்கப் போவதில்லை தான்.
அருமை நண்பரே.........
நல்ல கவிதை ரிஷான்
அருமையான, நெகிழ வைத்த கவிதை
எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிற கவிதையில், இயல்பான வரிகளும், இயற்கையான வார்த்தைகளும் இரண்டறக் கலந்து இதயத்தில் இறங்க வைக்கின்றன...இனிமையாய்..ஒரு மிதமான வலியும் கூட!
தமிழன் வேணு
வாழ்த்துகள் ரிஷான்
வேறு வார்த்தைகள் இப்போதைக்கு இல்லை
நல்ல கவிதை அன்பின் நண்பரே ...
அன்புடன்
விஷ்ணு ..
வரையறைதாண்டிய அழகு வரிகள்... நன்று நண்பா....
கவிதை அருமை ரிஷான்!
நான் மிகவும் ரசித்த வரிகள்:
//இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை//
வாழ்த்துக்கள்!
//இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை..// reallly fantastic lines,,,
வாழ்த்துகள் ரிஷான்
காதலுக்கே உரித்தான நடை..மொழி வார்த்தைகள் கொண்டு வசப்படுத்தி இருக்கிறீர்கள் காதலை..அருமை அழகு அசத்தல் போதாது உங்கள் கவிதைகளை பாராட்ட.....ஆம் இளமை விகடனில் மட்டுமே உங்கள் கவிதைகளோடு பழக்கம்...வாழ்த்துக்கள் ரிஷான்....
மின்னலும் மழையும் சலனப்படுத்தா ஆழ்நிலை..
அதிலிருந்து மீட்டெடுக்க இயலா கையறு நிலை..
கனத்த கருவுக்குள்
இலைகள் பின்னீர் தெளிப்பதே பன்னீர் வர்ணிப்பும்
கூட்டு வாசல் வந்த சாரலுக்கு குஞ்சு இறகு தடுப்பாகுமா என்ற நுண்ணிய கவலையும்...
காவப்படாத என்ற சொல்வீச்சும்...
ரிஷானின் திறன் சொல்லும் மற்றொரு படைப்பு..
போர்மேகந்தான் கவிக்கருவோ என்னும் எண்ணம் சூழ்வதைத் தவிர்க்க இயலவில்லை..
You are rocking rishan ...
// ஒலி மிகைத்த மழை//
இப்படி கனத்த தலைப்புகளை எல்லாம் எங்கிருந்து பெறுகின்றீர்கள் ரிஷான்? தலைப்பே பல நூறு கதைகளைச்சொல்லும் போல் இருக்கிறதே...அருமை
//மின்னலைப் பார்த்திருக்கும்
விழிகளுக்குச் சலனமேதுமில்லை
அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன
தவளைகள் கத்தும் சத்தம்
மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது
இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை//
இயற்கையோடு பின்னிய வரிகள் இவை.
//மிகுந்த ஒலியினைத் திருத்த
இயந்திரக் கரங்களோடு எவனும் வரவில்லை
இரைச்சல்கள் அப்படியே கேட்டபடியிருக்கின்றன//
இயற்கையை மாற்றமுடியாது.......
//நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு
மனநிலையைக் கொண்டிருக்கிறாய்
இறுதிவரையிலும்
உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல//
ஒப்பீடு நன்றாகத்தான் இருக்கிறது.
மிகுந்த ரசனையும் ஏகப்பட்ட கற்பனை வளமும் உங்களிடம் கொட்டிக்கிடக்கிறது ரிஷான்.
வளர்க....வாழ்க!
இரைச்சல்கள் கேட்ட படியெ இருக்க - அமைதியை ஏற்படுத்த முடியமால் போனது
நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் ரிஷான்
//பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன //
ஆறு இலட்சம் நரம்புகளும் ஓரிடத்தில் நிலைகுத்திய நிலை.
மனக்கட்டு அறுபடும் அதி உச்ச டெசிபல் ஒலி.
மனிதக் காதுகள் உணர்ந்து கொள்ள இது மனித நாதம் அல்ல..
அதையும் தாண்டிப் புனிதமானது..
இயற்கை, இறைவன், ஞானி என வெகுசிலர் மட்டுமே உணரக் கூட அநாகத நாதமிது.
அந்த மிகைத்த ஒலியுடன் அவளுக்குள் அடை மழை.
மழைக்கான மேகங்கள்.. மேகங்களின் கருமைகள்.. கருமைகளைப் பூசிய நீர்மத் தூரிகைகள்..
எத்தனை பேருக்குத் தெரியும்.. தெரிந்தால்
அவள் வீட்டிலும் விளக்கெரியும்.
அசா(ச)த்திய கவிதைக்கு பாராட்டுகள் ரிஷான்!
அன்பின் ஷேக் தாவூத்,
//கவிதை நன்றாக இருக்கிறது ரிஷான்.
"கூட்டின் ஜன்னல்களை மூடிவிட
இறக்கைகளுக்கு இயலுமா"
இவ்வரிகளை மிகவும் ரசித்து படித்தேன்.//
உங்கள் தொடர்வருகை மகிழ்ச்சி தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
//"மின்னலைப் பார்த்திருக்கும்
விழிகளுக்குச் சலனமேதுமில்லை
அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன"
"நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு
மனநிலையைக் கொண்டிருக்கிறாய்
இறுதிவரையிலும்
உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல"
இவை கவிதையின் உள்ளார்ந்த கருத்தைச் சொல்லுகின்றன.
ரிஷான்,
நித்தமும் இடி, மின்னல்கள் குமுறிக் கொண்டிருக்கும் ஒரு உள்ளத்தின் எதிரே எந்த ஆறுதல் வார்த்தைகளும் பயனளிக்கப் போவதில்லை தான்.//
ஓர் நாள் காலம் மாறும். இடி, மின்னல்களற்ற, இதமாக மனம் நனைக்கும் சாரலாக, மழை தூறிப் போகும். வசந்த இசைகள் காற்றிலொலிக்கும். எங்கும் மகிழ்ச்சி மட்டும் வியாபித்துப் பரந்திருக்கும்.
அந் நாள் தொலைவில் இல்லை. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் ஸ்டாலின் பெலிக்ஸ்,
//அருமை நண்பரே.........//
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் பூங்குழலி,
//இரைச்சல்கள் அப்படியே கேட்டபடியிருக்கின்றன
உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல
நல்ல கவிதை ரிஷான் //
நன்றி சகோதரி !
அன்பின் சீதாலக்ஷ்மி அம்மா,
//அருமையான, நெகிழ வைத்த கவிதை//
நன்றி அம்மா !
அன்பின் வேணு,
//எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிற கவிதையில், இயல்பான வரிகளும், இயற்கையான வார்த்தைகளும் இரண்டறக் கலந்து இதயத்தில் இறங்க வைக்கின்றன...இனிமையாய்..ஒரு மிதமான வலியும் கூட!
தமிழன் வேணு//
நன்றி நண்பரே !!!
அன்பின் துரை,
//வாழ்த்துகள் ரிஷான்
வேறு வார்த்தைகள் இப்போதைக்கு இல்லை//
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !
அன்பின் விஷ்ணு,
//நல்ல கவிதை நண்பரே ...//
நன்றி நண்பரே !
அன்பின் முகமூடி,
//வரையறைதாண்டிய அழகு வரிகள்... நன்று நண்பா....//
நன்றி நண்பரே !
அன்பின் ஷிப்லி,
//You are rocking rishan ............//
நன்றி நண்பா !!
அன்பின் விஜி,
//ஒலி மிகைத்த மழை
இப்படி கனத்த தலைப்புகளை எல்லாம் எங்கிருந்து பெறுகின்றீர்கள் ரிஷான்? தலைப்பே பல நூறு கதைகளைச்சொல்லும் போல் இருக்கிறதே...அருமை//
:)))
மின்னலைப் பார்த்திருக்கும்
விழிகளுக்குச் சலனமேதுமில்லை
அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன
தவளைகள் கத்தும் சத்தம்
மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது
இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை
இயற்கையோடு பின்னிய வரிகள் இவை.
மிகுந்த ஒலியினைத் திருத்த
இயந்திரக் கரங்களோடு எவனும் வரவில்லை
இரைச்சல்கள் அப்படியே கேட்டபடியிருக்கின்றன
இயற்கையை மாற்றமுடியாது.......
நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு
மனநிலையைக் கொண்டிருக்கிறாய்
இறுதிவரையிலும்
உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல
ஒப்பீடு நன்றாகத்தான் இருக்கிறது.
மிகுந்த ரசனையும் ஏகப்பட்ட கற்பனை வளமும் உங்களிடம் கொட்டிக்கிடக்கிறது ரிஷான்.
வளர்க....வாழ்க!
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி !
அன்பின் ராமலக்ஷ்மி,
//கவிதை அருமை ரிஷான்!
நான் மிகவும் ரசித்த வரிகள்:
//இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை//
வாழ்த்துக்கள்!//
எனது ஒவ்வொரு பதிவுக்கும் வந்து, விமர்சித்து என்னை ஊக்கப்படுத்துகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !
அன்பின் சக்தி,
////இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை..// reallly fantastic lines,,,
வாழ்த்துகள் ரிஷான்//
நீண்ட நாட்களின் பிறகு உங்களைக் காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி !
அன்பின் நண்பர் சீனா,
//இரைச்சல்கள் கேட்ட படியெ இருக்க - அமைதியை ஏற்படுத்த முடியமால் போனது
நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் ரிஷான்//
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !
அன்பின் தமிழரசி,
//காதலுக்கே உரித்தான நடை..மொழி வார்த்தைகள் கொண்டு வசப்படுத்தி இருக்கிறீர்கள் காதலை..அருமை அழகு அசத்தல் போதாது உங்கள் கவிதைகளை பாராட்ட.....ஆம் இளமை விகடனில் மட்டுமே உங்கள் கவிதைகளோடு பழக்கம்...வாழ்த்துக்கள் ரிஷான்....//
உங்கள் முதல்வருகையும், கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !
அன்பின் இளசு,
//மின்னலும் மழையும் சலனப்படுத்தா ஆழ்நிலை..
அதிலிருந்து மீட்டெடுக்க இயலா கையறு நிலை..
கனத்த கருவுக்குள்
இலைகள் பின்னீர் தெளிப்பதே பன்னீர் வர்ணிப்பும்
கூட்டு வாசல் வந்த சாரலுக்கு குஞ்சு இறகு தடுப்பாகுமா என்ற நுண்ணிய கவலையும்...
காவப்படாத என்ற சொல்வீச்சும்...
ரிஷானின் திறன் சொல்லும் மற்றொரு படைப்பு..
போர்மேகந்தான் கவிக்கருவோ என்னும் எண்ணம் சூழ்வதைத் தவிர்க்க இயலவில்லை.. //
போரையும், நிர்க்கதியான நிலையையும் கவிதை சொல்லவேண்டுமென நினைத்தேன். புரிந்துகொண்டிருக்கிறீர்கள். :)
உங்கள் கருத்தினைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். நன்றி நண்பரே !
அன்பின் அமரன்,
//ஆறு இலட்சம் நரம்புகளும் ஓரிடத்தில் நிலைகுத்திய நிலை.
மனக்கட்டு அறுபடும் அதி உச்ச டெசிபல் ஒலி.
மனிதக் காதுகள் உணர்ந்து கொள்ள இது மனித நாதம் அல்ல..
அதையும் தாண்டிப் புனிதமானது..
இயற்கை, இறைவன், ஞானி என வெகுசிலர் மட்டுமே உணரக் கூட அநாகத நாதமிது.
அந்த மிகைத்த ஒலியுடன் அவளுக்குள் அடை மழை.
மழைக்கான மேகங்கள்.. மேகங்களின் கருமைகள்.. கருமைகளைப் பூசிய நீர்மத் தூரிகைகள்..
எத்தனை பேருக்குத் தெரியும்.. தெரிந்தால்
வீட்டில் எல்லாம் விளக்கெரியும்.
அசா(ச)த்திய கவிதை!! பாராட்டுகள் ரிஷான்! //
மிக அழகான வரிகளில் உங்கள் வரிகளைப் படிக்கவே பரவசமாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது. அழகான வார்த்தைகளில் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறீர்கள்.
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !
அருமையான சொற்களின் எடுத்தாளல் நண்பரே...!
பாராட்டுக்கள்...!
அன்பின் கலைவேந்தன்,
//அருமையான சொற்களின் எடுத்தாளல் நண்பரே...!
பாராட்டுக்கள்...! //
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !
மிக நல்ல பிளாக்
//மிக நல்ல பிளாக்//
நன்றி நண்பரே !
Post a Comment