Saturday, August 15, 2009

ஊழிக் காலம்


காய்ந்துபோன ஏரிகளில்
காலம் தன் முகம் பார்த்துக் கொண்டது
சுருக்கங்களின்றி
பருவம் பூரித்துச் செழித்த தன்
முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி
பார்த்திருந்த வானத்திடம்
தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்
ஒருசேரக் கொடுத்தது

எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்
வழமைபோலவே
காற்றைச்சுட்டெரித்தது
இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
எதுவுமே செய்யாதவன் போல
முகம்துடைத்துப் போகிறேன் நான்
உங்களைப் போலவே வெகு இயல்பாக

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# பூவுலகு - ஜூன்,2009 இதழ்
# உயிர்மை

#திண்ணை

50 comments:

ஃபஹீமாஜஹான் said...

அன்புள்ள ரிஷான்,

"முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி
பார்த்திருந்த வானத்திடம்
தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்
ஒருசேரக் கொடுத்தது"

"பச்சை வீட்டின்" அழிவை நன்றாகவே கூறி இருக்கிறீர்கள்.


"இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
எதுவுமே செய்யாதவன் போல
முகம்துடைத்துப் போகிறேன்"

உண்மைதான்.

இயற்கையைக் காப்பதாகப் பெரும் விளம்பரங்களைச் செய்யும் நிறுவனங்கள் தான் அதை அழிப்பதிலும் முன்னணியில் நிற்கின்றன.

"ஊழிக்காலம்" தலைப்பும் கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது.

kuma36 said...

யதார்த்தமான வரிகள்! உங்கள் கவிதகள் எப்போதுமே சூப்பர்!

//எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்///

உயர இருக்கின்றவர்கள் கீழ்நோக்கி பார்பது மிகவும் அரிதே!!

அருமையான வரிகள்

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'ஊழிக் காலம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 16th August 2009 12:00:11 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/99769

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பு நண்பர் ரிஷான்,
பொதுவாக கவிஞர்கள் காதலையும் தம்முள் இருக்கின்ற சோகத்தையும் மட்டுமே கவிதையாக வடிக்கின்றனர் என்பது எம்மை போன்ற சாதாரணர்களின் குற்றச்சாட்டு. ஆனால் உங்களுடைய இந்த கவிதை இன்றைய நிலையில் சமூகத்திற்கு என்ன தேவையோ அதைப் பற்றி பேசுகிறது. சுற்றுப்புற சீரழிவிற்கு காரணமான பிளாஸ்டிக் பைகள் இன்று குக்கிராமத்தையும் விட்டு வைக்க வில்லை. குற்ற உணர்ச்சியுடனேயே உங்களின் இந்த கவிதையை நான் படித்தேன். ஏனெனில் நானும் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதால்.

உங்களுடைய கவிதை வரிகள் வழக்கம் போல் மிகவும் அருமையாக இருக்கிறது.

தமிழன் வேணு said...

அருமையான கவிதை!

மனிதனின் கால்கள் பூமியின் நெஞ்சை மிதித்துக்கொண்டிருக்கின்றன. அவனது கைகள் குரல்வளையை நெறித்துக்கொண்டிருக்கின்றன.

ஆசிப் மீரான் said...

ரிஷான்

எங்க்ளைப் போலவே?? :-)
மிக யதார்த்தமான உண்மை அதுதான்

அடுத்தவனைக் குறை சொல்லிகொண்டே நாமும் பலவற்றையும் செய்து கொண்டுதானிருக்கிறோம்
ஆனால் நான் மட்டும் யோக்கியம்னெற பெருமையையும் விட்டு விடத் துணிவதில்லை மனிதர்கள்

இயல்பான் கவிதை செறிவான மொழியில்
வாழ்த்துகள் கவிஞரே!!

தேனுஷா said...

நாமெல்லாம் தப்பை இயல்பாக செய்ய பழகிட்டோம்
அதுக்கெல்லாம் காரணம் சொல்லவும் கத்துக்கிட்டிருக்கோம்

ஷைலஜா said...

கடைசி வாக்கியங்களில் கவிதை
அப்படியே மனசில்போய் உட்கார்ந்துகொள்கிறது.

இன்னொரு மயிலிறகு ரிஷானின்குல்லாய்க்கு!

வேந்தன் அரசு said...

நல்ல கவிநயம்.

அன்புடன் புகாரி said...

சுற்றுச் சூழலுக்கு ஒரு முத்தாக கவிதை ரிஷான்

விஜி said...

//நாமெல்லாம் தப்பை இயல்பாக செய்ய பழகிட்டோம்
அதுக்கெல்லாம் காரணம் சொல்லவும் கத்துக்கிட்டிருக்கோம் //


மிக மிகச்சரியாகத்தப்பைச்சுட்டி காட்டி இருக்கீங்க தேனு..

நன்று ரிஷான்.

அப்பணா said...

//இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்//
இப்போ கொஞ்சம் மாற்றம் தெரிகிறது

பூங்குழலி said...

// ஊழிக் காலம்
காய்ந்துபோன ஏரிகளில்
காலம் தன் முகம் பார்த்துக் கொண்டது//

அருமை


// சுருக்கங்களின்றி
பருவம் பூரித்துச் செழித்த தன்
முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி//

நீர் நிலைகளையெல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்


//பார்த்திருந்த வானத்திடம்
தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்
ஒருசேரக் கொடுத்தது




எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்
வழமைபோலவே
காற்றைச்சுட்டெரித்தது

எதையும் கண்டு கொள்ளாத சூரியன் //
..அருமை


//இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
எதுவுமே செய்யாதவன் போல
முகம்துடைத்துப் போகிறேன் நான்
உங்களைப் போலவே வெகு இயல்பாக//

உங்களைப் போலவே .....சரியான சாட்டையடி ரிஷான்

விஷ்ணு said...

நல்ல கவிதை நண்பரே ....
இயற்கைக்கு இன்று நாம் செய்யும் துரோகத்திற்கு
நாளை நல்ல விலை கொடுக்கும் நிலை வரும் ..

மதி அழகன் said...

உண்மை சுடுகிறது, கையாலாகாத்த‌ன‌த்துட‌ன் ‍- என‌க்கும்!

விசாலம் said...

அன்பு ரிஷான் அருமையான கவிதை ஆம் இயற்கையில் மாசு ஏற்படுத்துவதும் மனிதன் தான்

சுவாதி said...

//ஊழிக் காலம்
காய்ந்துபோன ஏரிகளில்
காலம் தன் முகம் பார்த்துக் கொண்டது
சுருக்கங்களின்றி
பருவம் பூரித்துச் செழித்த தன்
முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி
பார்த்திருந்த வானத்திடம்
தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்
ஒருசேரக் கொடுத்தது//


காலத்திற்கு மூப்பிருக்குமா? அதற்கும் முதுமையின் அடையாளங்கள் வருமா?



// எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்
வழமைபோலவே
காற்றைச்சுட்டெரித்தது
இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
எதுவுமே செய்யாதவன் போல
முகம்துடைத்துப் போகிறேன் நான்
உங்களைப் போலவே வெகு இயல்பாக //


இந்த வரிகள் அருமை. இயற்கையை மனிதனும் அழிக்கிறான். மனிதனும் தன்னைத் தானே அழித்துக் கொள்வதைப் போலவே இயற்கையும் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது ;.. :(:(

மணல்வீடு said...

vanakkam sir
unga poem vasithen.(oozhikalam)innum konjam veganaum. unga mobile no anupunga, pesalam.
mudiumanal
manalveedu.blogspot.com
vasithu parungal.
9894605371

+Ve Anthony Muthu said...

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//அன்பு நண்பர் ரிஷான்,
பொதுவாக கவிஞர்கள் காதலையும் தம்முள் இருக்கின்ற சோகத்தையும் மட்டுமே கவிதையாக வடிக்கின்றனர் என்பது எம்மை போன்ற சாதாரணர்களின் குற்றச்சாட்டு.//

ஆம் சகோதரரே!

வெட்கித் தலைகுனிகிறேன்.

ஏனெனில் நானும் இவ்விதம்தான் கவிதையெனக் கிறுக்கிக் கொண்டிருந்திருக்கிறேன்.


உங்கள் கவிதையும், "ஷேக் தாவூத்" அவர்களின் பின்னூட்டமும் சிந்திக்க வைத்தது வெகுவாய்....

உள்ளம் நிறைந்த நன்றிகள்

Kavinaya said...

எல்லாரும் சொன்னதை விட புதிதாய் என்ன சொல்லி விடப் போகிறேன்? :) அற்புதமான சொல்லாற்றல் ரிஷு.

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//அன்புள்ள ரிஷான்,

"முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி
பார்த்திருந்த வானத்திடம்
தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்
ஒருசேரக் கொடுத்தது"

"பச்சை வீட்டின்" அழிவை நன்றாகவே கூறி இருக்கிறீர்கள். //

ம்ம்..செயலில் மட்டும் தொடர்ந்து அழித்துக்கொண்டே இருக்கிறோம். இல்லையா? :(


//"இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
எதுவுமே செய்யாதவன் போல
முகம்துடைத்துப் போகிறேன்"

உண்மைதான்.

இயற்கையைக் காப்பதாகப் பெரும் விளம்பரங்களைச் செய்யும் நிறுவனங்கள் தான் அதை அழிப்பதிலும் முன்னணியில் நிற்கின்றன.//

மிக மிகச் சரி.. உண்மையான சேவை மனப்பான்மை இன்றி விளம்பரத்திற்காகச் செய்கிறார்களோ என்று நானும் எண்ணியிருக்கிறேன்.

//"ஊழிக்காலம்" தலைப்பும் கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது. //

:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் கலை,

//யதார்த்தமான வரிகள்! உங்கள் கவிதகள் எப்போதுமே சூப்பர்!

//எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்///

உயர இருக்கின்றவர்கள் கீழ்நோக்கி பார்பது மிகவும் அரிதே!! //

ஆமாம் நண்பரே..உயரே செல்லும்வரை விரல்பிடித்துச் செல்பவர்களும், மேலேறி விட்டவுடன் உதறிவிடுகிற காலமிது. :(

//அருமையான வரிகள் //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

//அன்பு நண்பர் ரிஷான்,
பொதுவாக கவிஞர்கள் காதலையும் தம்முள் இருக்கின்ற சோகத்தையும் மட்டுமே கவிதையாக வடிக்கின்றனர் என்பது எம்மை போன்ற சாதாரணர்களின் குற்றச்சாட்டு. ஆனால் உங்களுடைய இந்த கவிதை இன்றைய நிலையில் சமூகத்திற்கு என்ன தேவையோ அதைப் பற்றி பேசுகிறது. சுற்றுப்புற சீரழிவிற்கு காரணமான பிளாஸ்டிக் பைகள் இன்று குக்கிராமத்தையும் விட்டு வைக்க வில்லை. குற்ற உணர்ச்சியுடனேயே உங்களின் இந்த கவிதையை நான் படித்தேன். ஏனெனில் நானும் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதால். //

ம்ம்.
இலங்கையில் நான் இங்கு வரும்போது ப்ளாஸ்டிக் பைகளையும், ப்ளாஸ்டிக் போத்தல்களையும் முற்றாகத் தடை செய்திருந்தார்கள். கத்தார் நாட்டில் எங்கும் ப்ளாஸ்டிக் மயம். வேறு வழியின்றி அவற்றோடு உறவாட வேண்டியிருக்கிறது. அவை ஏற்படுத்தும் சூழல் தாக்கமே அதிக வெப்பத்துக்குக் காரணமும் கூட. அதன் வெளிப்பாடே இந்தக் கவிதை எனக் கொள்ளலாம்.

//உங்களுடைய கவிதை வரிகள் வழக்கம் போல் மிகவும் அருமையாக இருக்கிறது. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் வேணு,

//அருமையான கவிதை!

மனிதனின் கால்கள் பூமியின் நெஞ்சை மிதித்துக்கொண்டிருக்கின்றன. அவனது கைகள் குரல்வளையை நெறித்துக்கொண்டிருக்கின்றன.

தமிழன் வேணு//

பூமி ஒரு நாள் தன் உயிர் துறக்கும். அன்று உணர மனிதன் இருக்கமாட்டான். அக் கொலைகாரனைக் காலம் கொன்றழித்திருக்கும். இல்லையா?

நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் ஆசிப் அண்ணா,


//ரிஷான்


எங்க்ளைப் போலவே?? :-)
மிக யதார்த்தமான உண்மை அதுதான்

அடுத்தவனைக் குறை சொல்லிகொண்டே நாமும் பலவற்றையும் செய்து கொண்டுதானிருக்கிறோம்
ஆனால் நான் மட்டும் யோக்கியம்னெற பெருமையையும் விட்டு விடத் துணிவதில்லை மனிதர்கள்//


மிக மிகச் சரி. எங்களூரில் இப்படிச் சொல்வார்கள் இதையே.
'அடுத்தவன் முதுகைப் பார்த்துக் குறை சொல்லிக் கொண்டிருப்பான், தன் முதுகின் அழுக்கை நேரே பார்க்க இயலாமல்' என்று.. :)



//இயல்பான் கவிதை செறிவான மொழியில்
வாழ்த்துகள் கவிஞரே!!//


ஆஹா.. :)
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஆசிப் அண்ணா !!

M.Rishan Shareef said...

//நாமெல்லாம் தப்பை இயல்பாக செய்ய பழகிட்டோம்
அதுக்கெல்லாம் காரணம் சொல்லவும் கத்துக்கிட்டிருக்கோம் //


மிகச் சரி தேனு...நன்றி தோழி !!

M.Rishan Shareef said...

அன்பின் ஷைலஜா அக்கா,

//கடைசி வாக்கியங்களில் கவிதை
அப்படியே மனசில்போய் உட்கார்ந்துகொள்கிறது.

இன்னொரு மயிலிறகு ரிஷானின்குல்லாய்க்கு! //


ஆஹா..மயிலிறகும் அழகாகிறது உங்கள் வார்த்தைகளில் :))
நன்றி அக்கா !!

M.Rishan Shareef said...

அன்பின் வேந்தன் அரசு,


//நல்ல கவிநயம். //


நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் புகாரி,

//சுற்றுச் சூழலுக்கு ஒரு முத்தாக கவிதை ரிஷான்//


நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,


//மிக மிகச்சரியாகத்தப்பைச்சுட்டி காட்டி இருக்கீங்க தேனு..

நன்று. ரிஷான்.//


நன்றி தோழி.. :)

M.Rishan Shareef said...

அன்பின் அப்பணா,

//இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்

பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
இப்போ கொஞ்சம் மாற்றம் தெரிகிறது //


ஆமாம்..இன்னும் அதிகமாக அழிக்கிறார்கள் :(
நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//ஊழிக் காலம்
காய்ந்துபோன ஏரிகளில்
காலம் தன் முகம் பார்த்துக் கொண்டது

அருமை//


:)


//சுருக்கங்களின்றி
பருவம் பூரித்துச் செழித்த தன்
முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி

நீர் நிலைகளையெல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்//


நிச்சயமாக சகோதரி.
மீட்டெடுக்கமுடியாத காலத்தின் கருந்துளைகளுக்குள் நீர்நிலைகளைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் :((


//பார்த்திருந்த வானத்திடம்
தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்
ஒருசேரக் கொடுத்தது




எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்
வழமைபோலவே
காற்றைச்சுட்டெரித்தது

எதையும் கண்டு கொள்ளாத சூரியன் ..அருமை


இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
எதுவுமே செய்யாதவன் போல
முகம்துடைத்துப் போகிறேன் நான்
உங்களைப் போலவே வெகு இயல்பாக
உங்களைப் போலவே .....சரியான சாட்டையடி ரிஷான் //


வழமை போலவே உங்கள் அருமையான கருத்து..
நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் விஷ்ணு,

//நல்ல கவிதை நண்பரே ....
இயற்கைக்கு இன்று நாம் செய்யும் துரோகத்திற்கு
நாளை நல்ல விலை கொடுக்கும் நிலை வரும் ..//


ஆமாம்.. ஒரு பலத்த சுயநலவாதியைப் போல எல்லாமும் எமக்கேயென்று எல்லாவற்றையும் வீணாக்கித் திரிகிறோம்.. நாளைய சந்ததிக்கு எதை மிச்சம் வைக்கப்போகிறோம்..அழிவைத் தவிர? :(

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

//உண்மை சுடுகிறது, கையாலாகாத்த‌ன‌த்துட‌ன் ‍- என‌க்கும்!//


:(

கருத்துக்கு நன்றி நண்பர் மதி அழகன் !!

M.Rishan Shareef said...

//அன்பு ரிஷான் அருமையான கவிதை ஆம் இயற்கையில் மாசு ஏற்படுத்துவதும் மனிதன் தான்//


நிச்சயமாக அம்மா..கருத்துக்கு நன்றி !

M.Rishan Shareef said...

அன்பின் சுவாதி அக்கா,

//ஊழிக் காலம்
காய்ந்துபோன ஏரிகளில்
காலம் தன் முகம் பார்த்துக் கொண்டது
சுருக்கங்களின்றி
பருவம் பூரித்துச் செழித்த தன்
முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி
பார்த்திருந்த வானத்திடம்
தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்
ஒருசேரக் கொடுத்தது


காலத்திற்கு மூப்பிருக்குமா? அதற்கும் முதுமையின் அடையாளங்கள் வருமா? //


நிச்சயமாக வரும்.. அதன் பலன் தான் விவசாய பூமிகளின் வெடிப்புகள், நதிகள் வற்றிப்போதல் இன்னும் பல :((




//எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்

வழமைபோலவே
காற்றைச்சுட்டெரித்தது
இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
எதுவுமே செய்யாதவன் போல
முகம்துடைத்துப் போகிறேன் நான்
உங்களைப் போலவே வெகு இயல்பாக


இந்த வரிகள் அருமை. இயற்கையை மனிதனும் அழிக்கிறான். மனிதனும் தன்னைத் தானே அழித்துக் கொள்வதைப் போலவே இயற்கையும் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது ;.. :(:( //


ஆனால் இயற்கை தானாக அழிவதில்லை..நாங்கள் அதைக் கொன்றுவிடுகிறோம் :((

கருத்துக்கு நன்றி அக்கா !!

M.Rishan Shareef said...

அன்பின் 'மணல்வீடு'ஆசிரியருக்கு,

//vanakkam sir
unga poem vasithen.(oozhikalam)innum konjam veganaum. unga mobile no anupunga, pesalam.
mudiumanal
manalveedu.blogspot.com
vasithu parungal. //

இந்த மாதத்தில் ஊர் நாடிச் செல்ல இருக்கிறேன். தொலைபேசி எண் கிட்டியவுடன் உடனே அறியத்தருகிறேன். உரையாடலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் அந்தோணி முத்து,

//பி.ஏ.ஷேக் தாவூத் said...

//அன்பு நண்பர் ரிஷான்,
பொதுவாக கவிஞர்கள் காதலையும் தம்முள் இருக்கின்ற சோகத்தையும் மட்டுமே கவிதையாக வடிக்கின்றனர் என்பது எம்மை போன்ற சாதாரணர்களின் குற்றச்சாட்டு.//

ஆம் சகோதரரே!

வெட்கித் தலைகுனிகிறேன்.

ஏனெனில் நானும் இவ்விதம்தான் கவிதையெனக் கிறுக்கிக் கொண்டிருந்திருக்கிறேன்.


உங்கள் கவிதையும், "ஷேக் தாவூத்" அவர்களின் பின்னூட்டமும் சிந்திக்க வைத்தது வெகுவாய்....

உள்ளம் நிறைந்த நன்றிகள்//

உங்கள் முதல்வருகை பெரிதும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//எல்லாரும் சொன்னதை விட புதிதாய் என்ன சொல்லி விடப் போகிறேன்? :) அற்புதமான சொல்லாற்றல் ரிஷு. //

நீண்ட நாட்களின் பின்னர் உங்களை இங்கு காண்கிறேன். மகிழ்வாக இருக்கிறது.

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி !

வெற்றி வாசன் said...

கவிதை மிக மிக அருமை . உண்மை கவிதை. பகிர்தலுக்கு நன்றி.

அமரன் said...

வளமான கற்பனையில் வளம் குன்றலைப் பற்றிய கவிதை.

மரங்களை வெட்ட வேண்டிய தேவையும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டிய தேவையும் தவிர்க்க முடியாததாகவிடும் காலம் வரத்தான் போகிறது. இதனைத் தவிர்க்க ஒரு தீர்வினை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது.

எடுத்துக் காட்டாக.. ஜேர்மயினில் தண்ணிப்போத்தல் விற்பனை நிலையங்களிலுள்ள இயந்திரத்தினுள் வெறும் போத்தலைப் போட்டால் தண்ணிப்போத்தலின் கொள்வனவு விலையின் முக்கால் பங்கை மீளப்பெற இயலும்.

மாசு களைய முனையும் கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான்.

செல்வா said...

வெட்டப்படும் வனங்கள்
மலடாகும் மேகங்கள்...

வாழ்வின் தேவைக்கு வாழ்வின் இருத்தலுக்கு
இயற்கையைக் கொய்யும் மனிதன்...

துளிர்க்கும் இலைகளைப் பற்றி கவலைப்படவில்லை...

அல்லது துளிர்க்க வைக்கவில்லை...

காலத்தின் தேவையை வலியுறுத்தி வந்த கவிதை
வாழ்த்துக்கள் நண்பரே...

இளசு said...

சூழல் அழியும் வேகம் கண்டால்
ஊழிக்காலம் உற்று வந்து விரைவில் ஊட்டுமோ
என்ற சஞ்சலம் எனை உறுத்தும்...

அன்பு ரிஷான்
சொற்கள் உங்கள் தொகுப்பில் அடையும் வீரியம் - அழகான ரசவாதம்!
பாராட்டுகள்..

M.Rishan Shareef said...

அன்பின் வெற்றி வாசன்,

//கவிதை மிக மிக அருமை . உண்மை கவிதை. பகிர்தலுக்கு நன்றி//

கவிதை குறித்த உங்கள் கருத்து கண்டதில் மகிழ்ச்சி.
நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் அமரன்,

//வளமான கற்பனையில் வளம் குன்றலைப் பற்றிய கவிதை.

மரங்களை வெட்ட வேண்டிய தேவையும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டிய தேவையும் தவிர்க்க முடியாததாகவிடும் காலம் வரத்தான் போகிறது. இதனைத் தவிர்க்க ஒரு தீர்வினை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது.

எடுத்துக் காட்டாக.. ஜேர்மயினில் தண்ணிப்போத்தல் விற்பனை நிலையங்களிலுள்ள இயந்திரத்தினுள் வெறும் போத்தலைப் போட்டால் தண்ணிப்போத்தலின் கொள்வனவு விலையின் முக்கால் பங்கை மீளப்பெற இயலும்.//

அருமையான கருத்து.
மிக நல்ல ஒரு முன்னெடுப்பு. சுழற்சி முறையில் இப்பாவனை நிகழ்வதால், புதிய போத்தல்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படும். எல்லா நாடுகளும் இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டால் ப்ளாஸ்டிக் பாவனையை வெகுவாகக் குறைத்துவிடலாம் அல்லவா நண்பரே?

//மாசு களைய முனையும் கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான். //

பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் செல்வா,

//வெட்டப்படும் வனங்கள்
மலடாகும் மேகங்கள்...

வாழ்வின் தேவைக்கு வாழ்வின் இருத்தலுக்கு
இயற்கையைக் கொய்யும் மனிதன்...

துளிர்க்கும் இலைகளைப் பற்றி கவலைப்படவில்லை...

அல்லது துளிர்க்க வைக்கவில்லை... //

மனிதன் சுயநலவாதியாகிவிட்டான். இயற்கையை வஞ்சிக்கிறான்.
அருமையான, அழகான கருத்து.

//காலத்தின் தேவையை வலியுறுத்தி வந்த கவிதை
வாழ்த்துக்கள் நண்பரே... //

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் இளசு,

//சூழல் அழியும் வேகம் கண்டால்
ஊழிக்காலம் உற்று வந்து விரைவில் ஊட்டுமோ
என்ற சஞ்சலம் எனை உறுத்தும்... //

ஆமாம் நண்பரே..நிச்சயமாக சூழல் அழியும் வேகம் பெரிதும் அச்சுறுத்துகிறது. வருங்கால சந்ததியினருக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? :(

//அன்பு ரிஷான்
சொற்கள் உங்கள் தொகுப்பில் அடையும் வீரியம் - அழகான ரசவாதம்!
பாராட்டுகள்.. //

அழகிய கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

ஆதவா said...

அன்பு ரிஷான்...

வழக்கம் போல உங்கள் கவிதை நடை மிகப் பிரமாதம்.. கருவை முன்வைத்து, நீங்கள் எடுத்திருக்கும் சமூகப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை... ஏன், எனக்கும் கூட...

வாழ்வியல் தடயங்கள் பதிக்க, இயற்கையைக் மொட்டையாக்கி காகிதமாக்குகிறானோ என்று மிகுந்த அச்சம் எழும்... நாளை...

வாழ்த்துகள் ரிஷான்... கவிதைக்கும்.. அது உயிர்மையில் பிரசுரமானமைக்கும்...

ஆதவா said...

அன்பு ரிஷான்...

வழக்கம் போல உங்கள் கவிதை நடை மிகப் பிரமாதம்.. கருவை முன்வைத்து, நீங்கள் எடுத்திருக்கும் சமூகப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை... ஏன், எனக்கும் கூட...

வாழ்வியல் தடயங்கள் பதிக்க, இயற்கையைக் மொட்டையாக்கி காகிதமாக்குகிறானோ என்று மிகுந்த அச்சம் எழும்... நாளை...

வாழ்த்துகள் ரிஷான்... கவிதைக்கும்.. அது உயிர்மையில் பிரசுரமானமைக்கும்...

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவா,

//அன்பு ரிஷான்...

வழக்கம் போல உங்கள் கவிதை நடை மிகப் பிரமாதம்.. கருவை முன்வைத்து, நீங்கள் எடுத்திருக்கும் சமூகப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை... ஏன், எனக்கும் கூட...

வாழ்வியல் தடயங்கள் பதிக்க, இயற்கையைக் மொட்டையாக்கி காகிதமாக்குகிறானோ என்று மிகுந்த அச்சம் எழும்... நாளை...

வாழ்த்துகள் ரிஷான்... கவிதைக்கும்.. அது உயிர்மையில் பிரசுரமானமைக்கும்... //

உங்கள் கருத்தினைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன்.
நீண்ட நாட்களின் பின்னர் வந்திருக்கிறீர்கள்...நலமா நண்பரே?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !