Sunday, December 20, 2009

பாவப்பட்ட அது


கடவுள் தந்த பொழுதிலிருந்து
காயங்களெதுவும் கண்டிரா
பரிபூரணத் தூய்மையோடு துடித்திட்ட அது
மழலை வாடையை எங்கும் பரப்பும்
பூக்களை இறுக்கமாகப் பொத்திவைத்திருக்கும்
ஒருநாள் குழந்தையின்
உள்ளங்கையினைப்போலவும்
மொட்டவிழக் காத்திருக்கும்
தாமரையொன்றின் உட்புற இதழைப்போலவும்
மிகவும் மென்மையானது
சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது
வாடிச் சோர்ந்தது
ஞாபக அடுக்குகளில்
சேமித்துக் கோர்த்திருந்த
எனதினிய பாடல்களின் மென்பரப்பில்
உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# வடக்கு வாசல் - செப்டம்பர், 2009 இதழ்
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009






43 comments:

மாதேவி said...

கவிதை அழகு.

"வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது" சோகம் மிகுந்த வரிகள்.

ஃபஹீமாஜஹான் said...

"சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது"

"எனதினிய பாடல்களின் மென்பரப்பில்
உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது"

"வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது"
அனுபவம் கலந்த வரிகள்.
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ASFER said...

கவிதை வாசிப்பது குறைவு ஆனாலும் வாசித்தேன்.

COMMENTS வரவில்லையா?கவலை வேண்டாம்..புதிய பதிவு
http://asfer-asfer.blogspot.com/2009/12/comments.html

Gowripriya said...

"வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது"

வலி மிகுந்த வரிகள்..

மஞ்சுபாஷிணி ஜெகந்நாதன் said...

ஒரு அழகிய மனது வடித்தது கண்ணீர் சிவப்பாக, உன் வதைப்பால்........அருமை ரிஷான்...!!!

தமிழன் வேணு said...

நல்ல கவிதை ரிஷான்!
வார்த்தைகளில் நிறையவே அழுத்தம்.

சீதாலக்ஷ்மி said...

இதயமொழியை உணர்ந்தவன்

நஜீபா அக்தர் said...

உணர்ச்சிப் பிழம்பான ஒரு கவிதை. சில வரிகள் மனதை என்னவோ செய்கின்றன.

அப்துல் ஜப்பார் said...

நன்றாக இருக்கிறது ரிஷான். கவிதை என்றால் அது காதல் பற்றித்தான்
இருக்கும் என்பதுதான் என்னை நெருடும் ஒரு விஷயம். பரவாயில்லை.
இப்போது காதல் கவிதைகளாக எழுதித் தள்ளுங்கள். என் வயது வரும்போது
உங்களிடமிருந்து தத்துவக் கவிதைகள் பிறக்கலாம். அப்போது நான்
இருப்பேனோ என்னவோ யார் கண்டது...? வாழ்க.. வளர்க...தொடர்க...

பிச்சுமணி said...

//சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது//

நன்றாக இருக்கிறது தங்களது கவிதை

ராகவன்.வ said...

//வேறென்ன பாவம்தான் செய்தது வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது//

இன்று தொலைக்காட்சியில் கண்டதும்,
இந்த கவிதையின் வரிகளும்
நெஞ்சை பிசைகின்றன.

வேந்தன் அரசு said...

//நன்றாக இருக்கிறது ரிஷான். கவிதை என்றால் அது காதல் பற்றித்தான்
இருக்கும் என்பதுதான் என்னை நெருடும் ஒரு விஷயம். பரவாயில்லை.
இப்போது காதல் கவிதைகளாக எழுதித் தள்ளுங்கள். என் வயது வரும்போது
உங்களிடமிருந்து தத்துவக் கவிதைகள் பிறக்கலாம். அப்போது நான்
இருப்பேனோ என்னவோ யார் கண்டது...? வாழ்க.. வளர்க...தொடர்க...//

எதை எப்போதும் நினைத்திருக்கிறோமோ அது கனவாகும் கவிதைஆகும்

பூங்குழலி said...

ரொம்ப ரொம்ப அருமையான ரொம்ப நேரிடையான கவிதை கூட

காயத்ரி said...

//உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது//

ரொம்பவே துடித்துவிட்டது... ஒற்றை மனது...
அழகான நிதர்சனமான உண்மை... அருமையான கவிதை நண்பரே...

சிவசுப்ரமணியன் said...

கொன்னுட்டீங்க ரிஷான் !

Siva Ranjan said...

Beautiful Rishan...

தேனுஷா said...

வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது

விஜி said...

பரிபூரணத்தன்மையோடு துடித்த அது பாவப்பட நியாயமில்லை ரிஷான்.

பூரணமான ஒன்றை யாராலும் எதுவும் செய்யமுடியாது.

Jalajah Raja said...

Nalla iruku Rishan

M.Rishan Shareef said...

அன்பின் மாதேவி,

//கவிதை அழகு.

"வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது" சோகம் மிகுந்த வரிகள்.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமாஜஹான்,

//"சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது"

"எனதினிய பாடல்களின் மென்பரப்பில்
உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது"

"வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது"
அனுபவம் கலந்த வரிகள்.
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் அஸ்ஃபர்,

//கவிதை வாசிப்பது குறைவு ஆனாலும் வாசித்தேன்.//

:)
நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கௌரிப்ரியா,

நீண்ட நாட்களின் பின்னர் வந்திருக்கிறீர்கள். நலமா?

//"வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது"

வலி மிகுந்த வரிகள்..//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் மஞ்சுபாஷிணி,

//ஒரு அழகிய மனது வடித்தது கண்ணீர் சிவப்பாக, உன் வதைப்பால்........அருமை ரிஷான்...!!!//

அழகான கருத்து.
நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் வேணு ஐயா,

//நல்ல கவிதை ரிஷான்!
வார்த்தைகளில் நிறையவே அழுத்தம். //

நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சீதாலக்ஷ்மி அம்மா,

//இதயமொழியை உணர்ந்தவன்//


:)
கருத்துக்கு நன்றி அம்மா !

M.Rishan Shareef said...

அன்பின் நஜீபா அக்தர்,

//உணர்ச்சிப் பிழம்பான ஒரு கவிதை. சில வரிகள் மனதை என்னவோ செய்கின்றன. //


:)
கருத்துக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் அப்துல் ஜப்பார் ஐயா,

//நன்றாக இருக்கிறது ரிஷான். கவிதை என்றால் அது காதல் பற்றித்தான்
இருக்கும் என்பதுதான் என்னை நெருடும் ஒரு விஷயம். பரவாயில்லை.
இப்போது காதல் கவிதைகளாக எழுதித் தள்ளுங்கள். என் வயது வரும்போது
உங்களிடமிருந்து தத்துவக் கவிதைகள் பிறக்கலாம். அப்போது நான்
இருப்பேனோ என்னவோ யார் கண்டது...? வாழ்க.. வளர்க...தொடர்க...//


உங்கள் கருத்தும் ஆசிர்வாதமும் என்னை மகிழ்விக்கிறது. இக் கவிதை, காதல் மட்டுமல்லாது எல்லா பந்தங்களுக்கும் பொருந்துகிறது தானே. :)
என் எல்லா உயர்வுகளின் போதும் எப்பொழுதும் கூடவே இருப்பீர்கள் ஐயா !
கருத்துக்கு நன்றி ஐயா !

M.Rishan Shareef said...

அன்பின் பிச்சுமணி,

//சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது

நன்றாக இருக்கிறது தங்களது கவிதை//


கருத்துக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் ராகவன்,

//வேறென்ன பாவம்தான் செய்தது வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது

இன்று தொலைக்காட்சியில் கண்டதும்,
இந்த கவிதையின் வரிகளும்
நெஞ்சை பிசைகின்றன.//


கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் வேந்தன் அரசு,


//நன்றாக இருக்கிறது ரிஷான். கவிதை என்றால் அது காதல் பற்றித்தான்
இருக்கும் என்பதுதான் என்னை நெருடும் ஒரு விஷயம். பரவாயில்லை.
இப்போது காதல் கவிதைகளாக எழுதித் தள்ளுங்கள். என் வயது வரும்போது
உங்களிடமிருந்து தத்துவக் கவிதைகள் பிறக்கலாம். அப்போது நான்
இருப்பேனோ என்னவோ யார் கண்டது...? வாழ்க.. வளர்க...தொடர்க...



எதை எப்போதும் நினைத்திருக்கிறோமோ அது கனவாகும் கவிதைஆகும்//

ஆஹா :))

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//மழலை வாடையை எங்கும் பரப்பும்
பூக்களை இறுக்கமாகப் பொத்திவைத்திருக்கும்
ஒருநாள் குழந்தையின்
உள்ளங்கையினைப்போலவும்
மொட்டவிழக் காத்திருக்கும்
தாமரையொன்றின் உட்புற இதழைப்போலவும்
மிகவும் மென்மையானது


ரொம்ப ரொம்ப அருமையான ரொம்ப நேரிடையான கவிதை கூட //


:)
கருத்துக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் காயத்ரி,

//உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது//

ரொம்பவே துடித்துவிட்டது... ஒற்றை மனது...
அழகான நிதர்சனமான உண்மை... அருமையான கவிதை நண்பரே...//


நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சிவசுப்ரமணியன்,

//கொன்னுட்டீங்க ரிஷான் //

:)
நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சிவா,

//Beautiful Rishan...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் தேனுஷா,

//ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது

இதை விட பெரிய தப்பு இருக்கா //


இல்லை..நிச்சயமாக இல்லவே இல்லை :)

கருத்துக்கு நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//பரிபூரணத்தன்மையோடு துடித்த அது பாவப்பட நியாயமில்லை ரிஷான்.

பூரணமான ஒன்றை யாராலும் எதுவும் செய்யமுடியாது.//


ஆனால், பூரணமாக இருக்கிறது என்ற பொறாமையாலோ என்னவோ, காயப்படுத்தி விடுகிறார்களே :(

கருத்துக்கு நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் ஜலஜா,

//Nalla iruku Rishan//

நன்றி தோழி :)

அக்னி said...

பரிதாபப்பட்ட
பாவப்பட்ட மனது...
பரிதாபப்படுமா
பாவம்செய்த மனது...

இது என் மனதின் பாவமல்ல...
ஏக்கப் பிரதிபலிப்பு...

ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு என் பாராட்டு.

Govindh said...

பாவப்பட்ட மனது...
கவிதை படித்து..
பாரமான மனது..
பாராட்டுக்கள்..

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்கள் அக்னி, Govindh,

வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே !

இளசு said...

வசந்தமாளிகை படத்தில் ஒரு வசனம்: ( எழுதியவர் பாலமுருகன்)

நம்ம இதயம் இருக்கே
அதை ஒருத்தர்கிட்டே கொடுக்கிறவரைக்கும் ரொம்ப விசாலமா இருக்கும்
ஒருத்தர்கிட்டே கொடுத்ததுக்கப்புறம் ரொம்ப சுருங்கிடும்..


----------------------------------

நம்பிய இன்னோர் இதயம் வதைக்கும்வரைக்கும்
நம் இதயம் தாமரையின் உள்ளிதழ், மென்பரப்பு..

வதைபட்டு பாடம் பெற்றபின்
தாமிரம் , இரும்பை வெல்லும் வன்பரப்பு...

---

பாராட்டுகள் ரிஷான்!

M.Rishan Shareef said...

அன்பின் இளசு,

//வசந்தமாளிகை படத்தில் ஒரு வசனம்: ( எழுதியவர் பாலமுருகன்)

நம்ம இதயம் இருக்கே
அதை ஒருத்தர்கிட்டே கொடுக்கிறவரைக்கும் ரொம்ப விசாலமா இருக்கும்
ஒருத்தர்கிட்டே கொடுத்ததுக்கப்புறம் ரொம்ப சுருங்கிடும்..


----------------------------------

நம்பிய இன்னோர் இதயம் வதைக்கும்வரைக்கும்
நம் இதயம் தாமரையின் உள்ளிதழ், மென்பரப்பு..

வதைபட்டு பாடம் பெற்றபின்
தாமிரம் , இரும்பை வெல்லும் வன்பரப்பு...

---

பாராட்டுகள் ரிஷான்! //

இதயம் குறித்த அருமையான வசனங்கள்.
தேடிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
கருத்துக்கும் வசனங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !