Saturday, September 8, 2007
நிசப்தம் விழுங்கும் உறக்கம்...!
நிசப்தித்திருந்தது நள்ளிரவு;
காலமோடும் சப்தம் கூட
காதுக்குள் அதிர்ந்தறைந்தது...!
ஒரு அசாத்தியமான மௌனத்தின்,
அமைதியின் உலகை
பேரிரைச்சலின் கை
அறைந்து சாத்தியதும்,
எனதான தேசம்
பற்றியெரிய தொடங்கியதுமான
அன்றிலிருந்துதான்...
இமைகளின் மேல் மயிலிறகால்
'உறக்கமே வருக'வென
மெலிதாய் எழுதி வைத்திடினும்
விழிகளில் ரயிலூர்ந்ததாய்
உறக்கம் மட்டும் வரவே வராது !
இப்படித்தானே இருந்து வருகிறது
தமதான தேசத்தைப் பிரிந்து,
சுயததை இழந்த
ஒவ்வொரு மனிதனுக்கும்...
ஒவ்வொரு நள்ளிரவும்...
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அன்பின் ரிஷான்
சொந்த அனுபவத்திலிருந்து எழுதியிருக்கிறீர்கள்.
இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக
எழுதியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் அல்லவா?
(இமைகளின் மேல் மயிலிறகால்
'உறக்கமே வருக'வென
மெலிதாய் எழுதி வைத்திடினும்
விழிகளில் ரயிலூர்ந்ததாய்
உறக்கம் மட்டும் வரவே வராது !)
இந்த வரிகள் கவிதையைத் தூக்கி விடவில்லை என்று நினைக்கிறேன்.
அன்புடன்
பஹீமாஜஹான்
இனிவரும் கவிதைகளில் நிச்சயம் இது பற்றி கவனத்தில் கொள்வேன்.நன்றி சகோதரி.... :)
//இப்படித்தானே இருந்து வருகிறது
தமதான தேசத்தைப் பிரிந்து,
சுயததை இழந்த
ஒவ்வொரு மனிதனுக்கும்...
ஒவ்வொரு நள்ளிரவும்...//
வலி(மை) மிக்க வரிகள்
அன்பின் சரவணகுமார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment