Saturday, September 20, 2008
என் நேசத்துக்குரிய எதிரிக்கு...!
ஒரு கோதுக்குள்
என் மௌனத்தைக் கருக்கொண்டுள்ளேன்
அதனை ஓட்டையிட்டு
வார்த்தைகளை உறிஞ்சத் துடிக்கிறாய்
மூங்கிலைத் துளையிட்டாய்
புல்லாங்குழலாகினேன்
வேரினைக் குழிதோண்டிப் புதைத்தாய்
பெருவிருட்சமானேன்
கையிலேந்திய மழைத்துளிகளை விசிறியடித்தாய்
ஓடையாய் நதியாய்க் கடலாய்ப் பெருக்கெடுத்தேன்
இவ்வாறாக
எனக்கெதிரான உனதொவ்வொரு அசைவிற்கும்
விஸ்வரூபம் எடுத்துத் தொலைக்கிறேன்
அதிர்ச்சியில் அகலத்திறந்தவுன் வாயினை
முதலில் மூடுவாயாக !
இந்த வெற்றிகளை எனக்குச் சூடத் தந்தது
என் நேசத்துக்குரிய எதிரியான
நீயன்றி வேறெவர் ?
ஆனாலும் எனை என்ன செய்யச் சொல்கிறாய் ?
அமைதி தவழும் ஒரு மரணத்தைப்போல
அழகிய மௌனத்துடன் நானிருக்கிறேன்
பூச்சொறிவதாய்ச் சொல்லி
எதையெதையோ வாரியிறைக்கிறாய்
நான் தவம் கலைக்கவேண்டுமா என்ன ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
நல்லா இருக்கு.. படிக்கும் போதே ஒரு வெறி வருது..
ஆனால் உங்க ரேஞ்சுக்கு இல்ல ரிஷான் இந்த கவிதை.
VERY NICE..
//மூங்கிலைத் துளையிட்டாய்
புல்லாங்குழலாகினேன்
வேரினைக் குழிதோண்டிப் புதைத்தாய்
பெருவிருட்சமானேன்
கையிலேந்திய மழைத்துளிகளை விசிறியடித்தாய்
ஓடையாய் நதியாய்க் கடலாய்ப் பெருக்கெடுத்தேன்//
இத்தனையும் புரிந்து அதிர்ச்சியில் இருப்பவர்..
//நான் தவம் கலைக்கவேண்டுமா என்ன ?//
இப்படிக் கேட்கையில் தைரியமாய் சரி என்றா சொல்வார்?
பொன்னைப் புடம் போடப் போட மெருகுதான் ஏறும்.
வாழ்த்துக்கள்.
வெட்ட வெட்ட விசுவரூபம் எடுப்பதான கருத்தை சொல்லியிருக்கும் விதம் அருமை.
//அமைதி தவழும் ஒரு மரணத்தைப்போல
அழகிய மௌனத்துடன் நானிருக்கிறேன்//
அழகான வார்த்தைப் பிரயோகம்.
ரிஷான்,
'எதிரியையும் தரம் பார்த்துதான் தேர்வு செய்யவேண்டும்' என்பார்கள். ஏனெனில், அதுவே நீங்கள் சாதிக்கபோவதை நிர்ணயம் செய்யும். நல்ல கவிதை. எப்படி இப்படியோர் சொல் இலாகவம் உங்களுக்கு! வாழ்த்துக்கள் ரிஷான்.
அனுஜன்யா
நல்லா இருக்கு ரிஷான்...
//இவ்வாறாக
எனக்கெதிரான உனதொவ்வொரு அசைவிற்கும்
விஸ்வரூபம் எடுத்துத் தொலைக்கிறேன்
//
எனக்குப் பிடித்த வரிகள்...
for email follow up
அன்பின் சரவணகுமார்,
//நல்லா இருக்கு.. படிக்கும் போதே ஒரு வெறி வருது..
ஆனால் உங்க ரேஞ்சுக்கு இல்ல ரிஷான் இந்த கவிதை.//
ஆமாம். நேசத்துக்குரிய எதிரிக்குப் புரிய வேண்டுமென்று இலகுநடையில் எழுதினேன்.
வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ராமலக்ஷ்மி,
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
திண்ணையில் உங்கள் கட்டுரை பார்த்தேன். நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் :)
அன்பின் கவிநயா,
//வெட்ட வெட்ட விசுவரூபம் எடுப்பதான கருத்தை சொல்லியிருக்கும் விதம் அருமை.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் அனுஜன்யா,
//'எதிரியையும் தரம் பார்த்துதான் தேர்வு செய்யவேண்டும்' என்பார்கள். ஏனெனில், அதுவே நீங்கள் சாதிக்கபோவதை நிர்ணயம் செய்யும். நல்ல கவிதை. எப்படி இப்படியோர் சொல் இலாகவம் உங்களுக்கு! வாழ்த்துக்கள் ரிஷான்.//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
உயிர்மையில் கவிதை பார்த்தேன். நன்று.வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
அன்பின் தமிழ்ப்பறவை,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாழ்த்துக்கள் ரிஷான் ..
வலி சொல்லும் வார்த்தைகள் .. வார்த்தைகளின் அழகு வலியைக்கூட அழகாக்குகிறது.
செல்லும் பாதையில் தடையிருப்பதால் நதி தன் இயல்பை இழப்பதில்லை...நதி நதியாகவே தன் ஓடிக்கொண்டிருக்கிறது . நாமும் நதியாகவே இருப்போமே....
அன்பின் சக்தி,
//செல்லும் பாதையில் தடையிருப்பதால் நதி தன் இயல்பை இழப்பதில்லை...நதி நதியாகவே தன் ஓடிக்கொண்டிருக்கிறது . நாமும் நதியாகவே இருப்போமே....//
நிச்சயமாக...அழகான வரிகள் ஸ்னேகிதி.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)
Nice one Rishan..Finishing para is good.
அன்பின் செல்வேந்திரன்,
//Nice one Rishan..Finishing para is good.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
நல்ல கவிதை..
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்..
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்..
அன்னக்கிளி படத்தின் ஒரு பாடல் ஞாபகம் வருகிறது..
நல்ல வார்த்தைகள் கொண்டு கவிதையை அழகாக வடித்துள்ளாய்..
நன்று..
அன்பின் கோகுலன்,
//நல்ல வார்த்தைகள் கொண்டு கவிதையை அழகாக வடித்துள்ளாய்.. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
Post a Comment