Wednesday, July 15, 2009

நிசிவெளி


தீராக் கொடும்பசியுடன்
பூரண நிலவைத்
தின்று சிதறி
ஏதுமறியாப் பாவனையோடு
பார்த்திருக்கின்றன
நிசிவெளியின் நட்சத்திரங்கள்

முற்றாகத் தின்னட்டுமென
விட்டுப்பின்
இருளைத் தின்று வளர்கிறது
இளம்பிறை

-எம்.ரிஷான் ஷெரீப்



நன்றி - உயிர்மை

50 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்:
//முற்றாகத் தின்னட்டுமென
விட்டுப்பின்
இருளைத் தின்று வளர்கிறது
இளம்பிறை//

வாழ்த்துக்கள் ரிஷான்!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

கவிதை நன்றாக இருக்கிறது ரிஷான்.
இறைவனின் இருப்பை உலகிற்கு உணர்த்தும் இயற்கையின் பேரழகை பற்றிய நிறைய கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
"இருளைத் தின்று வளர்கிறது இளம்பிறை"
இளம்பிறையை பற்றிய கவிதைகளில் இந்த கோணம் புதிதாகவும் அதேசமயம் ரசிக்கதக்கதாகவும் இருக்கிறது.

ny said...

read in uyirosai! beautiful one!!

Nathanjagk said...

அடேங்கப்பா! பசியாய் கூட காணமுடியுமா வானத்தை!! பிரமாதம்!

நேசமித்ரன் said...

அற்புதம்
ரிஷான் !
வாழ்த்துக்கள்...!
நினைவுகளைதின்று வளரும் உயிர் போல
நிலாதின்னும் இருள் அழகு...

பிரவின்ஸ்கா said...

கவிதை அருமை .
வாழ்த்துக்கள்.

"யுகமாயினி" யில் உங்கள் கட்டுரையை
வாசித்தேன்.
வலியின் உச்சம்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ஷைலஜா said...

கற்பனை மிகச்செறிவு!

தமிழன் வேணு said...

’தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி கணேசனைப் பார்த்து, மனோரமா ஒரு கேள்வி கேட்பார்:

"உங்க நாயனத்துலே மட்டும் தான் இந்த நாதம் வருமா? எல்லா நாயனத்திலேயும் இதே நாதம் வருமா?"

ரிஷான்! உங்க மனசுலே மட்டும் தான் இப்படியெல்லாம் கற்பனை வருமா? எல்லார் மனசுலேயும் வருமா?

தமிழன் வேணு

எழில் அரசு said...

நிலவை விண்மீன்கள் தின்பதாக தோன்றியது எப்படி?! வித்தியாசமான கற்பனை.

மனம் மிக காயப்பட்டு இருந்தால்தான் இப்படி தோன்றும் என நினைக்கிறேன்.
எனக்கு தோன்றியது தவறாக இருக்கவும் வாய்ப்பு அதிகம்!

நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ரிஷான்!

அன்புடன் புகாரி said...

நல்ல கவிதை ரிஷான்

நிறைய இதுபோல எழுதுங்கள்.

இயற்கையை வர்ணிப்பது கவிதையல்ல நவீன கவிதையாளர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்

சீதாலக்ஷ்மி said...

சின்ன உருவத்தில்
பெரிய சிந்தனைக் கடல்
எண்ணங்களின் ஏற்றம் பிரமிப்பைத் தருகின்றது

-அம்மா

சாந்தி said...

//முற்றாகத் தின்னட்டுமென
விட்டுப்பின்
இருளைத் தின்று வளர்கிறது
இளம்பிறை//


அதே கால‌ம்தான் ப‌தில் சொல்ல‌ணும்..வ‌ள‌ர‌ட்டும் பிறை

பூங்குழலி said...

அருமையான கவிதை ரிஷான் ...ரொம்ப வித்தியாசமாக

விஷ்ணு said...

நல்ல கவிதை ரிஷான்
கொஞ்சம் வித்யாசமாகவே ..அருமை ...அருமை ....

அன்புடன்
விஷ்ணு

தேனுஷா said...

அருமை ரிசான்

என்னதான் இருள் தின்றாலும் வளரும் பிறை போல இருக்கணும் நாமும்

இளசு said...

இயற்பியல் வெண்மைக்கு
கவிதை வண்ணப்பூச்சு
வெகு அழகு...

ரசித்தேன்... பாராட்டுகள் ரிஷான்!

கீதம் said...

மிகவும் அருமை. பாராட்டுகள்!

தாயுமானவன் வெங்கட் said...

என் இனிய ரிஷான்..,
கண்டேன் உன் கவிதையை.
நிசி வெளியின் ந்ட்சத்திரங்களாய் உன் பூரண நிலவொளி அன்பை தின்று செரிக்க
தீரா பசிகொள்ளுகிறது என் நட்பின் வயிறு.

போநிஒ said...

நன்று !!!

ஷிப்லி said...

நல்ல உவமை

நல்ல உருவகம்..

வாழ்த்துக்கள் நண்பரே...

மனாமீ said...

//இருளைத் தின்று வளர்கிறது
இளம்பிறை//

அழகிய உவமை!

பிறை தேய்வது போல் தென்பட்டாலும், இருளைக் கிழித்து வெளிவரும் என்பது உண்மை தான்.
வாழ்வின் சுழற்சி! காலத்தின் சுழற்சி!

ஆயிரம் கரம் கொண்டு மறைக்க நினைத்தாலும்,
நிசிவெளியின் தினவெடுத்த கர்வ நட்சத்திரங்கள்
சந்திரனில் ஒளிபெற்று
"ஒளி வள்ளல்" சந்திரன் மீதே இருள்கொண்டு பூசினாலும்
மீண்டும் மீண்டும்
வளர்பிறையாய் துளிர்ப்பது கண்கொள்ளா காட்சி!

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்:
//முற்றாகத் தின்னட்டுமென
விட்டுப்பின்
இருளைத் தின்று வளர்கிறது
இளம்பிறை//

வாழ்த்துக்கள் ரிஷான்!//

இப்பதிவுக்கு முதல் ஆளாக வந்திருக்கிறீர்கள்.

வருகைக்கும், தொடர்ந்து தரும் ஊக்குவிக்கும் கருத்துக்களுக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

//கவிதை நன்றாக இருக்கிறது ரிஷான்.
இறைவனின் இருப்பை உலகிற்கு உணர்த்தும் இயற்கையின் பேரழகை பற்றிய நிறைய கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
"இருளைத் தின்று வளர்கிறது இளம்பிறை"
இளம்பிறையை பற்றிய கவிதைகளில் இந்த கோணம் புதிதாகவும் அதேசமயம் ரசிக்கதக்கதாகவும் இருக்கிறது.//

நிச்சயம் எழுதுகிறேன். இங்கு இளம்பிறையை காலத்தின் குறியீடாகவும், ஒரு சமூகத்தின் குறியீடாகவும் கொள்ளலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்தி.என்,

//read in uyirosai! beautiful one!!//

உங்கள் கவிதைகளையும் அங்கு கண்டேன். நன்றாக எழுதுகிறீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஜெகநாதன்,

//அடேங்கப்பா! பசியாய் கூட காணமுடியுமா வானத்தை!! பிரமாதம்!//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நேசமித்ரன்,

//அற்புதம்
ரிஷான் !
வாழ்த்துக்கள்...!
நினைவுகளைதின்று வளரும் உயிர் போல
நிலாதின்னும் இருள் அழகு...//

:)
உங்கள் கருத்து மகிழ்வினையும், ஊக்கத்தையும் ஒருசேரத் தருகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பிரவின்ஸ்கா,

//கவிதை அருமை .
வாழ்த்துக்கள்.

"யுகமாயினி" யில் உங்கள் கட்டுரையை
வாசித்தேன்.
வலியின் உச்சம். //

ஆமாம்..அது காலத்தின் துயர்..எப்படியாவது கடக்க வேண்டியிருக்கிறது :(

யுகமாயினி ஒன்றுகூடலிலும், பிறகும் உங்களைச் சந்தித்ததாக நண்பர் ஷேக்தாவூத் சொன்னார். மிகவும் மகிழ்ச்சி. தொடருங்கள்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஷைலஜா அக்கா,

//கற்பனை மிகச்செறிவு! //


நன்றி அக்கா !!

M.Rishan Shareef said...

அன்பின் வேணு,


//’தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி கணேசனைப் பார்த்து, மனோரமா ஒரு கேள்வி கேட்பார்:

"உங்க நாயனத்துலே மட்டும் தான் இந்த நாதம் வருமா? எல்லா நாயனத்திலேயும் இதே நாதம் வருமா?"

ரிஷான்! உங்க மனசுலே மட்டும் தான் இப்படியெல்லாம் கற்பனை வருமா? எல்லார் மனசுலேயும் வருமா?//


:)
நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் எழில் அரசு,

//நிலவை விண்மீன்கள் தின்பதாக தோன்றியது எப்படி?! வித்தியாசமான கற்பனை.


மனம் மிக காயப்பட்டு இருந்தால்தான் இப்படி தோன்றும் என நினைக்கிறேன்.
எனக்கு தோன்றியது தவறாக இருக்கவும் வாய்ப்பு அதிகம்! //


தவறில்லை..மிகச் சரி.. உடல்வருத்தத்தையும் மன வருத்தத்தையும் காலத்தோடு ஒப்பிட்டுச் சொல்ல நினைத்தேன்.. அப்படியே ஒன்றாக இருந்து தின்னும் சில துரோகங்களையும்..!



//நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ரிஷான்!//


நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் புகாரி,


//நல்ல கவிதை ரிஷான்

நிறைய இதுபோல எழுதுங்கள்.

இயற்கையை வர்ணிப்பது கவிதையல்ல நவீன கவிதையாளர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் //


:))
நிச்சயம் எழுதுகிறேன். நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் சீதாலக்ஷ்மி அம்மா,

//சின்ன உருவத்தில்
பெரிய சிந்தனைக் கடல்
எண்ணங்களின் ஏற்றம் பிரமிப்பைத் தருகின்றது
அம்மா //


உங்கள் கருத்து மகிழ்வைத்தருகிறது..நன்றி அம்மா !!

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி அக்கா,

//முற்றாகத் தின்னட்டுமென
விட்டுப்பின்
இருளைத் தின்று வளர்கிறது
இளம்பிறை

-எம்.ரிஷான் ஷெரீப்


அதே கால‌ம்தான் ப‌தில் சொல்ல‌ணும்..வ‌ள‌ர‌ட்டும் பிறை//


அதே :))

கருத்துக்கு நன்றி அக்கா !!

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//அருமையான கவிதை ரிஷான் ...ரொம்ப வித்தியாசமாக //


தொடரும் உங்கள் ஊக்கம் மகிழ்வைத் தருகிறது..நன்றி சகோதரி !!

M.Rishan Shareef said...

அன்பின் விஷ்ணு,

//நல்ல கவிதை ரிஷான்
கொஞ்சம் வித்யாசமாகவே ..அருமை ...அருமை ....//


நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் தேனுஷா,

//அருமை ரிசான்

என்னதான் இருள் தின்றாலும் வளரும் பிறை போல இருக்கணும் நாமும் //


ஆமாம் தோழி..அப்பொழுதுதான் ஓர் நாள் வளர்ந்து உலகுக்கு ஒளி கொடுத்திடலாம்.. நன்றி தோழி !!!

M.Rishan Shareef said...

எனது அன்பின் தாயுமானவரே,

உங்கள் மடல் கண்டதும் மனம் கொள்ளும் பேருவகை சொல்லிலடங்காதது. உங்கள் கவிதைகளையும் காண ஆவலாக இருக்கிறேன்.
உரையாடுவோம்.

//என் இனிய ரிஷான்..,

கண்டேன் உன் கவிதையை.
நிசி வெளியின் ந்ட்சத்திரங்களாய் உன் பூரண நிலவொளி அன்பை தின்று செரிக்க
தீரா பசிகொள்ளுகிறது என் நட்பின் வயிறு.//


நன்றி அன்பு நண்பரே !!!

M.Rishan Shareef said...

அன்பின் போநிஒ,

//நன்று !!!//


கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஷிப்லி,

//நல்ல உவமை

நல்ல உருவகம்..

வாழ்த்துக்கள் நண்பரே...//


கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மனாமீ,

//

//இருளைத் தின்று வளர்கிறது
இளம்பிறை//

அழகிய உவமை!

பிறை தேய்வது போல் தென்பட்டாலும், இருளைக் கிழித்து வெளிவரும் என்பது உண்மை தான்.
வாழ்வின் சுழற்சி! காலத்தின் சுழற்சி!

ஆயிரம் கரம் கொண்டு மறைக்க நினைத்தாலும்,
நிசிவெளியின் தினவெடுத்த கர்வ நட்சத்திரங்கள்
சந்திரனில் ஒளிபெற்று
"ஒளி வள்ளல்" சந்திரன் மீதே மீதே இருள்கொண்டு பூசினாலும்
மீண்டும் மீண்டும்
வளர்பிறையாய் துளிர்ப்பது கண்கொள்ளா காட்சி! //


அழகான கருத்து !
நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் இளசு,

//இயற்பியல் வெண்மைக்கு
கவிதை வண்ணப்பூச்சு
வெகு அழகு...

ரசித்தேன்... பாராட்டுகள் ரிஷான்! //

அழகான வரிகள். பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கீதம்,

//மிகவும் அருமை. பாராட்டுகள்! //

தமிழ்மன்றத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே !

ஃபஹீமாஜஹான் said...

ரிஷான்,
கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது.
வழமையான நடையிலிருந்து மாறி எழுதியிருப்பதும் வரவேற்கத் தக்கதே.
வாழ்த்துக்கள்.

பிரவின்ஸ்கா said...

Please visit Here.

http://pravinska.blogspot.com/2009/07/blog-post_23.html

There is a small gift for you.

- Piriyamudan,
pravinska

ரமேஷ் said...

அருமையான கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...

M.Rishan Shareef said...

அன்பின் பஹீமாஜஹான்,

//ரிஷான்,
கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது.
வழமையான நடையிலிருந்து மாறி எழுதியிருப்பதும் வரவேற்கத் தக்கதே.
வாழ்த்துக்கள்.//

ஆமாம்..வழமையான நீண்ட கவிதைகளை விட்டு ஒரு சிறு கவிதை எழுதிப்பார்த்தேன். உங்கள் கருத்தும் வாழ்த்துக்களும் தொடர்ந்தும் என்னை எழுதத் தூண்டுகிறது.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் பிரவின்ஸ்கா,

//Please visit Here.

http://pravinska.blogspot.com/2009/07/blog-post_23.html

There is a small gift for you.

- Piriyamudan,
pravinska//

சிறந்த வலைப்பூவுக்கான விருது உங்களிடமிருந்து கிடைத்ததில் மிகவும் மகிழ்கிறேன்.

நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ரமேஷ்,

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

பிச்சுமணி said...

நன்றாக உள்ளது . எனக்கும் வானம் ரொம்ப பிடிக்கும்
வானம் ஒரு போதி மரம் தான்

M.Rishan Shareef said...

அன்பின் பிச்சுமணி,

கருத்துக்கு நன்றி நண்பரே !