Sunday, December 2, 2007

எனக்கு பத்து விழிகள் !



















எனக்குப் பத்து விழிகள் 
ஒவ்வொன்றும்
என் விரல் நுனிகளில்
இமைக்கின்றன

தொடுதல் எனது பார்வை 
தடவுதல் எனது
கண்மணிச் சுழற்சி 

எனதான உலகத்தில்,
இறந்த காலங்கள் எவையும்
காட்சிகளால் ஆனவையல்ல;
நினைவுகள் எவையும்
நிறங்களால் சூழ்ந்தவையல்ல

எனக்குரிய தேசம் - பல
வர்ணங்கள் பூசப்பட்டதல்ல.
வசந்தம் செறிந்த காலத்தில்
வாசனை பல வீசும்
பூஞ்சோலையுமல்ல - அது
இருளினால் மட்டுமேயான
தனியொரு உலகம் 

வானவில் என்ற ஒன்று
ஏழு வர்ணங்களினாலாகி
மேகத்தினிடை எட்டிப் பார்க்குமென
நீங்கள் சொன்ன கணத்தினில்
எனது வானிலுமொரு
வானவில் தோன்றியது,
இருளை மட்டும் உடுததுக் கொண்டு 

இருள் எனக்கு
அச்சமூட்டுவதில்லையெனினும்
இருண்டு, கல்லாகிப் போன
இதயததுடனுலவும்
விழிப்புலனுள்ளவர்களிடம்தான்
எனது அச்சங்களெல்லாம் 

-எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை ,
இலங்கை.

5 comments:

Anonymous said...

Oi, achei seu blog pelo google está bem interessante gostei desse post. Gostaria de falar sobre o CresceNet. O CresceNet é um provedor de internet discada que remunera seus usuários pelo tempo conectado. Exatamente isso que você leu, estão pagando para você conectar. O provedor paga 20 centavos por hora de conexão discada com ligação local para mais de 2100 cidades do Brasil. O CresceNet tem um acelerador de conexão, que deixa sua conexão até 10 vezes mais rápida. Quem utiliza banda larga pode lucrar também, basta se cadastrar no CresceNet e quando for dormir conectar por discada, é possível pagar a ADSL só com o dinheiro da discada. Nos horários de minuto único o gasto com telefone é mínimo e a remuneração do CresceNet generosa. Se você quiser linkar o Cresce.Net(www.provedorcrescenet.com) no seu blog eu ficaria agradecido, até mais e sucesso. If is possible add the CresceNet(www.provedorcrescenet.com) in your blogroll, I thank. Good bye friend.

Madhan Karky said...

அழகான எண்ணங்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

M.Rishan Shareef said...

எனது விருப்பத்துக்குரிய பெருங்கவிஞரின் அருமைப்புதல்வரின் உற்சாகமூட்டும் வரிகளுடனான வாழ்த்துக்கள், மகிழ்ச்சிப் பூக்கள் மனதிலே இதழ் விரித்தாடச் செய்தது.நன்றிகள் நண்பர் மதன் கார்க்கி.தொடர்ந்து எழுதுவேன்.

Unknown said...

பிறவியிலேயே கண்ணில்லாதவரின் பார்வை நன்றாக இருக்கிறாது!

பிறவியிலேயே பார்வையற்றவர் காணும் கனவுகளைக் காண நமக்கு வழியில்லை. அவர் அனுபவித்தே காண்பார்!

ஊமைகளுக்கு நான் முன்பு எப்போதோ எழுதிய கவிதையொன்று ஞாபகம் வருகிறது

வாழ்த்துக்கள் ரிஷான்!

M.Rishan Shareef said...

அன்புடன் புகாரி.,உங்கள் வருகை என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே.