Wednesday, September 1, 2010

தூறல் மழைக் காலம்

குளிர் காற்றினூடான வானம்
இளநீலம்

மெல்லிய நீர்த்துளிகள்
இசை சேர்த்து வந்து
மேனி முழுதும் தெளிக்கின்றன
நீண்ட காலங்களாக
சேகரித்து வைத்த அன்பை

அமானுஷ்ய ஈரத்தோடு
தளிர் விட்டிருக்கும் அகத்தி
பெண் நெற்றிப் பொட்டு வடிவ
பச்சை நீளிலை மரத்தில்
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்
ஏழெட்டுக் கிளிகள்
செந்நிறச் சொண்டுகளுடன்
மாதுளம்பூக்கள்

தனிமையை அணைத்தபடி
அடுத்த பாடலை
நான் ஆரம்பிக்கலாம்
அதன் பிண்ணனியில்
மழையும்
நதியின் ஈரலிப்பும்
குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்

நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

09012010

நன்றி
# வீரகேசரி வார இதழ் 22.08.2010
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை

25 comments:

rvelkannan said...

//ஏழெட்டுக் கிளிகள்
செந்நிறச் சொண்டுகளுடன்
மாதுளம்பூக்கள்

தனிமையை அணைத்தபடி
அடுத்த பாடலை
நான் ஆரம்பிக்கலாம்//
மனதை ஏதோ செய்யும் வரிகள் நண்பரே, முழு கவிதையிலிருந்து பார்க்கும்போது
//நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்//
வேண்டாம் .. தனிமையே இனிமைதான் என்னை பொறுத்த வரை
அனைத்திற்கும். வாழ்த்துகள்... நண்பரே

Mohamed Faaique said...

nallayirukku....

வியாசன் said...

உங்களுடன் சேர்ந்து நானும் மழைக்காலத்தை இரசித்தேன்

shammi's blog said...

It has been raining in and out with your words...the visualization of the poem is impeccable ....

பூங்குழலி said...

சாரல் மழையில் தேநீர் பருகிய ஒரு மென்மையான வெதுவெதுப்பை தரும் கவிதை ரிஷான் .ஆரம்ப சில வரிகள் உங்களுடையவை போலில்லை

குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்

இப்படியே இனிமையாக உங்களின் கவிதைகள் தொடர வாழ்த்துகள் .

நீயும் என்னோடிருந்திருக்கலாம்

அதானே பார்த்தேன் ....ஒரு இழையேனும் சோகம் வரவில்லை என்றால்

ஃபஹீமாஜஹான் said...

"மெல்லிய நீர்த்துளிகள்
இசை சேர்த்து வந்து
மேனி முழுதும் தெளிக்கின்றன
நீண்ட காலங்களாக
சேகரித்து வைத்த அன்பை"
மழையும் வீடு திரும்பிய மகிழ்வும் கொடுத்தவரிகள் நன்றாக உள்ளன.

"மழையும்
நதியின் ஈரலிப்பும்
குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்

நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்"

பிரிவுகளை யாராலும் தடுக்க முடியாது. நாம் விரும்பியோ விரும்பாமலோ அது நமது தலையில் துயரத்தை எழுதிக் கொண்டே போய்விடும்....

வாழ்த்துக்கள் ரிஷான்

பாரதி said...

எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் போது இறுதி வரிகள் தேவையான வடிவைத் தந்திருக்கிறது.

தூறல் காலம் தொடர்மழை காலமாகட்டும் நண்பரே.

நம்பி said...

கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

ஆதவா said...

மனசுதான் ரிஷான்.
மனம் குளுகுளுவெனெ இருந்தால் அதனுள்ளே இருப்பவர்கள் கட்டியணைத்தபடி இருப்பார்கள்...
ஓவரா சம்மரடிச்சா...... தூசிகூட இருக்காது!

நீ என்பது நீயாக மட்டுமில்லை. நீ, யாராகவேண்டுமானாலும் இருக்கலாம். (எதுவாகவும்)
அந்த ஆதங்கம் எல்லாருக்கும் நிகழ்வதுதான் ரிஷான்.
ஒரு கதகதப்பான அந்த மாலைப் பொழுதில் அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே ‘நீ’ யாக இருந்தது என் அண்ணன்.
என் அம்மாவுக்கு அது “பகவான் கிருஷ்ணன்”

வாழ்த்துக்கள் ரிஷான்.

த.நிவாஸ் said...

பருவகாலங்களில் எனக்குப் மிகவும் பிடித்த மழைக்காலம், ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு எண்ணத்தின் சாரல் என்னுள் வீசிக்கொண்டே இருக்கும், அதனை அனுபவிக்க ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழத்தூண்டும்.

நன்றி ரிஷான்

எஸ்.எம்.சுனைத் ஹசனீ said...

கவிதைக்கான சூழலை தேர்வுசெய்த விதமும் அதை வருடித்த உணர்வுகளும் மிக்க நன்று ரிஸான்.

M.Rishan Shareef said...

அன்பின் வேல் கண்ணன்,

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் முஹம்மத் ஃபாயிக்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் வியாசன்,

//உங்களுடன் சேர்ந்து நானும் மழைக்காலத்தை இரசித்தேன்//

:-)
நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஷம்மி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :-)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//சாரல் மழையில் தேநீர் பருகிய ஒரு மென்மையான வெதுவெதுப்பை தரும் கவிதை ரிஷான் .ஆரம்ப சில வரிகள் உங்களுடையவை போலில்லை

குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்

இப்படியே இனிமையாக உங்களின் கவிதைகள் தொடர வாழ்த்துகள் .//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :-)

//நீயும் என்னோடிருந்திருக்கலாம்

அதானே பார்த்தேன் ....ஒரு இழையேனும் சோகம் வரவில்லை என்றால்//

:-)))))))

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமாஜஹான்,

//பிரிவுகளை யாராலும் தடுக்க முடியாது. நாம் விரும்பியோ விரும்பாமலோ அது நமது தலையில் துயரத்தை எழுதிக் கொண்டே போய்விடும்....//

நிச்சயமாக சகோதரி..பிரிவு ஒரு வலிமையான திரவம் போல உருகி மனதோடு ஒட்டிப் படிந்து கல்லாகி விடுகிறது. அதைப் பிறகு அகற்றுவது சிரமம்தான்..ஒவ்வொரு முறை சுரண்டியகற்ற முயற்சிக்கையிலும் வலிதான் மிகும். இல்லையா?

//வாழ்த்துக்கள் ரிஷான்//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் நம்பி,

//கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!//

கருத்துக்கு நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவா,

//மனசுதான் ரிஷான்.
மனம் குளுகுளுவெனெ இருந்தால் அதனுள்ளே இருப்பவர்கள் கட்டியணைத்தபடி இருப்பார்கள்...
ஓவரா சம்மரடிச்சா...... தூசிகூட இருக்காது!

நீ என்பது நீயாக மட்டுமில்லை. நீ, யாராகவேண்டுமானாலும் இருக்கலாம். (எதுவாகவும்)
அந்த ஆதங்கம் எல்லாருக்கும் நிகழ்வதுதான் ரிஷான்.
ஒரு கதகதப்பான அந்த மாலைப் பொழுதில் அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே ‘நீ’ யாக இருந்தது என் அண்ணன்.
என் அம்மாவுக்கு அது “பகவான் கிருஷ்ணன்”//

மிக அருமையான, அழகான கருத்து ஆதவா.

//வாழ்த்துக்கள் ரிஷான்.//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் த.நிவாஸ்,

//பருவகாலங்களில் எனக்குப் மிகவும் பிடித்த மழைக்காலம், ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு எண்ணத்தின் சாரல் என்னுள் வீசிக்கொண்டே இருக்கும், அதனை அனுபவிக்க ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழத்தூண்டும்.

நன்றி ரிஷான்//

எனக்கும் தான்..மழை..உள்ளும் புறமும் குளிர்மையைத் தூண்டும்..ஈர வாசனை மனதை நெகிழ்விக்கும் எப்பொழுதும்..!

கருத்துக்கு நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் எஸ்.எம். சுனைத் ஹஸனீ,

//கவிதைக்கான சூழலை தேர்வுசெய்த விதமும் அதை வருடித்த உணர்வுகளும் மிக்க நன்று ரிஸான்.//

:-)
கருத்துக்கு நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் பாரதி,

//எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் போது இறுதி வரிகள் தேவையான வடிவைத் தந்திருக்கிறது.

தூறல் காலம் தொடர்மழை காலமாகட்டும் நண்பரே.//

உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும்.
கருத்துக்கு நன்றி நண்பரே :-)

மாதேவி said...

அழகிய தூறல் மழை.

Unknown said...

நல்லாருக்கு....

mohamedali jinnah said...

ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் !
http://nidurseason.wordpress.com/
இணையத்திற்கு வந்து கருத்துக்களை அற்புதமாய் தாருங்கள் .