Friday, January 1, 2010

குழந்தைகள்... கோப்பைகள்...

(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

அறைகள் தோறும்
தரை முழுதும்
இரைந்துகிடந்தன கோப்பைகள்
ஊர்வன ஜந்தொன்றைப் போல
வயிற்று மேட்டினால்
ஊர்ந்துவந்த குழந்தை
முதலெடுத்த கோப்பையினை
வாயிலிட்டு நக்கிப் பின்னர்
பிடிக்காத பாண்டமெனத் தூக்கியெறிந்தது
கண்ணாடிச் சன்னலில் பட்டுச்
சிதறியன இரண்டும்
குழந்தைக் காப்பாளி வந்தாள்
சபிக்கப்பட்ட அசுத்த வார்த்தைகளை
எஞ்சிய கோப்பைகளில் நிறைத்துக்
குழந்தை முன் நீட்ட
புது மொழியொன்றினைக் கற்றுக்கொண்டது
காப்பரணில் விடப்பட்ட தூய குழந்தை

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை




69 comments:

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஆதவா said...

அன்பு ரிஷான்,

கவிதை மிக அருமை. நீங்கள் போட்டியில் வென்றிட வாழ்த்துகள்.
அறைகள் தோறும் எனும் தமிழ்பதம் சரியானதா என்று தெரியவில்லை. பெரியவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.

அன்புடன்
ஆதவா

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான கவிதை. வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் ரிஷான்!

தமிழ் said...

அருமை

வாழ்த்துகள்

Muruganandan M.K. said...

நல்ல கவிதை. போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஃபஹீமாஜஹான் said...

"சபிக்கப்பட்ட அசுத்த வார்த்தைகளை
எஞ்சிய கோப்பைகளில் நிறைத்துக்
குழந்தை முன் நீட்ட
புது மொழியொன்றினைக் கற்றுக்கொண்டது
காப்பரணில் விடப்பட்ட தூய குழந்தை'

அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள் ரிஷான்.

ஆசாத் said...

நல்லாருக்கு ரிஷான்!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பு ரிஷான்,
கவிதையின் வரிகள் நன்றாக இருக்கின்றன.
குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விடயத்தை தாங்கள் கையிலெடுத்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அமரன் said...

குழந்தைகள் பசுமரம்.

நம் செயல்கள் ஆணிகள்..

ஆறாவது அறிவின் விருத்தியை அப்பட்டமாக்கிய விதத்தில் கவிதை பளிச்சிடுகிறது.

தஞ்சை மீரான் said...

நல்லா இருக்கு ரிஷான்.

"ஊர்வன ஜந்தொன்றைப் போல" - இது எனக்கு புரியவில்லை.

கா.ரமேஷ் said...

நல்லதொரு கவிதை தோழரே...

குழந்தைகள் கெட்டிக்காரர்கள் அவர்களை நல்லவழியில் கெட்டிக்காரர்களாக்குவது மிகவும் அவசியம்...

காயத்ரி said...

//எஞ்சிய கோப்பைகளில் நிறைத்துக்
குழந்தை முன் நீட்ட
புது மொழியொன்றினைக் கற்றுக்கொண்டது
காப்பரணில் விடப்பட்ட தூய குழந்தை//

பெரும்பாலும் உண்மையாகவே இருக்கிறது....
அருமையான கவிதை... வெற்றி பெற வாழ்த்துக்கள் ரிஷான்...

ரா.புஷ்பா said...

குழந்தை காப்பகங்களில் பெரும்பாலும் இது நடப்பது உண்டு.
அதை விட கொடுமை அழும் குழந்தைகளை தூங்க வைப்பது பற்றி
சொல்லில் அடங்கா.

thiyaa said...

அருமையான கவிதை
நல்ல வரிகள்
நடையும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுகள்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

கானா பிரபா said...

சிறப்பானதொரு கவிதை

மாதேவி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கவிதை அருமை. வெற்றிக்கு வாழ்த்துக்கள் ரிஷான்.

பூங்குழலி said...

சபிக்கப்பட்ட அசுத்த வார்த்தைகளை
எஞ்சிய கோப்பைகளில் நிறைத்துக்
குழந்தை முன் நீட்ட
புது மொழியொன்றினைக் கற்றுக்கொண்டது
காப்பரணில் விடப்பட்ட தூய குழந்தை

ரொம்ப நிதர்சனமா இருக்கு ரிஷான் .ஆனால் என்ன செய்வது இவை இல்லாமல் இன்றைய நாளில் குழந்தை வளர்ப்பது சிரமமே

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அருமை....அருமை....

வெற்றி பெற வாழ்த்துகள்

-ப்ரியமுடன்
சேரல்

அன்புடன் மலிக்கா said...

முதல் முறை வருகிறேன்,தாங்களின் கவிதைகள் அருமை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நானும் உரையடல்போட்டிக்காக எழுதிய கவிதை ஒன்று இதோ

http://niroodai.blogspot.com/2009/12/blog-post_07.html

நேரம்கிடைகும்போது இதையும் பாருங்கங்கள்
http://fmalikka.blogspot.com/

அன்புடன் மலிக்கா

அன்புடன் மலிக்கா said...

முதல் முறை வருகிறேன்,தாங்களின் கவிதைகள் அருமை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நானும் உரையடல்போட்டிக்காக எழுதிய கவிதை ஒன்று இதோ

http://niroodai.blogspot.com/2009/12/blog-post_07.html

நேரம்கிடைகும்போது இதையும் பாருங்கங்கள்
http://fmalikka.blogspot.com/

அன்புடன் மலிக்கா

சுபலலிதா said...

பதினேழு வரித் திருக்குறளாக எனக்கு தெரிந்தது தங்களது கவிதை ....

அவனி அரவிந்தன் said...

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சமூகத்தினர் அவசியம் படிக்க வேண்டிய கவிதை. மிக அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்குங்க ரிஷான். வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்னு சொல்லத் தோனுது.

லிஸ்ட்ல 27-வது கவிதையும் பாருங்க நேரம் கிடைக்கும்போது.

புதுவைப்பிரபா said...

அன்பரே. . .
செறிவான கவிதை.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

புதுவைப்பிரபா

M.Rishan Shareef said...

அன்பின் சூர்யா கண்ணன்,

//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்//

உங்களுக்கும் புத்தாண்டு+ பொங்கல் வாழ்த்துக்கள் !

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவா,

//அன்பு ரிஷான்,

கவிதை மிக அருமை. நீங்கள் போட்டியில் வென்றிட வாழ்த்துகள்.
அறைகள் தோறும் எனும் தமிழ்பதம் சரியானதா என்று தெரியவில்லை. பெரியவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.//

நீண்ட நாட்களின் பின்னர் உங்களைக் காண்கிறேன்..நலமா நண்பரே?

அறைகள் தோறும் = எல்லா அறைகளிலும்.

விசாரித்தேன்..சரியாகத்தான் இருக்கிறது நண்பரே.

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//மிக அருமையான கவிதை. வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் ரிஷான்!//

:)
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் திகழ்,

//அருமை

வாழ்த்துகள்//

:)
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் டொக்டர்,

//நல்ல கவிதை. போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் டொக்டர்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி டொக்டர் !

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமாஜஹான்,

//"சபிக்கப்பட்ட அசுத்த வார்த்தைகளை
எஞ்சிய கோப்பைகளில் நிறைத்துக்
குழந்தை முன் நீட்ட
புது மொழியொன்றினைக் கற்றுக்கொண்டது
காப்பரணில் விடப்பட்ட தூய குழந்தை'

அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள் ரிஷான்.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி!

M.Rishan Shareef said...

அன்பின் ஆசாத் ஜி,

//நல்லாருக்கு ரிஷான்!//

நன்றி ஜி :)

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

//அன்பு ரிஷான்,
கவிதையின் வரிகள் நன்றாக இருக்கின்றன.
குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விடயத்தை தாங்கள் கையிலெடுத்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் அமரன்,

//குழந்தைகள் பசுமரம்.

நம் செயல்கள் ஆணிகள்.. //

நிச்சயமாக நண்பரே. அவர்கள் நம்மிலிருந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள்.

//ஆறாவது அறிவின் விருத்தியை அப்பட்டமாக்கிய விதத்தில் கவிதை பளிச்சிடுகிறது.//

:)
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் தஞ்சை - மீரான்,

//நல்லா இருக்கு ரிஷான்.

"ஊர்வன ஜந்தொன்றைப் போல" - இது எனக்கு புரியவில்லை.//


'ஊர்வன ஜந்து' என்றால்

ஊர்வன (Reptile) என்பவை முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். இவை குளிர் இரத்தம் கொண்டவை. இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. தங்கள் வயிற்றைப் பயன்படுத்தி தரையில் ஊர்ந்து செல்பவை. பெரும்பாலானவை கால்களைக் கொண்டுள்ளன. ஆனால் பாம்புகள் கால்கள் அற்றவை.
ஊர்வனவற்றின் பட்டியல்

* ஆமை
* பாம்பு
* முதலை
* பல்லி
* புழு, மண்புழு
* நத்தை
* அட்டை
* ஓணான்
* உடும்பு

கருத்துக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கா.ரமேஷ்,

//நல்லதொரு கவிதை தோழரே...

குழந்தைகள் கெட்டிக்காரர்கள் அவர்களை நல்லவழியில் கெட்டிக்காரர்களாக்குவது மிகவும் அவசியம்...//

நிச்சயமாக நண்பரே.
கருத்துக்கு நன்றி !

M.Rishan Shareef said...

அன்பின் புஷ்பா,

//குழந்தை காப்பகங்களில் பெரும்பாலும் இது நடப்பது உண்டு.
அதை விட கொடுமை அழும் குழந்தைகளை தூங்க வைப்பது பற்றி
சொல்லில் அடங்கா......//


நிச்சயமாக சகோதரி.
கருத்துக்கு நன்றி !

M.Rishan Shareef said...

அன்பின் காயத்ரி,

//எஞ்சிய கோப்பைகளில் நிறைத்துக்
குழந்தை முன் நீட்ட
புது மொழியொன்றினைக் கற்றுக்கொண்டது
காப்பரணில் விடப்பட்ட தூய குழந்தை//

பெரும்பாலும் உண்மையாகவே இருக்கிறது....
அருமையான கவிதை... வெற்றி பெற வாழ்த்துக்கள் ரிஷான்...//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் தியாவின் பேனா,

//அருமையான கவிதை
நல்ல வரிகள்
நடையும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுகள்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.//

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கானாபிரபா,

//சிறப்பானதொரு கவிதை//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மாதேவி,

//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கவிதை அருமை. வெற்றிக்கு வாழ்த்துக்கள் ரிஷான்.//

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//சபிக்கப்பட்ட அசுத்த வார்த்தைகளை
எஞ்சிய கோப்பைகளில் நிறைத்துக்
குழந்தை முன் நீட்ட
புது மொழியொன்றினைக் கற்றுக்கொண்டது
காப்பரணில் விடப்பட்ட தூய குழந்தை

ரொம்ப நிதர்சனமா இருக்கு ரிஷான் .ஆனால் என்ன செய்வது இவை இல்லாமல் இன்றைய நாளில் குழந்தை வளர்ப்பது சிரமமே//

ஆமாம் சகோதரி. இக் காலங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைவுற்றதோடு, பணத்துக்காக அன்பைச் செலுத்தும் யாரிடமோ நமது குழந்தைகளை விட்டுப் போகவேண்டியிருக்கிறது. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சேரல்,

//அருமை....அருமை....

வெற்றி பெற வாழ்த்துகள்//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மலிக்கா,

//முதல் முறை வருகிறேன்,தாங்களின் கவிதைகள் அருமை வெற்றிபெற வாழ்த்துக்கள்.//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சுபலலிதா,

//பதினேழு வரித் திருக்குறளாக எனக்கு தெரிந்தது தங்களது கவிதை ....//

:)
உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!

M.Rishan Shareef said...

அன்பின் அவனி அரவிந்தன்,

//கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சமூகத்தினர் அவசியம் படிக்க வேண்டிய கவிதை. மிக அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்பின் நவாஸுதீன்,

//ரொம்ப நல்லா இருக்குங்க ரிஷான். வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்னு சொல்லத் தோனுது.//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்பின் தேனம்மை லக்ஷ்மணன்,

//மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் புதுவைப் பிரபா,

//அன்பரே. . .
செறிவான கவிதை.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

சுகந்தப்ரீதன் said...

நம் கடமையை மற்றவர்கள் பொறுப்பில் விடும்போது அவர்கள் மட்டும் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?!

அவர்களுக்கு தேவை பொருள்.. பொறுப்பல்ல..!! இது இக்கவிதையில் வருபவரை போன்றவர்களுக்குதான்.. எல்லா காப்பாளர்களுக்கும் பொருந்தாது..!!

நல்லதொரு கவிதை ஷெரீப்..!! வாழ்த்துக்கள்..!!

பத்மா said...

muthal paadam kalanga vaikirathu..ingu illaavittal engeyavathu katru kollum..kalathin kolamithu..
velaiku sellum thaaimarin vayitrai kallakkum kavithai ithu..
all the best rishan
padma

Sakthi said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

பா.ராஜேஷ் said...

நல்ல கவிதை. குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் வேறு, பாதுகாப்பவர்கள் வளர்ப்பதில்லை...

M.Rishan Shareef said...

அன்பின் சுகந்தப்ரீதன்,

//நம் கடமையை மற்றவர்கள் பொறுப்பில் விடும்போது அவர்கள் மட்டும் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?!

அவர்களுக்கு தேவை பொருள்.. பொறுப்பல்ல..!! இது இக்கவிதையில் வருபவரை போன்றவர்களுக்குதான்.. எல்லா காப்பாளர்களுக்கும் பொருந்தாது..!!

நல்லதொரு கவிதை ஷெரீப்..!! வாழ்த்துக்கள்..!! //

கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பத்மா அம்மா,

//muthal paadam kalanga vaikirathu..ingu illaavittal engeyavathu katru kollum..kalathin kolamithu..
velaiku sellum thaaimarin vayitrai kallakkum kavithai ithu..
all the best rishan//

:)
நீண்ட நாட்களின் பின்னரான உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா!

M.Rishan Shareef said...

அன்பின் சக்தியின் மனம்,

//இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எனதினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

M.Rishan Shareef said...

அன்பின் பா.ராஜேஷ்,

//நல்ல கவிதை. குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் வேறு, பாதுகாப்பவர்கள் வளர்ப்பதில்லை... //

நிச்சயமாக நண்பரே.
கருத்துக்கு நன்றி !

பாரதி said...

மேலுமொரு ஜென் கவிதையைப் போல இருக்கிறது நண்பரே...!!

சிவா.ஜி said...

விஷ வார்த்தைகள் கோப்பையில் கொடுக்கப்பட்டக் குழந்தை...

தான் செய்வதின் தாக்கம் அறியா காப்பக பொறுப்பாளர்...

எதிர்கால தூண்கள் இற்றுப்போவதற்கான செல்களாய் சொல்கள்.

அழகான கவிதை ரிஷான். போட்டியிலும் வெற்றிபெற வாழத்துகள்.

M.Rishan Shareef said...

அன்பின் பாரதி,

//மேலுமொரு ஜென் கவிதையைப் போல இருக்கிறது நண்பரே...!! //

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சிவா.ஜி,

//விஷ வார்த்தைகள் கோப்பையில் கொடுக்கப்பட்டக் குழந்தை...

தான் செய்வதின் தாக்கம் அறியா காப்பக பொறுப்பாளர்...

எதிர்கால தூண்கள் இற்றுப்போவதற்கான செல்களாய் சொல்கள்.

அழகான கவிதை ரிஷான். போட்டியிலும் வெற்றிபெற வாழத்துகள். //

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

இன்பக்கவி said...

குழந்தைகள் கற்பூரம் போல சட்டேன்று பற்றி கொள்ளும் அறிவாற்றல் படைத்தவர்கள்
சில காப்பகங்களில் நடக்கும் கொடுமை சொல்லி மாளாது..
சிறு வயதில் சில நினைவுகள் மாறாமல் இருக்கும்...
நன்றாக இருக்கு உங்கள் கவிதை வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்
உழவன்

பா.ராஜாராம் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ரிஷான்! :-)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ரிஷான் ஷெரீப்!

-ப்ரியமுடன்
சேரல்

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் ரிஷான்:)!

யாத்ரா said...

வாழ்த்துகள் ரிஷான்.

Ashok D said...

வாழ்த்துகள் :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்கள்

# இன்பக் கவி
# உழவன்
# பா.ராஜாராம்
# சேரல்
# ராமலக்ஷ்மி
# யாத்ரா
# D.R.அஷோக்

உங்கள் அன்பான வாழ்த்துக்களில் மகிழ்கிறேன். மிகவும் நன்றி அன்பு நண்பர்களே !