மரத்தின் ஆதிக் கிளைகள்
காட்சி கூடத்தில் வனம் பார்க்கும் சிற்பங்களாகின்றன
விருட்சங்களை
வெட்டிச் செல்லும்
விஷமேறிய
பார்வைகளை சிற்பி
காடுகளெங்கிலும்
சுமந்தலையும் செம்மாலை நேரங்களில்
வன
மரங்களின் இலைகளினூடு சூரியனாடும் மஞ்சள் நடனம்
எவ்வளவு
ப்ரியத்துக்குரியது
நச்சேற்றிய
சிற்பியின் பாதங்களிலேயே வீழ்ந்து கிடக்கும் மரங்களில்
அவனது
எண்ணங்களிலிருந்தும் ஆற்றல்களிலிருந்தும் உருவாகிய
வனக்
கொலைகளுக்கான ஆயுதங்கள் தீட்டப்படுகையில்
வன்மங்கள்
கூராகின
இங்கு
தாயின் கரத்திலிருந்துகொண்டே தடவிப் பார்க்கிறது
புராதனச்
சடங்குகளின் பிரிந்த விம்பங்களென
தனித்திருக்கும்
அம் மரச் சிற்ப விலங்குகளால்
எவ்வித
ஆபத்துமில்லையென்பதை உணர்ந்த குழந்தை
பிஞ்சு
விரல்கள் தொட்ட மரங்கள்
உடல்
சிலிர்த்து எழுந்திடப்
பற்றியெரிகிறது
மலைக் காடு
- எம்.ரிஷான் ஷெரீப்
16012012
நன்றி
# உயிர்நிழல் - இதழ் 35 - ஜூலை, 2012
# எதுவரை - இதழ் 06 - நவம்பர், 2012
# உயிர்மை
# திண்ணை
# Artist - Mr. Roshan Dela Bandara
2 comments:
வித்தியாசமான சிந்தனை வரிகள்... அருமை...
அன்பின் தனபாலன்,
//வித்தியாசமான சிந்தனை வரிகள்... அருமை...//
உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.
நன்றி நண்பரே !
Post a Comment