Monday, February 11, 2008

நீ நிழலாய்ப் படரும் வெளிச்சம் !


விடிகாலைத் தூக்கம்,
மழைநேரத் தேனீர்,
பிடித்த செடியின் புதுமொட்டு,
புதுப்புத்தகக் காகிதவாசனை,
இமைதடவும் மயிலிறகு
மேலுரசிடச் சிலிர்க்கும்
ரோமமெனச் சுகமாய்
எனை ஏதும் செய்யவிடாமல்
நீ வந்து நிரப்புகிறாய்
எனதான பொழுதுகளை !

மூங்கில்களுரசிடக்
குழலிசை கேட்குமோ...?
உன் மொழியில்
தினம்தினமொரு இசை
எனைக்கேட்கச் செய்கிறாய் !

புருவம் தடவப் பூஞ்சிரிப்பு
தெற்றுப் பல்காட்டி மின்னும் ;
சிவந்த அழகுக் கன்னமென்
அழுத்தமான முத்தத்தில்
நிறம் மாறி நீலம்பூக்கும் !

விழிகளிரண்டும் மின்மினிப்பூச்சிகளென
விழித்திருந்து அலைபாய
என் தூக்கம் கரைத்துக்குடித்து
நீ புதிதாய் தினம் வளர்வாய் ;
உன்னிமையில் துயில் வளர்க்க
என் பொறுமை சோதிப்பாய் !

எனைப்பெற்றவளின் சுவாசங்களையும்
அத்தனை பதற்றங்களையும்
நானறியச் செய்தாயென்
பிரசவத்தின் இறுதிக்கணங்களில்
நீ வந்து அழுதாய் ;
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க...!

-எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

62 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்து பின்னூட்டம் தர நினைத்தேன்.மீண்டும் வாசித்த போது எதைத் தெரிவது எனத் தெரியவில்லை. வரிகள் நன்று ரிஷான். தொடருங்கள். என்ன மின்னஞ்சல் ஒன்றையும் காணவில்லை?

Anonymous said...

இந்த அனுபவத்தையடைய பெரிய மனது வேண்டும்.உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது.பாராட்டுகிறேன்.

Anonymous said...

assalaamu alaikum,

whenever I read a poem from any srilankan, i feel immensely depressed...and when I realise that it is from one of my brother's heart....i feel myself ashamed, for not bale to do any help..than duas...i dont know why every poem of every srilankan, carries with it a plethora of sadness and nothing else. I pray that Allah SWT bless all the martyrs and their families with His abundant mercy and peaceful Jannah...if it is in Qadr, then, a governance which can help our brethren sincerely, and not sit like a puppet insha Allah.

Iam happy to have found your blog, and read the tamil poems which rejuvenate my soul once again !! Jazakallah Khair.

M.Rishan Shareef said...

நன்றிகள் நிர்ஷன்...:)

மின்னஞ்சல்கள் தான் தினமும் அனுப்புகிறேனே.பார்க்கவில்லையா நண்பா?

M.Rishan Shareef said...

அன்பின் பஹீமா,
அந்த அனுபவங்கள் ஒரு போதும் ஆண்களுக்குக் கிட்டாத கற்பனைகள் மட்டுமே... :)

பாராட்டுக்களுக்கு நன்றிகள் சகோதரி.

M.Rishan Shareef said...

Wa alaikkum salam Amaan,
Im really happy to gt ur comment.
//whenever I read a poem from any srilankan, i feel immensely depressed...and when I realise that it is from one of my brother's heart....i feel myself ashamed, for not bale to do any help..than duas...i dont know why every poem of every srilankan, carries with it a plethora of sadness and nothing else. I pray that Allah SWT bless all the martyrs and their families with His abundant mercy and peaceful Jannah...if it is in Qadr, then, a governance which can help our brethren sincerely, and not sit like a puppet insha Allah //

Please do remember me in your prayers friend.

//Iam happy to have found your blog, and read the tamil poems which rejuvenate my soul once again !!//

Jazakallah Khair.Please visit again Amaan.

naan yaar said...

rishan,

ungaloda indha kavidhai simply superb!!

//விடிகாலைத் தூக்கம்,
மழைநேரத் தேனீர்,
பிடித்த செடியின் புதுமொட்டு,
புதுப்புத்தகக் காகிதவாசனை,
இமைதடவும் மயிலிறகு
மேலுரசிடச் சிலிர்க்கும்
ரோமமெனச் சுகமாய் //


esp indha comparison azhagu...

oru thaaiyaala kooda indha alavuku karpanai seidhu ezhudha mudiyumaa theriyala...vaazhthukal!!

M.Rishan Shareef said...

அன்பின் வாணி,

//oru thaaiyaala kooda indha alavuku karpanai seidhu ezhudha mudiyumaa theriyala...vaazhthukal!!//

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி.. :)

Anonymous said...

the following are that touched me

azhagaka eluthapattirukirathu thola


விடிகாலைத் தூக்கம்,
மழைநேரத் தேனீர்,
பிடித்த செடியின் புதுமொட்டு,
புதுப்புத்தகக் காகிதவாசனை,
இமைதடவும் மயிலிறகு

நீ வந்து நிரப்புகிறாய்
எனதான பொழுதுகளை !

மூங்கில்களுரசிடக்
குழலிசை கேட்குமோ...?
உன் மொழியில்
தினம்தினமொரு இசை
எனைக்கேட்கச் செய்கிறாய் !

புருவம் தடவப் பூஞ்சிரிப்பு

Mahalingam Nireshkumar said...

ம்ம்ம்ம்...
என்னால் என்ன சொல்வதென்று புரியவில்லை. உங்கள் எழுத்துக்கள் என்னை கவர்ந்துவிட்டன்...

பாராட்டுக்கள்

M.Rishan Shareef said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழா... :)

M.Rishan Shareef said...

வாங்க சுரேஷ்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...! :)

Kavinaya said...

ரொம்ப அழகான கவிதை, ரிஷான். படித்து முடித்ததும் சிட்டுக்குருவி ஒன்று சின்ன ஓடையொன்றில் சிறகு நனைத்த பரவசம்...

M.Rishan Shareef said...

வாங்க கவிநயா..! :)

//சிட்டுக்குருவி ஒன்று சின்ன ஓடையொன்றில் சிறகு நனைத்த பரவசம்...//

உங்கள் பெயரைப் போலவே அழகான வர்ணனை உங்களது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

மிதக்கும்வெளி said...

மென்மையான உணர்வுகள். டெம்ப்ளேட்டைப் பார்த்தவுடன் ஒருகணம் தவறுதலாக என் வலைப்பூவைத்தான் திறந்துவிட்டேனோ என்று குழம்பிப்போனேன். வாழ்த்துக்கள்!

M.Rishan Shareef said...

அன்பின் சுகுணா திவாகர்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

முபாரக் said...

அன்பின் ரிஷான்,
நன்றாகவிருக்கின்றன உங்கள் கவிதைகள்.

M.Rishan Shareef said...

அன்பின் முபாரக்,

எனது வலைத்தளத்திற்கு உங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்.
உங்கள் வரவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

கோகுலன் said...

வாவ்..

//எனைப்பெற்றவளின் சுவாசங்களையும்
அத்தனை பதற்றங்களையும்
நானறியச் செய்தாயென்
பிரசவத்தின் இறுதிக்கணங்களில்
நீ வந்து அழுதாய் ;
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க...! //

அருமை.. அர்ருமை..

MSK / Saravana said...

நல்ல கவிதை..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

நல்லாருக்கு ரிசான்

M.Rishan Shareef said...

நன்றி தேனுஷா :)

Anonymous said...

அன்பு நண்பரே
அனைத்து வரிகளும்
அருமை அருமை அருமை
அம்மா என் அருகே தெரிகிறார்

M.Rishan Shareef said...

அன்பின் துரை,

//அன்பு நண்பரே
அனைத்து வரிகளும்
அருமை அருமை அருமை
அம்மா என் அருகே தெரிகிறார்//


நன்றி நண்பரே :)

Anonymous said...

//சுகமாய்
எனை ஏதும் செய்யவிடாமல்
நீ வந்து நிரப்புகிறாய்
எனதான பொழுதுகளை//
அருமை


//புருவம் தடவப் பூஞ்சிரிப்பு
தெற்றுப் பல்காட்டி மின்னும்
சிவந்த அழகுக் கன்னமென்
அழுத்தமான முத்தத்தில்
நிறம் மாறி நீலம்பூக்கும்//

அத்தனை இனிமையாக இருக்கிறது

//நீ வந்து அழுதாய்
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க//

மனதை அள்ளும் வர்ணனைகள் ,எல்லாம் முடித்து அழகாக அன்பை அழுத்தமாக
பதித்திருக்கிறீர்கள் ..
வித்தியாசமான கவிதை ரிஷான் உங்களிடமிருந்து ...
ரசித்து படித்தேன்

Anonymous said...

அன்பின் ரிஷான்,

அன்பான அன்னையின் சிறப்புக்களை வார்த்தைகளின் துணை கொண்டு
வடித்திருக்கிறீர்கள் அருமையான கவிதையாய்.

பாராட்டுக்கள்

அன்புடன்
சக்தி

Anonymous said...

மிகவும் அழகான வரிகள் ரிஷி

Anonymous said...

//தினம்தினமொரு இசை
எனைக்கேட்கச் செய்கிறாய்//


//உன்னிமையில் துயில் வளர்க்க
என் பொறுமை சோதிப்பாய் //


//பிரசவத்தின் இறுதிக்கணங்களில்
நீ வந்து அழுதாய்
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க...//


வித்தியாசமானக் கவிதை ரிஷ்....எனக்கு பிடித்த வரிகளை சாய்த்து எழுதியிருக்கிறேன்....அருமை!

அதுவும் இந்த வரிகளை அப்படியே உணர்ந்திருக்கிறேன்....

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,
அழுத்தமான அன்பு உங்கள் அழகான சொற்பிரயோகம் சகோதரி.. அம்மாக்களிடமே இதனைக் காணலாம்.. :)


//வித்தியாசமான கவிதை ரிஷான் உங்களிடமிருந்து ...
ரசித்து படித்தேன்//


கருத்துக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சக்தி சக்திதாசன்,



//அன்பான அன்னையின் சிறப்புக்களை வார்த்தைகளின் துணை கொண்டு

வடித்திருக்கிறீர்கள் அருமையான கவிதையாய்.

பாராட்டுக்கள்//


அன்பான கருத்திற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சிவா,

//மிகவும் அழகான வரிகள் ரிஷி//


நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் காந்தி,
நன்றி சகோதரி :)



//அதுவும் இந்த வரிகளை அப்படியே உணர்ந்திருக்கிறேன்....//


ஆமாம்..நீண்ட கால வலிகள் நிறைந்த காத்திருப்பு...எந்தக் குறையுமில்லாமல் பெற்றெடுத்த ஆசுவாசம், தாயான பெருமிதம், ஒரு நிறைவு..எல்லாம் கலந்த ஒரு புன்னகை அது....இல்லையா சகோதரி ?

Anonymous said...

நிழலாய்ப் படர்ந்த வெளிச்சம்
நெஞ்சினைத் தென்றலாய் வருடியது
முத்தமிட்டால் நீல நிறமா?
கற்பனையின் கதிர் வீச்சில்
எண்ணத்திலும் நீல நிறம்
சொற்சிலம்பக் கவிஞன் நீ

பெற்றவளின் சுவாசங்களை,
பதற்றங்களைப் புரிய வைக்க,
புரிய வைத்த
இன்னொரு பிரசவம்

பிள்ளையின் அழுகுரலில்
பிறந்ததுவோ புன்னகை
நகை மலர்ந்த இடம்
அம்மாவின் முகம்

ரசித்தேன்

சீதாம்மா

M.Rishan Shareef said...

அன்பின் சீதாலக்ஷ்மி அம்மா,

மிக அழகான வரிகளில் கருத்தினைச் சொல்கிறீர்கள். மகிழ்ந்தேன். சின்னச் சிறு குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அழுந்த முத்தமிட்டால் ஒரு வகையான பச்சையும், நீலமும் கலந்த வண்ணம் உண்டாகி மறையுமல்லவா ? அதைத்தான் இதில் குறிப்பிட்டிருக்கிறேன் அம்மா.

கவிதையை மிகச் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள் அம்மா. ஏனோ அப்பாக்களை விடவும் பெரும்பாலான அம்மாக்களை ஈர்த்த கவிதையிது.

அன்பான கருத்துக்கு நன்றி அம்மா :))

Anonymous said...

அன்பு ரிஷான் தாயின் உணர்வுகளும் சேயின் செயல்களும் அருமையாகப்
படைக்கப்பட்டிருக்கின்றன நன்றாக இருக்கிறது

Anonymous said...

தாய்மையின் உணர்வை ஒரு பெண்ணின் பார்வையில் மிக உணர்வுபூர்வமாக...

படிக்கும் யாருக்கும் ஆசையே வருமோ இத்தாய்மையைப்பார்த்து..?

ரசித்தேன்...

Anonymous said...

விடிகாலைத் தூக்கம்
மழைநேரத் தேனீர்
பிடித்த செடியின் புதுமொட்டு
புதுப்புத்தகக் காகிதவாசனை
இமைதடவும் மயிலிறகு <<<


இந்த இதமான வரிகளை மிகவும் ரசித்தேன் ரிஷான். எல்லோருக்குமே பிடிக்கும் அந்த மழைகால கருப்புத்தேனீர்


மேலுரசிடச் சிலிர்க்கும்
ரோமமெனச் சுகமாய்
எனை ஏதும் செய்யவிடாமல்
நீ வந்து நிரப்புகிறாய்
எனதான பொழுதுகளை <<<

அன்பு ஆதிக்கம் செய்யால் செய்யும் ஆளுமை இருக்கிறதே அது பேரானந்தம்.




மூங்கில்களுரசிடக்
குழலிசை கேட்குமோ...
உன் மொழியில்
தினம்தினமொரு இசை
எனைக்கேட்கச் செய்கிறாய் <<<

குழலினிது யாழினிது என்பர்.....




புருவம் தடவப் பூஞ்சிரிப்பு
தெற்றுப் பல்காட்டி மின்னும்
சிவந்த அழகுக் கன்னமென்
அழுத்தமான முத்தத்தில்
நிறம் மாறி நீலம்பூக்கும் <<<

அவ்வளவு ஆழமாகவா? முத்தம்? குழந்தை கடியாய் இருக்குமோ?



விழிகளிரண்டும் மின்மினிப்பூச்சிகளென
விழித்திருந்து அலைபாய
என் தூக்கம் கரைத்துக்குடித்து
நீ புதிதாய் தினம் வளர்வாய்
உன்னிமையில் துயில் வளர்க்க
என் பொறுமை சோதிப்பாய் <<<

சுகமான சுகம்....



எனைப்பெற்றவளின் சுவாசங்களையும்
அத்தனை பதற்றங்களையும்
நானறியச் செய்தாயென்
பிரசவத்தின் இறுதிக்கணங்களில்
நீ வந்து அழுதாய்
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க...<<<


உணர்ந்து எழுதி இருக்கின்றீர்கள் ரிஷான். பெண்மையைப் பூரணப்படுத்துவதே தாய்மை'தான்...தாயாகலாம் ஆனால் எல்லோருக்கும் தாய்மை வந்துவிடுவதில்லை. உங்கள் வரிகளில் தாய்மையின் மேன்மை தொட்டுத்தாலாட்டுகின்றது.

Anonymous said...

தாய்மை பற்றிய கவிதையில் அந்த வரிகள் மட்டும் கொஞ்சம் நெருடியது!

புருவம் தடவப் பூஞ்சிரிப்பு
தெற்றுப் பல்காட்டி மின்னும்
சிவந்த அழகுக் கன்னமென்
அழுத்தமான முத்தத்தில்
நிறம் மாறி நீலம்பூக்கும்

இந்தக் கவிதை தாய்மையில் எழுதியதா, இல்லை பிரசவ நேரத்தில் எழுதியதா, அல்லது பிறந்து வளர்த்தபின் எழுதியதா?
எல்லா உணர்வுகளும் இதில் இருக்கின்றன.
படிக்க நல்லாயிருக்கு!

Anonymous said...

கவிதை மிக மிக அருமை நண்பரே ..ரசித்தேன் ...
நன்றிகளுடன்

அன்புடன்
விஷ்ணு

M.Rishan Shareef said...

அன்பின் விசாலம் அம்மா,

//அன்பு ரிஷான் தாயின் உணர்வுகளும் சேயின் செயல்களும் அருமையாகப்
படைக்கப்பட்டிருக்கின்றன நன்றாக இருக்கிறது//


அன்பான கருத்திற்கு நன்றி அம்மா :)

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி,

//தாய்மையின் உணர்வை ஒரு பெண்ணின் பார்வையில் மிக உணர்வுபூர்வமாக...//

குழந்தைகள் சூழ வளர்ந்த எனது கடந்த காலங்கள் ஏதோ ஒரு தாய்மையுணர்வை என்னுள் விட்டுச் சென்றிருக்கிறது போல.. :)


//படிக்கும் யாருக்கும் ஆசையே வருமோ இத்தாய்மையைப்பார்த்து..?

ரசித்தேன்...//


எல்லா ஆண்களுக்குள்ளும் தாய்மை இருக்கிறது..அளவுகளில் தான் வித்தியாசம்.. ஆனால் பெண்களுக்குள்தான் முழுமையான தாய்மை உணர்வு இருக்கிறது..பெற்றெடுப்பவர்களாயிற்றே... :)

கருத்துக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் விஜி சுதன்,


//உணர்ந்து எழுதி இருக்கின்றீர்கள் ரிஷான். பெண்மையைப் பூரணப்படுத்துவதே தாய்மை'தான்...தாயாகலாம் ஆனால் எல்லோருக்கும் தாய்மை வந்துவிடுவதில்லை. உங்கள் வரிகளில் தாய்மையின் மேன்மை தொட்டுத்தாலாட்டுகின்றது.//


தாய்த் தேசத்தைப் பிரியும் வரையிலான எனது ஒவ்வொரு நாட்களும் குழந்தைகளுடனேயே கழிந்தன. வீட்டைச் சூழவுமிருந்த எல்லாக் குழந்தைகளும் எனதன்பான நண்பர்கள்..கல்வி, விளையாட்டு, செல்லமான கண்டிப்பு என எல்லாவற்றிலும் கலந்திருந்தோம். காலம் எங்களைக் கைகளில் எடுத்து தேசத்துக்கொன்றாய்ப் பிரித்துப் போட்டதில் இது போன்ற கவிதைகளே இன்று எஞ்சியுள்ளன.

கருத்துக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சங்கர் குமார்,

//தாய்மை பற்றிய கவிதையில் அந்த வரிகள் மட்டும் கொஞ்சம் நெருடியது!

புருவம் தடவப் பூஞ்சிரிப்பு
தெற்றுப் பல்காட்டி மின்னும்
சிவந்த அழகுக் கன்னமென்
அழுத்தமான முத்தத்தில்
நிறம் மாறி நீலம்பூக்கும்

இந்தக் கவிதை தாய்மையில் எழுதியதா, இல்லை பிரசவ நேரத்தில் எழுதியதா, அல்லது பிறந்து வளர்த்தபின் எழுதியதா?
எல்லா உணர்வுகளும் இதில் இருக்கின்றன.
படிக்க நல்லாயிருக்கு! //


குழந்தை பிறந்து வளரும் பருவத்தில் அதன் ஒவ்வொரு செயலையும் தாயின் மொழியில் கவிதையாக்க முயன்றிருக்கிறேன்.. இறுதிப்பத்தியில் அத்தாய் தன்னைப் பெற்ற தாயை எண்ணிப்பார்க்கிறாள்..

கருத்திற்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் விஷ்ணு ராஜன்,

//கவிதை மிக மிக அருமை நண்பரே ..ரசித்தேன் ...
நன்றிகளுடன்

அன்புடன்
விஷ்ணு //

அன்பான கருத்திற்கு நன்றி நண்பரே :)

Anonymous said...

ரிஷான் நல்ல கவிதை

Anonymous said...

இனிய ரிஷான்,

உங்கள் கவிதைகள் கவிதைகள் மட்டுமல்ல; வாசகனுக்கு
அழகியதொரு அனுபவத்தையும் அவை உள்வைத்திருக்கின்றன.

Anonymous said...

எந்தக் கணத்திலும் மறக்க முடியாத மகிழ்வு தரும் வலி என்பது தாய்மையின் பிரசவம் தான். மிகக் கொடுமையான வலி...ஆத்திரமும், ஆற்றாமையும் நிரம்பி இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்கவியலாத வலி..அது! ஆனால் கையில் பஞ்சுப் பொதியாய், பூச்செண்டாய் குழந்தையை தாதியிடமிருந்து கைகளில் வாங்கும் அந்தக் கணம் இருக்கிறதே.... அற்புதமானது.. ! முடிந்தால்...உங்கள் மனைவி பிரசவிக்கும் போது நீங்களும் அருகில் இருக்க முயற்சியுங்கள்...அந்த கணத்தில் நீங்கள் கூட கண்கலங்குவீர்கள்... இந்தக் கவிதையை மீண்டும் ஒரு முறை எழுதுவீர்கள் இன்னும் செறிவாக.... நம்புங்கள்!

அன்புடன்
சுவாதி

Anonymous said...

//கவிதையை மிகச் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள் அம்மா. ஏனோ அப்பாக்களை விடவும் பெரும்பாலான அம்மாக்களை ஈர்த்த கவிதையிது.//


. சந்தோஷம் என்பது உடலாலும் மனதாலும் உழைத்த அம்மாவுக்கு தான் அதிகம் வரும் அப்பாவை விட. நோகாமல் கொள்ளாமல் வாரிசு வாங்கிய அப்பாவின் சந்தோஷத்தை விட வலிக்கு கிடைத்த வரமாக அம்மாவின் சந்தோஷம் அதிகமடங்கானது அல்லவா? அதனாலேயே தமது உணர்வுகளை கவிதைவரிகளாகப் பார்க்கும் போது அவர்களை கவருகின்றன என்று நினைக்கிறேன். :)

அன்புடன்
சுவாதி

Anonymous said...

விடிகாலைத் தூக்கம்
மழைநேரத் தேனீர்
பிடித்த செடியின் புதுமொட்டு
புதுப்புத்தகக் காகிதவாசனை
இமைதடவும் மயிலிறகு
மேலுரசிடச் சிலிர்க்கும்
ரோமமெனச் சுகமாய்
எனை ஏதும் செய்யவிடாமல்
நீ வந்து நிரப்புகிறாய்
எனதான பொழுதுகளை


இனிய நடை ரிஷான்



மூங்கில்களுரசிடக்
குழலிசை கேட்குமோ...
உன் மொழியில்
தினம்தினமொரு இசை
எனைக்கேட்கச் செய்கிறாய்


உங்களுக்கு நன்றாக இசைக்கவிதைகள் வரும்போலிருக்கிறது


எனைப்பெற்றவளின் சுவாசங்களையும்
அத்தனை பதற்றங்களையும்
நானறியச் செய்தாயென்
பிரசவத்தின் இறுதிக்கணங்களில்
நீ வந்து அழுதாய்
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க...

இந்த வரிகள் ரொம்பவே அழகு

அன்புடன் புகாரி

M.Rishan Shareef said...

அன்பின் பிச்சுமணி,

ரிஷான் நல்ல கவிதை

கருத்திற்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பு நண்பர் இப்னு ஹம்துன்,

//இனிய ரிஷான்,


உங்கள் கவிதைகள் கவிதைகள் மட்டுமல்ல; வாசகனுக்கு
அழகியதொரு அனுபவத்தையும் அவை உள்வைத்திருக்கின்றன.//


வாழ்வில் பார்த்துக் கேட்டு, அனுபவித்தவை , கடந்து சென்ற கணங்கள்தானே எழுதப்படுகின்றன. எனது மொழியில் நானுரைக்கும் அனுபவங்கள், சரியாகப் புரியப்படுதல் அல்லது விளங்கப்படுதல் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சுவாதி அக்கா,

பிரசவம் குறித்தான அழகான, அருமையான விளக்கம் உங்களது. பத்து மாதங்களும் காத்திருக்கும் பொறுமையும், பல விட்டுக் கொடுப்புக்களும், பிரசவமும்தான் பெண்மையை மேலும் பூரணப்படுத்துகின்றன. முழுமையான தாய்மையுணர்வை அவளுக்குத் தருகின்றன.

நன்றி அக்கா !

M.Rishan Shareef said...

//சந்தோஷம் என்பது உடலாலும் மனதாலும் உழைத்த அம்மாவுக்கு தான் அதிகம் வரும் அப்பாவை விட. நோகாமல் கொள்ளாமல் வாரிசு வாங்கிய அப்பாவின் சந்தோஷத்தை விட வலிக்கு கிடைத்த வரமாக அம்மாவின் சந்தோஷம் அதிகமடங்கானது அல்லவா? அதனாலேயே தமது உணர்வுகளை கவிதைவரிகளாகப் பார்க்கும் போது அவர்களை கவருகின்றன என்று நினைக்கிறேன். :)//


ஆமாம் சுவாதி அக்கா...
அம்மா என்றால் பேரன்பு. முழுமையான, சுயநலமற்ற முழுமையான அன்பு. :))

M.Rishan Shareef said...

அன்பு நண்பர் புகாரி,

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே :)

Anonymous said...

கவிதை அழகு.. மிக அழகு ரிஷான்..

Anonymous said...

அன்பின் நண்பரே



அழகான வரிகளில்

அற்புதமாய் படைத்து

வருகின்றீர்கள்

படைப்பது எதுவாகிலும்

பயனடையச் செய்யும்

உங்கள் ஆக்கத்திற்கு

எனது நன்றிகள்!

திரும்ப திரும்ப படித்து

தீர்த்துக்கொண்டேன்

என் மனவிருப்பத்தை!



வாழ்த்துக்கள்.



அன்புடன் இளங்கோவன்

M.Rishan Shareef said...

அன்பின் காதல் ராஜா,


கவிதை அழகு.. மிக அழகு ரிஷான்..

கருத்துக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் இளங்கோ,



அன்பின் நண்பரே



அழகான வரிகளில்

அற்புதமாய் படைத்து

வருகின்றீர்கள்

படைப்பது எதுவாகிலும்

பயனடையச் செய்யும்

உங்கள் ஆக்கத்திற்கு

எனது நன்றிகள்!

திரும்ப திரும்ப படித்து

தீர்த்துக்கொண்டேன்

என் மனவிருப்பத்தை!



வாழ்த்துக்கள்.



அன்புடன் இளங்கோவன்


அன்பான கருத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி இனிய நண்பரே :)

Anonymous said...

> மூங்கில்களுரசிடக்
> குழலிசை கேட்குமோ...

அப்படீன்னா இன்னாம்மா ராஸ்ஸா :-)

கவிதைல நானு அல்ஜிப்ரா பாக்கமாட்டன்...ஆனாலும் இது ஏ ஸ்கொயர் மைனஸ் பி
ஸ்கொயர் ஏஸ் ஈக்குவல் டூ எபி ஸ்கொயர் மாதிரில்ல இருக்கு :-)

M.Rishan Shareef said...

> மூங்கில்களுரசிடக்
> குழலிசை கேட்குமோ...

அப்படீன்னா இன்னாம்மா ராஸ்ஸா :-)


அன்பின் ஆசாத் ஜி,
ஒரு பெரும் மகா கவிக்கு இந்த வரிகளின் அர்த்தம் புரியாமல் இருந்திருக்காது என்று தெரியும்...தெரிந்துகொண்டே கேட்பவரை என்ன செய்யலாம் ? :))))
சரி..விளக்கத்தை சொல்றேன்..

//மூங்கில்களுரசிடக்
குழலிசை கேட்குமோ...//

புல்லாங்குழலுக்கு மூங்கில் தாய். ஆனால் தனி மூங்கில் எவ்வளவுதான் காற்றுடன் உரசினாலும் , புல்லாங்குழலிலிருந்து வரும் இன்னிசையினை அது என்றுமே வெளிப்படுத்தாது. அதேபோல தான் பெற்ற குழந்தையின் மழலை இசை மொழிக்கு, வேறெவர் பேசும் மொழியும் ஒப்பாகாதென அத்தாய் சொல்ல வருகிறாள்.. மேற்சொன்ன வரிகளோடு கீழுள்ள வரிகளையும் இணைத்துப் பார்த்திருந்தால் விளக்கங்களின்றியே புரிந்திருக்குமென நினைக்கிறேன் ஆசாத் ஜி. :)


உன் மொழியில்
தினம்தினமொரு இசை
எனைக்கேட்கச் செய்கிறாய்

Anonymous said...

> ஒரு பெரும் மகா கவிக்கு

மாவனெல்லை மகராசா! யாரந்த 'ஒரு பெரும் மகா கவி' :-)))

ச்சும்மா நம்ம பையனப் புடிச்சு வம்புக்கு இளுக்குறதுதான்! சில நேரம்
கவிதைகளக் குத்திவுட்டோமுன்னா கவிஞருங்க (ஐ மீன்) நல்ல கவிஞருங்க
பொங்கிருவாங்க.

நண்பனோட கவிதைய ஒரு தபா குத்தியிருக்கேன்...ஹி..ஹி..ஹி..