Saturday, December 20, 2008

உன் பற்றிய கவிதைகள்

1.
மஞ்சள் பூக்களைப் பற்றிப் பேசியபடியும்
இலைகளிலிருந்து விழத்துடிக்கும்
மழைத்துளிகளைப் பாடியபடியும்
சாத்தான்களைத் தூதனுப்புமுன்
பாறாங்கல்லிதயத்திலிருந்து
நட்சத்திரமொன்றைத் தள்ளிவிட்டாய்
மனதின் முனையைப் பற்றியபடியது
இல்லாத உன் புகழ்பாடி வீணாகுகையில்
நீர்ப்பரப்பில் நத்தைகள்
நீந்துவதாகச் சொல்கிறாய்
ஓடு பொதுதானெனினும்
நத்தைகள் ஆமைகளாக முடியாது
எல்லாவற்றிலும்

2.
நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

20 comments:

அன்புடன் அருணா said...

//நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்//

படித்ததும் நிஜம்மாவே விளக்கொளியும் கவிதைகளின் கூக்குரலும் கேட்டமாதிரி இருந்தது..
அன்புடன் அருணா

priyamudanprabu said...

/
நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்
//

நல்ல வரிகள்

priyamudanprabu said...

அடடே அதே வரிகளை அன்புடன் அருணா பாராட்டியுள்ளாரே

சாந்தி நேசக்கரம் said...

""நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்""

துயர் மிக்க வரிகள்.வரிகள் ஒவ்வொன்றும் தன்னுக்குள் அழுது வடிக்கின்றன.

வாழ்த்துக்கள்.

சாந்தி

உயிரோடை said...

நல்ல கவிதைகள். ரிஷான். வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

//உன் புகழ்பாடி வீணாகுகையில்
நீர்ப்பரப்பில் நத்தைகள்
நீந்துவதாகச் சொல்கிறாய்
ஓடு பொதுதானெனினும்
நத்தைகள் ஆமைகளாக முடியாது
எல்லாவற்றிலும்//

அருமையாக உரைத்திருக்கிறீர்கள்.

////நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்//

சிதறிய மனம்
தட்டப் படும் கதவு
எக்காளமிடும் கவிதைகள்
என்னதான் செய்வான் அவன்?

இரண்டு கவிதைகளும் அருமை.

M.Rishan Shareef said...

அன்பின் அருணா,

//படித்ததும் நிஜம்மாவே விளக்கொளியும் கவிதைகளின் கூக்குரலும் கேட்டமாதிரி இருந்தது..//

:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் பிரபு,

உங்கள் முதல் வருகையில் மகிழ்கிறேன். இனிதாக வரவேற்கிறேன்.

///
நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்
//

நல்ல வரிகள் //


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி,

உங்கள் முதல்வருகையில் மகிழ்ச்சி. அன்புடன் வரவேற்கிறேன்.

//துயர் மிக்க வரிகள்.வரிகள் ஒவ்வொன்றும் தன்னுக்குள் அழுது வடிக்கின்றன.

வாழ்த்துக்கள். //

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் மின்னல்,

உங்கள் முதல்வருகையும் எனக்கு மகிழ்வினைத் தருகிறது. அன்பாக வரவேற்கிறேன்.

//நல்ல கவிதைகள். ரிஷான். வாழ்த்துகள் //

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//சிதறிய மனம்
தட்டப் படும் கதவு
எக்காளமிடும் கவிதைகள்
என்னதான் செய்வான் அவன்? //

எதுவும் செய்யத் தோன்றாமல் தொடர்ந்தும் கவிதையெனக் கிறுக்குகிறான் :(

//இரண்டு கவிதைகளும் அருமை.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Kavinaya said...

//நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்//

நான் ரசித்த வரிகளும் இவைதான்...

Sakthy said...

அன்பின் ரிஷான்
வரிகள் அருமை ...

//நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்//

வாழ்த்துக்கள் தோழரே ..

MSK / Saravana said...

//மனதின் முனையைப் பற்றியபடியது
இல்லாத உன் புகழ்பாடி வீணாகுகையில்
நீர்ப்பரப்பில் நத்தைகள்
நீந்துவதாகச் சொல்கிறாய்
ஓடு பொதுதானெனினும்
நத்தைகள் ஆமைகளாக முடியாது
எல்லாவற்றிலும்//

அட்டகாசம் ரிஷான்.. அழகான வரி(லி)கள்..

MSK / Saravana said...

//நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்//

அருமை.

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//வாழ்த்துக்கள் தோழரே ..//

அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி சினேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

//அட்டகாசம் ரிஷான்.. அழகான வரி(லி)கள்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

ஜகதீஸ்வரன் said...

விழத்துடிக்கும் மழைத்துளிகள்.
மிக அருமையான கவிதைவரிகள்.
அன்பானவர்களின் கருத்துகள்.
மொத்தத்தில் இந்த வலைப்பூ அன்பின் அடையாலம்.

அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://www.jackpoem.blogspot.com/

M.Rishan Shareef said...

அன்பின் ஜகதீஸ்வரன்,

உங்கள் முதல்வருகையில் மகிழ்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

//விழத்துடிக்கும் மழைத்துளிகள்.
மிக அருமையான கவிதைவரிகள்.
அன்பானவர்களின் கருத்துகள்.
மொத்தத்தில் இந்த வலைப்பூ அன்பின் அடையாலம்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !