Friday, January 16, 2009

பொம்மை நேசம்

எனைச் சிலகாலம் உன் மனதிற்குத்
தத்தெடுத்திருந்தாய்
விழிகளை உருட்டி விழித்துக்
கன்னங்களை உப்பவைத்து ஓசையெழுப்பி
மகிழ்வூட்டிக் கொண்டேயிருந்தாய்

தத்தெடுக்கப்பட்டதன் களிப்பு
என்றென்றும் நிலைத்திருக்க
பிரார்த்திருக்கத் தெரியாதவனாகி
உன் மனதில் நானிருந்தேன்

சில காலம் ஆயிற்று - எனக்கு
வேடிக்கை காட்டி நீ மகிழ்ந்து கிடப்பது
உனக்கே சலித்திருக்கக் கூடும்

மனம் முழுதும் வியாபித்துக் கிடந்த என்னை
சிறப்பேதுமற்ற நாளொன்றில்
விழி பறித்துக் கை முறித்து
உன் மாளிகையிலிருந்து உதறியெறிந்து
எனை வலிக்கச் செய்தாய்

இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

23 comments:

ராமலக்ஷ்மி said...

அறியா குழந்தை பொம்மையிடம் காட்டும் நேசத்தைப் போல அறிந்தே காட்டப் பட்ட அவ்வகை நேசத்தால் நொந்த உண்மையின் வலிகள்.

//இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன//

காக்கையின் தவறா கருங்குயில்களின் தவறா? அற்புதமான கவிதை ரிஷான். வாழ்த்துக்கள்.

தமிழன்-கறுப்பி... said...

இந்தக்கவிதைக்குரிய வகையாகன பின்னூட்டம் இல்லையென்றாலும் அதைத்தான் எழுதியிருக்கிறேன்..

கலக்கல் ரிஷான்..

நல்லாருக்கு...

இறக்குவானை நிர்ஷன் said...

//இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன//

இந்த வரிகளுக்குள் நிறைய விடயங்களை சொல்லிவிட்டீர்கள்.

நன்றாயிருக்கிறது ரிஷான்.

பாரதிய நவீன இளவரசன் said...

நல்ல கவிதைங்க.
தேர்வு செய்த படமும் நன்றாகயிருக்கே...

இப்னு ஹம்துன் said...

ரிஷான்,
சிறப்பான கவியாற்றல் உங்களுக்கு....

முட்டைக்குள் உறையும் உயிர்போல்
உங்கள் கவிதையில்
சொல்லப்படாத சேதிகள் கனக்கின்றன

பாச மலர் / Paasa Malar said...

படித்ததும் மனம் கனத்தது ரிஷான்..

//விழி பறித்துக் கை முறித்து
உன் மாளிகையிலிருந்து உதறியெறிந்து
எனை வலிக்கச் செய்தாய்//

வலி பேசும் வரிகள்..

Sakthy said...

வலி சொல்லும் வரிகள் ...அருமை ரிஷான்
சில வலிகள் வேண்டும் தான் எமக்கு .. எம்மை நாமே உணர...
// இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன //
இதில் தப்பொன்றும் இல்லையே ..

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//அறியா குழந்தை பொம்மையிடம் காட்டும் நேசத்தைப் போல அறிந்தே காட்டப் பட்ட அவ்வகை நேசத்தால் நொந்த உண்மையின் வலிகள். //

மிகச் சரியான புரிதல்..!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் தமிழன்-கறுப்பி,

//கலக்கல் ரிஷான்..

நல்லாருக்கு...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நிர்ஷன்,

////இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன//

இந்த வரிகளுக்குள் நிறைய விடயங்களை சொல்லிவிட்டீர்கள்.

நன்றாயிருக்கிறது ரிஷான். //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் பாரதீய நவீன இளவரசன்,

//நல்ல கவிதைங்க.
தேர்வு செய்த படமும் நன்றாகயிருக்கே...//

நீண்ட நாட்களின் பின்னர் உங்களைக் காண்கிறேன்..நலம் தானே ? :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் இப்னு ஹம்துன்,

உங்கள் முதல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
எனது கவிதைத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

//ரிஷான்,
சிறப்பான கவியாற்றல் உங்களுக்கு....

முட்டைக்குள் உறையும் உயிர்போல்
உங்கள் கவிதையில்
சொல்லப்படாத சேதிகள் கனக்கின்றன//

அழகான, ஆழமான கருத்து..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் பாசமலர்,

//படித்ததும் மனம் கனத்தது ரிஷான்..

//விழி பறித்துக் கை முறித்து
உன் மாளிகையிலிருந்து உதறியெறிந்து
எனை வலிக்கச் செய்தாய்//

வலி பேசும் வரிகள்.. //

நீண்ட நாட்களின் பின்னர் உங்களைக் காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி..நலம் தானே ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//வலி சொல்லும் வரிகள் ...அருமை ரிஷான்
சில வலிகள் வேண்டும் தான் எமக்கு .. எம்மை நாமே உணர... //

ஆமாம்...நிச்சயமாக..! சில அனுபவங்கள்தான் போதிக்கின்றன..!

// இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன //
இதில் தப்பொன்றும் இல்லையே ..//

இன்னுமொருவரின் உடமைக்குள் தான் புகுந்து ஆதிக்கம் செலுத்துவது தவறுதானே ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி :)

Kavinaya said...

//இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன//

அருமையான கவிதைக்கு வலிமையான முத்தாய்ப்பு. ரொம்ப நல்லாருக்கு ரிஷு.

MSK / Saravana said...

//"பொம்மை நேசம்"//

//இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன.//

கலக்கல் ரிஷான்.. என்னென்னவோ ஞாபகம் வருகிறதே..
மனசுக்கு நெருக்கமான கவிதை ரிஷான்..

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

////இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன//

அருமையான கவிதைக்கு வலிமையான முத்தாய்ப்பு. ரொம்ப நல்லாருக்கு ரிஷு.//

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

////"பொம்மை நேசம்"//

//இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன.//

கலக்கல் ரிஷான்.. என்னென்னவோ ஞாபகம் வருகிறதே..
மனசுக்கு நெருக்கமான கவிதை ரிஷான்..//

உங்கள் கருத்து மகிழ்ச்சி தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

very touching !!! really nice rishan..

சித்தாந்தன் said...

அன்பின் ரிஸான் ஷெரிப்

வலியை நெஞ்சிலறைந்து சொல்லும் கவிதை
தொடர்ந்தும் உங்கள் கவிதைகளைப் படித்து வருகிறேன்

M.Rishan Shareef said...

அன்பின் சத்யா ஸ்ருதி,

//very touching !!! really nice rishan.. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் சித்தாந்தன்,

//வலியை நெஞ்சிலறைந்து சொல்லும் கவிதை
தொடர்ந்தும் உங்கள் கவிதைகளைப் படித்து வருகிறேன் //

உங்கள் கருத்து எனக்கு ஊக்கமளிக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

உதிர்த்த விருட்சத்துக்குத் தெரியவில்லை
> பூவின் வலி//

உதிர்த்த விருட்சத்துக்கும் தெரியவில்லை, மிதித்த மனிதனுக்கும்
தெரியவில்லை - மென்மையான அப்பூவின் வலி -
ஆனால் எங்கிருந்தோ உங்கள் கவிதையைப் படிக்கும் என் மனதில் மெலிதான சோகம்
தோன்றச் செய்து விட்டதே அந்தப் பூ...

வாழ்த்துகள் ரிஷான்
மைதிலி