Sunday, February 15, 2009

கோபங்களின் நிமித்தம்

வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்

ஒவ்வொரு துணிக்கையிலும்
அன்பைக் கொண்டு
எனக்காய்ச் செய்ததான சுவர்களுக்குள்
உன் சகாப்பிசாசுகளை ஏவுகிறாய்
மிகுந்த அச்சம் கொண்ட பார்வையினை
மீண்டும் மீண்டும் உன்னிலெறிகையில்
அலட்சியத்தின் சலனமற்ற மொழி
உன் முகத்தில் உறைகிறது

நாற்திசைகளிலும் ஊசலாடும்
நூலாம்படைகளினிடையில்
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்
நிரம்பி வழிகிறது
நிராகரிப்பின் பெருவலி

நான் அகல்கிறேன்
உனது இப்பெருங்கோட்டையை விட்டும்
நீயுன் வழித்துணைகளை
மூலைக்கொன்றாய்க் குடியமர்த்திப்
பாடச் சொல்லி ரசி

இறுதியாக வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்

வாழ்க்கை
அது மீண்டும் அழகாயிற்று

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


நன்றி - வார்ப்பு, நவீன விருட்சம்

23 comments:

ஆதவா said...

வழக்கம் போலவே நன்றாக இருக்கிறது ரிஷான்.

துணிக்கை - என்ன அர்த்தம்?

நிமித்தம் - காரணம்.. கோபங்களின் காரணமாக எதுவும் சொல்லப்படவில்லை... அல்லது நீங்கள் சொன்ன அர்த்தம் எதுவென்று தெரியவில்லை

வார்த்தை பிரயோகங்கள் நன்றாக இருக்கின்றது. அதிலும், நிராகரிப்பின் பெருவலியைச்  சொல்லும் பொழுது அதன் ஆழம் நன்கு தெரிகிறது.

தொடருங்கள்.

ஆதவா said...

வழக்கம் போலவே நன்றாக இருக்கிறது ரிஷான்.

துணிக்கை - என்ன அர்த்தம்?

நிமித்தம் - காரணம்.. கோபங்களின் காரணமாக எதுவும் சொல்லப்படவில்லை... அல்லது நீங்கள் சொன்ன அர்த்தம் எதுவென்று தெரியவில்லை

வார்த்தை பிரயோகங்கள் நன்றாக இருக்கின்றது. அதிலும், நிராகரிப்பின் பெருவலியைச்  சொல்லும் பொழுது அதன் ஆழம் நன்கு தெரிகிறது.

தொடருங்கள்.

Kavinaya said...

//வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்//

பல நினைவுகளைக் கிளறி விட்ட வார்த்தைகள். கவிதை நெடுகிலும் அழகான பிரயோகங்கள்.

//வாழ்க்கை
அது மீண்டும் அழகாயிற்று//

முடிவு கச்சிதம்.

வாழ்த்துகள் ரிஷு.

மாதவராஜ் said...

ரிஷான்!

இன்று விடிகாலையின் நிசப்தத்தில் உங்கள் கவிதைகளை படித்தேன்.

தனிமையின் குரலுமாய், இழப்பின் வேதனையுமாய் உங்கள் கவிதைகள் ஒலிக்கின்றன.

அன்பிற்கு ஏங்கும் இதியத்தின் துடிப்புகளாய் அவை கேட்கின்றன.

வார்த்தை பிரயோகங்கள் செறிவோடும், அடர்த்தி மிக்கதாகவும் வெளிப்பட்டிருக்கின்றன.

//நீர் மாறி, நிறம் மாறி
சிற்பமாகலாம் இவ்விதயம் - அன்றி
சிதறியும் போய்விடலாம்//

//ஏதோ ஒரு பாடலின் இசையை
நினைவுருத்திச் சோரும் தருணம்
மனச்சலனங்களேதுமற்று
உன் குரலை அனுமதித்தேன்//

//சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்//

//அறை முழுதும்
சிதறிக்கிடக்கின்றன
நீ தெறித்த வண்ணங்கள்
மௌனத்தின் வண்ணத்தை மட்டும்
நான் முழுதும் பூசிக்கொள்கிறேன்//

//மரத்திலிருந்து உதிர்ந்த
ஒற்றைக் காகத்தின் நிழல் மட்டும்
கறுப்பாகப் பறந்தவாறே
அடுத்த தெருவுக்குச் செல்கிறது//

//நாற்திசைகளிலும் ஊசலாடும்
நூலாம்படைகளினிடையில்
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்
நிரம்பி வழிகிறது
நிராகரிப்பின் பெருவலி//

என நான் ரசித்த விரிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

முடிவிலி மனதை அறுக்கிறது.

நண்பா! ஒரு விமர்சனமும் உண்டு. உங்கள் கவிதைகள் ஒரே தளத்தில், ஒரே குரலில் பேசுகின்றன. பறவையின் சிறகுகளோடு உங்கள் எண்ணங்கள் விரிய ஆசைப்படுகிறேன்.

சிறுகதைகளை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

எழுதுவேன்.
இனி இங்கு அடிக்கடி வருவேன்.

வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

//வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்//

அருமையான ஆரம்பம். பழிகளை தன் ஏற்றிட்டது மனம்.

//
நாற்திசைகளிலும் ஊசலாடும்
நூலாம்படைகளினிடையில்
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்
நிரம்பி வழிகிறது
நிராகரிப்பின் பெருவலி//

தெரிகிறது வலியின் பின் வழிகின்ற சோகம்.

//நீயுன் வழித்துணைகளை
மூலைக்கொன்றாய்க் குடியமர்த்திப்
பாடச் சொல்லி ரசி//

தெரிக்கிறது வார்த்தைகளில் பெரும் கோபம்.

//வாழ்க்கை
அது மீண்டும் அழகாயிற்று//

துயரிலே மூழ்கிடாது அதைத் துடைத்தெறிந்து விட்டு தொடங்குகிறது இனிய பயணம்.

அருமை. வாழ்த்துக்கள் ரிஷான்.

ஃபஹீமாஜஹான் said...

அன்பின் ரிஷான்

அன்பைக் கொண்டு அணுவணுவாக உருவாக்கிய அழகிய கூட்டைச் சிதைக்கும் காரியத்தை செய்ய எந்த ஒரு கருணையுள்ள பெண்ணும் துணியமாட்டாள்.

அவளைச் சூழவுள்ளவர்களார் அவள் மீது விதி எழுதப்படும் போது அவளது வழிகள் மறிக்கப்படும் போது உயிரென மதித்தவனும் அவளைத் தன்னந் தனியே விட்டு வெளியேறுவது எப்படி உண்மை அன்பாக முடியும்?

அன்பின் முன்னிலையில் ஒரே ஒரு தடவை அடிபணிந்து போயிருந்தால் அவனுக்கு எந்தக் குறைவும் வந்திருக்காதல்லவா?

கலாசாரங்களும் சமுக நீதிகளும் அவளைச் சுற்றித்தானே பின்னிக் கிடக்கின்றன?

அவன் தனது வாழ்வை அழகாக்கிக் கொள்ளப் போய்விட்டான். ஆனால் அவள்????????????????

Anonymous said...

அன்பின் ரிஷான்

தங்களுடைய கவிதைகளில் ஒரு வெறுமையும், அதைச்சுற்றி கணமான வலியும் எப்போதும் இழையோடுகிறதே ஏன். கேட்ட அனுபவங்களா? அல்லது சொந்த அனுபவங்களா?

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவா,

//வழக்கம் போலவே நன்றாக இருக்கிறது ரிஷான்.

துணிக்கை - என்ன அர்த்தம்? //

துணிக்கை என்றால் பார்க்கக் கூடியதான, மிகச் சிறிய அளவிலான சடப் பொருள்.

//நிமித்தம் - காரணம்.. கோபங்களின் காரணமாக எதுவும் சொல்லப்படவில்லை... அல்லது நீங்கள் சொன்ன அர்த்தம் எதுவென்று தெரியவில்லை //

வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்

கவிதையின் கருப்பொருள் யாரைச் சுட்டி நிற்கிறதோ, அவருடைய கோபத்தின் காரணமாக எனத் தலைப்பிட்டிருக்கிறேன் நண்பரே !

//வார்த்தை பிரயோகங்கள் நன்றாக இருக்கின்றது. அதிலும், நிராகரிப்பின் பெருவலியைச் சொல்லும் பொழுது அதன் ஆழம் நன்கு தெரிகிறது.

தொடருங்கள். //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

////வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்//

பல நினைவுகளைக் கிளறி விட்ட வார்த்தைகள். கவிதை நெடுகிலும் அழகான பிரயோகங்கள்.

//வாழ்க்கை
அது மீண்டும் அழகாயிற்று//

முடிவு கச்சிதம்.

வாழ்த்துகள் ரிஷு.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் மாதவராஜ்,

//ரிஷான்!

இன்று விடிகாலையின் நிசப்தத்தில் உங்கள் கவிதைகளை படித்தேன்.

தனிமையின் குரலுமாய், இழப்பின் வேதனையுமாய் உங்கள் கவிதைகள் ஒலிக்கின்றன.

அன்பிற்கு ஏங்கும் இதியத்தின் துடிப்புகளாய் அவை கேட்கின்றன.

வார்த்தை பிரயோகங்கள் செறிவோடும், அடர்த்தி மிக்கதாகவும் வெளிப்பட்டிருக்கின்றன.

//நீர் மாறி, நிறம் மாறி
சிற்பமாகலாம் இவ்விதயம் - அன்றி
சிதறியும் போய்விடலாம்//

//ஏதோ ஒரு பாடலின் இசையை
நினைவுருத்திச் சோரும் தருணம்
மனச்சலனங்களேதுமற்று
உன் குரலை அனுமதித்தேன்//

//சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்//

//அறை முழுதும்
சிதறிக்கிடக்கின்றன
நீ தெறித்த வண்ணங்கள்
மௌனத்தின் வண்ணத்தை மட்டும்
நான் முழுதும் பூசிக்கொள்கிறேன்//

//மரத்திலிருந்து உதிர்ந்த
ஒற்றைக் காகத்தின் நிழல் மட்டும்
கறுப்பாகப் பறந்தவாறே
அடுத்த தெருவுக்குச் செல்கிறது//

//நாற்திசைகளிலும் ஊசலாடும்
நூலாம்படைகளினிடையில்
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்
நிரம்பி வழிகிறது
நிராகரிப்பின் பெருவலி//

என நான் ரசித்த விரிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

முடிவிலி மனதை அறுக்கிறது.

நண்பா! ஒரு விமர்சனமும் உண்டு. உங்கள் கவிதைகள் ஒரே தளத்தில், ஒரே குரலில் பேசுகின்றன. பறவையின் சிறகுகளோடு உங்கள் எண்ணங்கள் விரிய ஆசைப்படுகிறேன்.//

எனது கவிதைகள் குறித்து உங்கள் வெளிப்படையான, விரிவான விமர்சனத்தில் மிகவும் மகிழ்கிறேன். நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

நீங்கள் சொன்னதைப் போல எனக்குள் ஒலிக்கும் தனிமையின் குரலும், இழப்புகள் தரும் வேதனையும், மனதைப் பாதித்த சம்பவங்களுமே இப்படி எழுதத் தூண்டுகின்றன.

தற்பொழுது சற்று மாறுதலாக, மனதிற்கு இதமளிக்கும் விதமாக கீற்றில் 'நேசத்துக்குரிய ஒரே காதலுக்கு' , விகடனில் 'உனக்கென மட்டும்' எனும் தலைப்புகளில் காதல் கவிதைத் தொடர்கள் எழுதி வருகிறேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள். அவை சம்பந்தமாகவும் உங்கள் வெளிப்படையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் நண்பரே.

//சிறுகதைகளை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

எழுதுவேன்.
இனி இங்கு அடிக்கடி வருவேன்.

வாழ்த்துக்கள்.//

ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

////வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்//

அருமையான ஆரம்பம். பழிகளை தன் ஏற்றிட்டது மனம்.

//
நாற்திசைகளிலும் ஊசலாடும்
நூலாம்படைகளினிடையில்
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்
நிரம்பி வழிகிறது
நிராகரிப்பின் பெருவலி//

தெரிகிறது வலியின் பின் வழிகின்ற சோகம்.

//நீயுன் வழித்துணைகளை
மூலைக்கொன்றாய்க் குடியமர்த்திப்
பாடச் சொல்லி ரசி//

தெரிக்கிறது வார்த்தைகளில் பெரும் கோபம்.

//வாழ்க்கை
அது மீண்டும் அழகாயிற்று//

துயரிலே மூழ்கிடாது அதைத் துடைத்தெறிந்து விட்டு தொடங்குகிறது இனிய பயணம்.

அருமை. வாழ்த்துக்கள் ரிஷான் //

ஒவ்வொரு பகுதிக்குமான உங்கள் கருத்துக்களில் மகிழ்ந்தேன் சகோதரி.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//அன்பின் ரிஷான்

அன்பைக் கொண்டு அணுவணுவாக உருவாக்கிய அழகிய கூட்டைச் சிதைக்கும் காரியத்தை செய்ய எந்த ஒரு கருணையுள்ள பெண்ணும் துணியமாட்டாள்.

அவளைச் சூழவுள்ளவர்களார் அவள் மீது விதி எழுதப்படும் போது அவளது வழிகள் மறிக்கப்படும் போது உயிரென மதித்தவனும் அவளைத் தன்னந் தனியே விட்டு வெளியேறுவது எப்படி உண்மை அன்பாக முடியும்?

அன்பின் முன்னிலையில் ஒரே ஒரு தடவை அடிபணிந்து போயிருந்தால் அவனுக்கு எந்தக் குறைவும் வந்திருக்காதல்லவா?

கலாசாரங்களும் சமுக நீதிகளும் அவளைச் சுற்றித்தானே பின்னிக் கிடக்கின்றன? //

மிகச் சரியான கருத்துக்கள் சகோதரி. இறுதி வரிகளில் பலநூறு அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன. எல்லாத் தேசப் பெண்களுக்குள்ளும் இத் துயர் தானே அடங்கியிருக்கின்றன. :(

//அவன் தனது வாழ்வை அழகாக்கிக் கொள்ளப் போய்விட்டான். ஆனால் அவள்????????????????//

:(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் அபுசிதாரா,

//அன்பின் ரிஷான்

தங்களுடைய கவிதைகளில் ஒரு வெறுமையும், அதைச்சுற்றி கணமான வலியும் எப்போதும் இழையோடுகிறதே ஏன். கேட்ட அனுபவங்களா? அல்லது சொந்த அனுபவங்களா?//

என்னைப் பாதித்த அனுபவங்கள். அவற்றில் பார்த்துக் கேட்டவைகளும் அடக்கம். :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

MSK / Saravana said...

ரொம்ப நல்லா இருக்கு ரிஷான்..

பூங்குழலி said...

வழக்கம் போலவே உணர்வுகளை விவரித்து ஆழ்ந்த பொருள் அடக்கி சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான்

Sakthy said...

நிராகரிப்பின் பெருவலியைச் சொல்லும் கவிதை ..ஆனால் பிரிவின் வலி இருவருக்கும் தானே ..

எப்போதும் போலவே அழகு வரிகள் ரிஷான் ,வார்த்தைகளின் ஊடே நழுவிச் சென்று நனைய முடிகிறது.. கொஞ்சம் கண்ணீரின் ஈரப் பிசுபிசுப்போடு...

Sakthy said...

நிராகரிப்பின் பெருவலியைச் சொல்லும் கவிதை ..ஆனால் பிரிவின் வலி இருவருக்கும் தானே ..
எப்போதும் போலவே அழகு வரிகள் ரிஷான் ,வார்த்தைகளின் ஊடே நழுவிச் சென்று நனைய முடிகிறது.. கொஞ்சம் கண்ணீரின் ஈரப் பிசுபிசுப்போடு...

இப்னு ஹம்துன் said...

ரிஷான் ஜி,
உங்கள் சொற் பிரயோகங்களில் சிக்குண்டு போகிறேன்.

தனித்தொலிக்கும் குரலாக இழப்பின் ஆதங்கம் வழிகின்ற இந்தக் கவிதையும் உங்கள் கைவண்ணத்தில் சிறக்கிறது.

M.Rishan Shareef said...

அன்பின் சரவண குமார்,

//ரொம்ப நல்லா இருக்கு ரிஷான்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//வழக்கம் போலவே உணர்வுகளை விவரித்து ஆழ்ந்த பொருள் அடக்கி சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//நிராகரிப்பின் பெருவலியைச் சொல்லும் கவிதை ..ஆனால் பிரிவின் வலி இருவருக்கும் தானே ..//

இருவருக்கும் தான். :(

//எப்போதும் போலவே அழகு வரிகள் ரிஷான் ,வார்த்தைகளின் ஊடே நழுவிச் சென்று நனைய முடிகிறது.. கொஞ்சம் கண்ணீரின் ஈரப் பிசுபிசுப்போடு...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்னேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் இப்னு ஹம்துன்,

//ரிஷான் ஜி,
உங்கள் சொற் பிரயோகங்களில் சிக்குண்டு போகிறேன்.

தனித்தொலிக்கும் குரலாக இழப்பின் ஆதங்கம் வழிகின்ற இந்தக் கவிதையும் உங்கள் கைவண்ணத்தில் சிறக்கிறது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)