Wednesday, September 30, 2009

என்னை ஆளும் விலங்குகள்

எல்லாமாயும் எனக்குள்ளே
ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள்
பூசி மெழுகும் சொற்களெதுவும்
அவையிடத்திலில்லை
சில மீன்களைப் போல அமைதியாயும்
இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்
சில நேரங்களில் மட்டும்
எறும்பு, தேனி, கரையான்களைப் போல
சுறுசுறுப்பாகுபவையுமுண்டு

காலத்தைப் பயனுள்ளதாக
நகர்த்திப் போவதாகப் பெருமை பேசி
திரும்பிப் பார்க்கையில்
தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்
கோபமுறுகையில்
சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்
நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும்
நன்றி மறப்பதில்
பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்
குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்
புன்னகைப்பது மட்டும்
மனிதத்தை ஒத்திருக்கிறது


- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வார்த்தை - ஆகஸ்ட், 2009 இதழ்
# நவீன விருட்சம் - பெப்ரவரி,2010 இதழ்கள் 85/86ன் தொகுப்பு
# உயிர்மை

44 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. அத்தனை விலங்குகளின் இயல்புகளும் குடிகொண்ட மனிதனை வேறுபடுத்துவது அந்தப் புன்னகை எனமுடித்திருப்பது பிடித்திருக்கிறது!

Jerry Eshananda said...

கடைசி இரு வரிகளில் தொலைந்து போகிறேன் ரிசான்

இறக்குவானை நிர்ஷன் said...

//புன்னகைப்பது மட்டும்
மனிதத்தை ஒத்திருக்கிறது //

புன்னகை மட்டுமே மனிதனை வேறுபடுத்திக்காட்டுகிறது என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லலியிருக்கிறீர்கள் ரிஷான்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வார்த்தைகளை விட வலிமையானது புன்னகை.
ஆயிரம் வார்த்தைகள் விளக்க முடியாத ஒரு விடயத்தை சிறு புன்னகை விளக்கி விடும். (இங்கு நான் காதலை மட்டும் குறிப்பிடவில்லை நண்பா).
கவிதை வரிகள் நன்றாக இருக்கிறது ரிஷான்.

ஃபஹீமாஜஹான் said...

அன்புள்ள ரிஷான்,

நான் காணும் ரிஷான் எப்பொழுதும் மனிதனாகவே இருப்பது தான் ரிஷான் பெற்றிருக்கும் மிக உயரிய குணம்.

எந்த விலங்கும் ஆள இடம் கொடுக்காமல் வாழும் வாழ்க்கை ரிஷானுடையது என்பதால்

இந்தக் கவிதையை நான் .....:(

ஷைலஜா said...

ஆமைபோல இல்லாமல் முயல்போல முதலில் ஓடிவந்து
குயில்போன்றகுரலில் சொல்கிறேன்
மான்போல துள்ளூம் மனத்தில் எழுந்த
இளம் சிங்கம் ரிஷானின் இந்தக்கவிதை
மனிதனின் அகத்தை நன்கு
புறம் காட்டுகிறது!
பாராட்டுக்கள்!

சீதாலக்ஷ்மி said...

மகனே
உணர்வுகள் புரிகின்றன
செயலற்ற தாய் நான்

நா.கண்ணன் said...

நகையுணர்வு என்பது எல்லா விலங்கினங்களுமுண்டு. நிறைய நேஷனல் ஜியோகிராபிக்
சானல் ஆவணங்கள் பார்த்தால் புரியும். மனிதக்குரங்குகளிடம் அதன்
வெளிப்பாட்டைக் (சிரிப்பு) கவனிக்க முடிகிறது. மனிதன் விலங்குகளின்
நீட்சி என்பதைக் காட்டும், விலங்குச் சாயலுள்ள மனித முகங்கள் பற்றிய
கேலிச் சித்திரங்களைப் பார்த்திருக்கிறேன். Are humans fallen angels?
என்று கேட்பதுண்டு? இல்லை அவன் இன்னொரு விலங்கு என்பதே உண்மை.

விஜி said...

மனுஷனுக்குள்ளதான் எல்லா மிருகமும் இருக்கப்பா!!!

மிகச்சரியாகச்சொன்னீர்கள் ரிஷான். ஒப்பீடுகள் அருமை.

நஜீபா அக்தர் said...

கண்ணாடியில் பிம்பம் பார்க்கிற உணர்வைத் தந்த கவிதை இது.

சா.கி.நடராஜன். said...

நிஜம் தானே நண்பனே
விலங்குகளிலிருந்து மனிதன்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

தேனுஷா said...

மனிதனுக்குள் மிருக குணம் நிறையவே இருக்கு ஆனால் மனித தோலைப் போட்டி மூடி வெச்சிருக்கோம அதை உங்க கவிதை நல்லாவே வெளிய காட்டி இருக்கு அருமை ரிசான்

நடராஜன் கல்பட்டு said...

உங்கள் கட்டுரை கவிதைலில் விலங்குகள் பறவைகள் வருகி்றனவே அவற்றின் மீது உங்களுக்கு ஆழ்ந்த பாசம் உண்டென்று நினைக்கிறேன். அவற்றனைக் கூர்ந்து நோக்கும் பார்வையும் உள்ளது. மிகவும் ரசித்தேன் கவிதையை.

விஷ்ணு said...

நண்பரே மிகவும் ரசித்தேன் கவிதையை ..
மிக அருமை .. ஒவ்வொருவரின் உள்மனதையும் கவிதையாக வடித்து விட்டீர்கள் ..

பிச்சுமணி said...

ரிஷான் உயிர்மையில் இக்கவிதையை படித்தேன்
நன்றாக உள்ளது உங்கள் கவிதை
தொடரட்டும் உங்கள் இலக்கிய பணி

தமிழன் வேணு said...

//பூசி மெழுகும் சொற்களெதுவும்
அவையிடத்திலில்லை//


ஆம், வார்த்தையில் தேன் குழைக்கிற வித்தை வரமாகப் பெற்ற மனிதர்களே நாம்


//சில மீன்களைப் போல அமைதியாயும்
இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்
சில நேரங்களில் மட்டும்
எறும்பு, தேனி, கரையான்களைப் போல
சுறுசுறுப்பாகுபவையுமுண்டு//


எறும்பு,தேனி,கரையான்கள் போல இரைதேடுகிற வேட்டை இருக்கிறதே!


//காலத்தைப் பயனுள்ளதாக
நகர்த்திப் போவதாகப் பெருமை பேசி
திரும்பிப் பார்க்கையில்
தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்
கோபமுறுகையில்
சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்
நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும்
நன்றி மறப்பதில்
பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்
குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்
புன்னகைப்பது மட்டும்
மனிதத்தை ஒத்திருக்கிறது//

மிகச் சரி! புன்னகை மட்டுமே மனிதனை மிருகத்திடமிருந்து பிரித்து அடையாளம் காட்டுகிறது.

அழகான கவிதை. வழக்கம் போலவே செதுக்கிய சிற்பமாய்....

பூங்குழலி said...

//என்னை ஆளும் விலங்குகள்
எல்லாமாயும் எனக்குள்ளே
ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள்//

எல்லோருள்ளும் .....

//பூசி மெழுகும் சொற்களெதுவும்
அவையிடத்திலில்லை
சில மீன்களைப் போல அமைதியாயும்
இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்
சில நேரங்களில் மட்டும்
எறும்பு, தேனி, கரையான்களைப் போல
சுறுசுறுப்பாகுபவையுமுண்டு
நன்றாக இருக்கிறது இந்த வர்ணனை
காலத்தைப் பயனுள்ளதாக
நகர்த்திப் போவதாகப் பெருமை பேசி
திரும்பிப் பார்க்கையில்
தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்
கோபமுறுகையில்
சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்
நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும்
நன்றி மறப்பதில்
பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்//

நல்லா இருக்கு மெதுநடை திருட்டு

//குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்
புன்னகைப்பது மட்டும்
மனிதத்தை ஒத்திருக்கிறது//

அழகான கவிதை ரிஷான்

ராஜா said...

ம்ம்.. நாம எல்லாமே சமுதாய விலங்கு தான் ! நல்லா இருக்கு ரிஷான்!

Sakthy said...

எப்போதும் மனித தோலுக்குள் ஒரு மிருகம் ஒளிந்து தான் இருக்கிறது ...
அதை கட்டி வைப்பதே புன்னகை தானே
வழக்கம் போலவே ஒவ்வொரு வரிகளுக்கு அருமை ரிஷான்
தோழமையோடு ..

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//மிக அருமை. அத்தனை விலங்குகளின் இயல்புகளும் குடிகொண்ட மனிதனை வேறுபடுத்துவது அந்தப் புன்னகை எனமுடித்திருப்பது பிடித்திருக்கிறது!//

உண்மைதானே? :)
புன்னகை மனிதனில் பூக்கும் பூ. அதுவும் இல்லையெனில் நாமெல்லோரும் நடமாடும் மயானம் போல அலைந்துகொண்டிருப்போம். :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் ஜெரி ஈசானந்தா,

//கடைசி இரு வரிகளில் தொலைந்து போகிறேன் ரிசான் //

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நிர்ஷன்,

//
புன்னகை மட்டுமே மனிதனை வேறுபடுத்திக்காட்டுகிறது என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லலியிருக்கிறீர்கள் ரிஷான்.//

நீண்ட நாட்களின் பின்னர் உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்கிறேன். நலமா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

//வார்த்தைகளை விட வலிமையானது புன்னகை.
ஆயிரம் வார்த்தைகள் விளக்க முடியாத ஒரு விடயத்தை சிறு புன்னகை விளக்கி விடும். (இங்கு நான் காதலை மட்டும் குறிப்பிடவில்லை நண்பா).
கவிதை வரிகள் நன்றாக இருக்கிறது ரிஷான்.//

காதலை மட்டும் குறிப்பிடாவிட்டாலும் புன்னகைகளில் பலவகைகள் இருக்கின்றனதான். 'உங்கள் வயதுக்கு காதல் புன்னகை மட்டும் சிந்தனையில் வந்திருக்கிறதெ'ன நான் சொல்லாமல் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்களா? :P

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//அன்புள்ள ரிஷான்,

நான் காணும் ரிஷான் எப்பொழுதும் மனிதனாகவே இருப்பது தான் ரிஷான் பெற்றிருக்கும் மிக உயரிய குணம்.

எந்த விலங்கும் ஆள இடம் கொடுக்காமல் வாழும் வாழ்க்கை ரிஷானுடையது என்பதால்

இந்தக் கவிதையை நான் .....:(//

:(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//எப்போதும் மனித தோலுக்குள் ஒரு மிருகம் ஒளிந்து தான் இருக்கிறது ...
அதை கட்டி வைப்பதே புன்னகை தானே
வழக்கம் போலவே ஒவ்வொரு வரிகளுக்கு அருமை ரிஷான்
தோழமையோடு ..//

மிகச் சரி :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்னேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் ஷைலஜா அக்கா,

//ஆமைபோல இல்லாமல் முயல்போல முதலில் ஓடிவந்து
குயில்போன்றகுரலில் சொல்கிறேன்
மான்போல துள்ளூம் மனத்தில் எழுந்த
இளம் சிங்கம் ரிஷானின் இந்தக்கவிதை
மனிதனின் அகத்தை நன்கு
புறம் காட்டுகிறது!
பாராட்டுக்கள்!//

பாராட்டுக்கு நன்றி அக்கா !

M.Rishan Shareef said...

அன்பின் சீதாலக்ஷ்மி அம்மா,

//மகனே
உணர்வுகள் புரிகின்றன
செயலற்ற தாய் நான்
அம்மா//


நலமா?
கருத்துக்கு நன்றி அம்மா.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் நா.கண்ணன்,

//நகையுணர்வு என்பது எல்லா விலங்கினங்களுமுண்டு. நிறைய நேஷனல் ஜியோகிராபிக்

சானல் ஆவணங்கள் பார்த்தால் புரியும். மனிதக்குரங்குகளிடம் அதன்
வெளிப்பாட்டைக் (சிரிப்பு) கவனிக்க முடிகிறது. மனிதன் விலங்குகளின்
நீட்சி என்பதைக் காட்டும், விலங்குச் சாயலுள்ள மனித முகங்கள் பற்றிய
கேலிச் சித்திரங்களைப் பார்த்திருக்கிறேன். Are humans fallen angels?
என்று கேட்பதுண்டு? இல்லை அவன் இன்னொரு விலங்கு என்பதே உண்மை.//


மிகச் சரி. ஆனால் மனிதனுக்கு மட்டும்தானே குறிப்பறிந்து புன்னகைக்கவும் உணர்ச்சிகளைத் தேவையறிந்து வெளிப்படுத்தவும் தெரிந்திருக்கிறது.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//மனுஷனுக்குள்ளதான் எல்லா மிருகமும் இருக்கப்பா!!!

மிகச்சரியாகச்சொன்னீர்கள் ரிஷான். ஒப்பீடுகள் அருமை.//


:)
நன்றி ஸ்னேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் நஜீபா அக்தர்,

//கண்ணாடியில் பிம்பம் பார்க்கிற உணர்வைத் தந்த கவிதை இது. //


:)
கருத்துக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சா.கி.நடராஜன்,


//நிஜம் தானே நண்பனே
விலங்குகளிலிருந்து மனிதன் //


கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் தேனுஷா,

//மனிதனுக்குள் மிருக குணம் நிறையவே இருக்கு ஆனால் மனித தோலைப் போட்டி மூடி வெச்சிருக்கோம அதை உங்க கவிதை நல்லாவே வெளிய காட்டி இருக்கு அருமை ரிசான் //


கருத்துக்கு நன்றி தோழி..!

M.Rishan Shareef said...

அன்பின் நடராஜன் ஐயா,

//உங்கள் கட்டுரை கவிதைலில் விலங்குகள் பறவைகள் வருகி்றனவே அவற்றின் மீது உங்களுக்கு ஆழ்ந்த பாசம் உண்டென்று நினைக்கிறேன். அவற்றனைக் கூர்ந்து நோக்கும் பார்வையும் உள்ளது. மிகவும் ரசித்தேன் கவிதையை. //


என்னைச் சூழவும் தற்பொழுது அத்தகைய சூழலே உள்ளது. அதன் வெளிப்பாடுகளாகவிருக்கும் . :)

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் விஷ்ணு,

//நண்பரே மிகவும் ரசித்தேன் கவிதையை ..
மிக அருமை .. ஒவ்வொருவரின் உள்மனதையும் கவிதையாக வடித்து விட்டீர்கள் ..//

:)
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பிச்சுமணி,



//ரிஷான் உயிர்மையில் இக்கவிதையை படித்தேன்

நன்றாக உள்ளது உங்கள் கவிதை
தொடரட்டும் உங்கள் இலக்கிய பணி//


:)
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் வேணு,

//பூசி மெழுகும் சொற்களெதுவும்

அவையிடத்திலில்லை


ஆம், வார்த்தையில் தேன் குழைக்கிற வித்தை வரமாகப் பெற்ற மனிதர்களே நாம்


சில மீன்களைப் போல அமைதியாயும்
இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்
சில நேரங்களில் மட்டும்
எறும்பு, தேனி, கரையான்களைப் போல
சுறுசுறுப்பாகுபவையுமுண்டு


எறும்பு,தேனி,கரையான்கள் போல இரைதேடுகிற வேட்டை இருக்கிறதே!


காலத்தைப் பயனுள்ளதாக
நகர்த்திப் போவதாகப் பெருமை பேசி
திரும்பிப் பார்க்கையில்
தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்
கோபமுறுகையில்
சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்
நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும்
நன்றி மறப்பதில்
பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்
குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்
புன்னகைப்பது மட்டும்
மனிதத்தை ஒத்திருக்கிறது

மிகச் சரி! புன்னகை மட்டுமே மனிதனை மிருகத்திடமிருந்து பிரித்து அடையாளம் காட்டுகிறது.

அழகான கவிதை. வழக்கம் போலவே செதுக்கிய சிற்பமாய்....

தமிழன் வேணு //


கருத்துக்கு நன்றி நண்பரே :)
நலமா?

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,





//அழகான கவிதை ரிஷான்//


கருத்துக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ராஜா,


//ம்ம்.. நாம எல்லாமே சமுதாய விலங்கு தான் ! நல்லா இருக்கு ரிஷான்!//


ஆமாம் நண்பரே!
கருத்துக்கு நன்றி !

இளசு said...

பரிணாமத்தின் எச்சங்கள் இன்னும் இருப்பதும்
புன்னகையும் கண்ணீரும் உச்சங்கள் ஆனதும்

ஆழமான ரிஷானின் வரிகளில் அழகாய்..

பாராட்டுகள்!

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் இளசு,

//பரிணாமத்தின் எச்சங்கள் இன்னும் இருப்பதும்
புன்னகையும் கண்ணீரும் உச்சங்கள் ஆனதும்

ஆழமான ரிஷானின் வரிகளில் அழகாய்..

பாராட்டுகள்!//

மிக அழகான கருத்து.
நன்றி நண்பரே !

குணமதி said...

விலங்கிலிருந்து பிறந்தவன் மாந்தன்.

விலங்குணர்வுகளை வெற்றி கொள்வதால் மாந்தனாகிறான்

M.Rishan Shareef said...

அன்பின் குணமதி,

கருத்துக்கு நன்றி நண்பரே !

கவிதா said...

*நன்றாக இருக்கு பாராட்டுக்கள்...
மனிதன் விலங்கில் இருந்து வந்ததனால் தானோ நமக்குள் பலவகை மிருகம் இருக்கு...:confused:*

M.Rishan Shareef said...

அன்பின் கவிதா,

கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)