Monday, February 1, 2010

அரசியல்

வண்ணத்துப்பூச்சியொன்றின்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்

நான் ஆளும் தேசம் பற்றிய
பஞ்சப்பாட்டுக்களைத் தவிர்த்து
என் பற்றிச் சிலாகித்துப்பாடு
அது நான் செய்யாததாக இருப்பினும்
நிறைந்த நற்செயல்களாலும்
அருள்மிகுந்த கீர்த்திகளாலும் -எனது
நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளாலும்
ஆனதாக இருக்கட்டும்

காலம் காலமாகப் பிரிந்தே பயணித்த
இரு சமாந்தரத் தண்டவாளங்களை
சூடாகித் தெறித்துப் பின் காய்ந்து போன
சிவப்புவர்ணத்தைப் பூசி இணைத்தது
தலையற்ற முண்டமொன்று
அது பற்றி உனக்கென்ன கவலை?
வா

வண்ணத்துப்பூச்சி வேண்டாம்
தும்பிக்கு நான்கு சிறகுகளாம்

அதன்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும்
மற்ற இரண்டில்
எதிர்த்துக் கேள்விகளெதுவும் கேட்கவிழையாத
மேலுமிரு அப்பாவிக் குடிமகன்களையுமேற்றி
என் புகழ் பாடியபடி
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# உன்னதம் இதழ், டிசம்பர் 2009
# திண்ணை

# ஒளி ஓவியம் - நண்பர் ஜீவ்ஸ் ஐயப்பன்

8 comments:

மாற்றுப்பிரதி said...

உங்கள் எழுத்துக்கள் இப்போதுதான் பார்க்க கிடைத்தது.நேரடி வசனங்களையும்,மய்ய நீரோட்ட கருத்துக்களையும் கொண்டு மிக அழாகாகவும் எளிமையாகவும் கவிதைக்கான வேலையைச் செய்கிறது உங்களின் பிரதிகள்.முன்னிலையில் ஒருவரை உருவாக்கி பேசும் உத்தி பழசுதான்.எனினும்,எளிமையின் அழகில் நிரம்பிது உங்கள் கவிதைகள் என்று சொல்லலாம்.மக்கள் எப்படி இருக்க வேண்டுமென்று அரசர்கள் விரும்பும் நிலைப்பாட்டை பேசும் எளிமை மிகமுக்கியமானது.உதவிக்கு ஒரு வண்ணத்துப்பூச்சியும்,ஒரு தும்பியும் மட்டுமே.அரசன் எதிர்ப்பை விரும்புவதில்லை என்ற சாதாரணமன ஒரு கருத்தை கொண்டு கவிதைக்கான ஒரு வெளியை உருவாக்கியிருக்கிறது இந்தப்பிரதி.

சாந்தி said...

நச்.. னு இருக்கு கவிதை ..

லறீனா அப்துல் ஹக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்...

இன்றைய அரசியலின், அரசியல்வாதியின் நிஜமுகத்தைக் கவிதைவரிகளில் தரிசிக்க முடிகின்றது. கவிஞருக்கு ஒரு சபாஷ்!

தொடரட்டும் தங்கள் எழுத்துப் பயணம் சமுதாயத்தின் விடிவை நோக்கி...

அல்லாஹ் தங்களுக்கு அருள்பாலிப்பானாக!

அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,
லறீனா அப்துல் ஹக்.

M.Rishan Shareef said...

அன்பின் ரியாஸ் குரானா,

//உங்கள் எழுத்துக்கள் இப்போதுதான் பார்க்க கிடைத்தது.நேரடி வசனங்களையும்,மய்ய நீரோட்ட கருத்துக்களையும் கொண்டு மிக அழாகாகவும் எளிமையாகவும் கவிதைக்கான வேலையைச் செய்கிறது உங்களின் பிரதிகள்.முன்னிலையில் ஒருவரை உருவாக்கி பேசும் உத்தி பழசுதான்.எனினும்,எளிமையின் அழகில் நிரம்பிது உங்கள் கவிதைகள் என்று சொல்லலாம்.மக்கள் எப்படி இருக்க வேண்டுமென்று அரசர்கள் விரும்பும் நிலைப்பாட்டை பேசும் எளிமை மிகமுக்கியமானது.உதவிக்கு ஒரு வண்ணத்துப்பூச்சியும்,ஒரு தும்பியும் மட்டுமே.அரசன் எதிர்ப்பை விரும்புவதில்லை என்ற சாதாரணமன ஒரு கருத்தை கொண்டு கவிதைக்கான ஒரு வெளியை உருவாக்கியிருக்கிறது இந்தப்பிரதி.//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது என்பதைப் போலவே
காத்திரமான உங்கள் கருத்தும் என்னைப் பெரிதும் ஊக்குவிக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி,

கருத்துக்கு நன்றி சகோதரி.

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி லறீனா அப்துல்ஹக்,

வ அலைக்கும் ஸலாம் வபரகாதுஹு.
உங்கள் கருத்தும், பிரார்த்தனையும் பெரும் மகிழ்வைத் தருகிறது.
நன்றி சகோதரி !

வடிவேலன் ஆர். said...

தல சூப்பர் கவிதை அரசியல் கவிதை மாதிரி துறை சார்ந்த கவிதைகள் எழுதனும் வாழ்த்துக்கள்

mohamedali jinnah said...

லறீனா அப்துல் ஹக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்...

இன்றைய அரசியலின், அரசியல்வாதியின் நிஜமுகத்தைக் கவிதைவரிகளில் தரிசிக்க முடிகின்றது. கவிஞருக்கு ஒரு சபாஷ்!

தொடரட்டும் தங்கள் எழுத்துப் பயணம் சமுதாயத்தின் விடிவை நோக்கி...

அல்லாஹ் தங்களுக்கு அருள்பாலிப்பானாக!

அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,
லறீனா அப்துல் ஹக்.
accept my friend