தனித்தனியாகப் பிரிந்துசெல்லும்
பாதைகள் வழியும்
அடர்காட்டுக்குள்ளும்
பூத்துக்கிடக்கின்றன
சில வனாந்தரப்பூக்கள்
வாசத்தைப் பரப்பும்
பூக்களை ரசிக்கவோ
பூசைக்கென்று கொண்டாடவோ
யாருமற்ற வெளியிலும்
இயல்பினை மறக்காமல்
தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக
பூத்துக்கொண்டே இருக்கின்றன
இயற்கையின் பன்னீர்த்தூவல்
ஒளிக்கீற்றின் களி நர்த்தனம்
இலை மிகுக்கப் பச்சையங்கள்
வட்டமிட்டபடியே சுற்றிவரும் தேன்குருவி
அனைத்தும் மிகைத்துக் கிடக்க
காட்டுப் பூக்களுக்குக் கவலையேதுமில்லை
ஒளி மறுக்கப்பட்டுக்
குளிர்விக்கப்பட்ட அறையில்
பூ மலர்ந்தபொழுதில்
தொட்டிச் செடிக்கு மனதும் வலித்தது
மூன்றாவதாகப் பிறந்ததும் பெண்ணாம்
-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# அகநாழிகை கலை இலக்கிய இதழ் 01 - அக்டோபர், 2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை
# வார்ப்பு
15 comments:
நல்ல பதிவு நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருமை. பூக்கலுக்கு ஏங்கிய பாவைக்கு தெரியும் அருமை. .செடிக்குத் தெரியுமா!
பெண் பிள்ளை இல்லாமல் படும் அவதி எனக்குத் தெரியும் !
மனம் வலிக்குது.மனைவிக்கு
தந்தது காமம்.மகளுக்கு கொடுப்பது பாசம்....
/வாசத்தைப் பரப்பும்
பூக்களை ரசிக்கவோ
பூசைக்கென்று கொண்டாடவோ
யாருமற்ற வெளியிலும்
இயல்பினை மறக்காமல்
தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக
பூத்துக்கொண்டே இருக்கின்றன/
அருமை
very nice this poem
sempakam
very nice this poem
sempakam
very nice
sempakam
very nice
sempakam
இயற்கையின் பன்னீர்த்தூவல்
ஒளிக்கீற்றின் களி நர்த்தனம்
ஆகா.. அருமை ரிஷான்
தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக
பூத்துக்கொண்டே இருக்கின்றன
அனைத்தும் மிகைத்துக் கிடக்க
காட்டுப் பூக்களுக்குக் கவலையேதுமில்லை
அழகான வரிகள்
ஒளி மறுக்கப்பட்டுக்
குளிர்விக்கப்பட்ட அறையில்
பூ மலர்ந்தபொழுதில்
மென்மையான கவிதை .மயிலிறகால் வருடிவிட்டு அதைக் கொண்டே லேசாக கீறியது போல் இருக்கிறது
அன்பின் சசிகுமார்,
//நல்ல பதிவு நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் நண்பர் Nidurali,
//அருமை. பூக்கலுக்கு ஏங்கிய பாவைக்கு தெரியும் அருமை. .செடிக்குத் தெரியுமா!
பெண் பிள்ளை இல்லாமல் படும் அவதி எனக்குத் தெரியும் !
மனம் வலிக்குது.மனைவிக்கு
தந்தது காமம்.மகளுக்கு கொடுப்பது பாசம்....//
ஆமாம்..உண்மைதான் நண்பரே.
அருமையான கருத்து.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் திகழ்,
///வாசத்தைப் பரப்பும்
பூக்களை ரசிக்கவோ
பூசைக்கென்று கொண்டாடவோ
யாருமற்ற வெளியிலும்
இயல்பினை மறக்காமல்
தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக
பூத்துக்கொண்டே இருக்கின்றன/
அருமை//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் செண்பகம்,
//very nice this poem
sempakam//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
அன்பின் சிவசுப்ரமணியன்,
//இயற்கையின் பன்னீர்த்தூவல்
ஒளிக்கீற்றின் களி நர்த்தனம்
ஆகா.. அருமை ரிஷான்//
நன்றி அன்பு நண்பா :-)
அன்பின் பூங்குழலி,
///தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக
பூத்துக்கொண்டே இருக்கின்றன
அனைத்தும் மிகைத்துக் கிடக்க
காட்டுப் பூக்களுக்குக் கவலையேதுமில்லை//
அழகான வரிகள்
//ஒளி மறுக்கப்பட்டுக்
குளிர்விக்கப்பட்ட அறையில்
பூ மலர்ந்தபொழுதில்
மென்மையான கவிதை .மயிலிறகால் வருடிவிட்டு அதைக் கொண்டே லேசாக கீறியது போல் இருக்கிறது///
இது போன்ற பல சம்பவங்களை ஒரு வைத்தியராக நீங்கள் மருத்துவமனையில் பார்த்திருக்கவும் கூடும் சகோதரி. அன்று தொட்டு இன்று வரை இந்த நிலையில் பெரிதாக மாற்றமெதுவும் இல்லை அல்லவா? :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புச் சகோதரி !
Post a Comment