கொதித்துருகும் வெயிலினை
ஊடுருவிக் காற்றெங்கும்
பரந்திடா வெளி
வியாபித்து
ஊற்றுப் பெருக்கும் புழுக்கம்
வெப்பம் தின்று வளரும்
முள்மரங்கள்
நிலமெங்கிலும்
கனிகளைத் தூவுகின்றன
உச்சிச் சூரியனுக்கும்
வானுக்கும் வெற்றுடல் காட்டி
நிழலேதுமற்று கருகிய புல்வெளியில்
ஆயாசமாகப் படுத்திருக்கும்
சித்தம் பிசகியவன்
புழுதி மூடிய பழங்களைத் தின்று
கானல் நீரைக் குடிக்கிறான்
கோடை
இவனுக்காகத்தான் வருகிறது போலும்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# காலச்சுவடு இதழ் 123, மார்ச் - 2010
# எங்கள் தேசம், மே 15 - 31 இதழ்
# உயிர்மை
# திண்ணை
17 comments:
அருமை ரிஷான்
//வெப்பம் தின்று வளரும்
முள்மரங்கள்
நிலமெங்கிலும்
கனிகளைத் தூவுகின்றன //
அருமை ரிஷான் அழகாகவும் ஆழமாகவும் இருக்கிறது உங்கள் கவிதை... வாழ்துக்கள் சகோதரா!
அன்பின் D.R.Ashok,
//அருமை ரிஷான்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)
அன்பின் Jehana Mohamed Jareer,
////வெப்பம் தின்று வளரும்
முள்மரங்கள்
நிலமெங்கிலும்
கனிகளைத் தூவுகின்றன //
அருமை ரிஷான் அழகாகவும் ஆழமாகவும் இருக்கிறது உங்கள் கவிதை... வாழ்துக்கள் சகோதரா!//
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :-)
வெப்பத்திலும் கவிதை பிறக்கின்றது.
சீதாம்மா
அன்பின் சீதாம்மா,
//வெப்பத்திலும் கவிதை பிறக்கின்றது //
ஆமாம் அம்மா.. மன வெப்பத்திலும் வெளி வெப்பத்திலும் எழுதிய கவிதையிது.
கருத்துக்கு நன்றி அன்பு அம்மா.
அருமை ரிஷான்! அழகாக இருக்கிறது உங்கள் கவிதை! congratss!!
//முள்மரங்கள்
நிலமெங்கிலும்
கனிகளைத் தூவுகின்றன//
முள்மரத்தின் கனிகள்..?.
//கானல் நீரைக் குடிக்கிறான்
கோடை
இவனுக்காகத்தான் வருகிறது போலும்//
சித்தம் பிசகினால் மட்டுமே இவ்வாழ்க்கை வாழ இயலும் போல்.
படமும் அருமை ரிஷான்..
அன்பின் சாந்தி அக்கா,
//முள்மரங்கள்
நிலமெங்கிலும்
கனிகளைத் தூவுகின்றன //
முள்மரத்தின் கனிகள்..?.
ஆமாம் அக்கா.
பேரீத்தம்பழங்கள். :-)
//கானல் நீரைக் குடிக்கிறான்
கோடை
இவனுக்காகத்தான் வருகிறது போலும்//
சித்தம் பிசகினால் மட்டுமே இவ்வாழ்க்கை வாழ இயலும் போல்.
படமும் அருமை ரிஷான்..//
ஆமாம் அக்கா.
இந்தக் கவிதை பெருங்கோடை காலத்து மத்திய கிழக்கு நாடொன்றின் நிழலற்ற தெருவொன்றில் கண்ட காட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.
அந்த உஷ்ணத்தில், சுட்டெரிக்கும்வெயிலில் ஒருவனால் வெறுந்தரையில் உறங்கமுடியுமெனில், புழுதியில் உதிர்ந்திருந்த கனிகளை உண்ண முடியுமெனில் அவன் சித்தம் பிசகியவனாகத்தான் இருக்கவேண்டும் நிச்சயமாக.
கருத்துக்கு நன்றி சகோதரி :-)
ரிஷான்!
வெயிலின் உக்கிரம் வார்த்தைகளில் கொப்பளிக்க, கொப்பளிக்க எழுதி இருக்கிறீர்கள்.
அற்புதமான கவிதை!
உஷ்ணம் தகிக்கிறது வார்த்தைகளில்!
**புழுதி மூடிய பழங்களைத் தின்று
கானல் நீரைக் குடிக்கிறான்**
கோடையையும் அதில் உழல்பவனையும் படம்பிடித்திருக்கும் விதம் மிக அருமை ரிஸான். சொக்க வைக்கும் வார்த்தைக் கையாடல்கள். பாராட்டுக்க
அன்பின் நண்பர் மாதவராஜ்,
//ரிஷான்!
வெயிலின் உக்கிரம் வார்த்தைகளில் கொப்பளிக்க, கொப்பளிக்க எழுதி இருக்கிறீர்கள்.
அற்புதமான கவிதை!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)
அன்பின் கயல்,
//உஷ்ணம் தகிக்கிறது வார்த்தைகளில்!//
:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் சுனைத் ஹசனீ,
//**புழுதி மூடிய பழங்களைத் தின்று
கானல் நீரைக் குடிக்கிறான்**
கோடையையும் அதில் உழல்பவனையும் படம்பிடித்திருக்கும் விதம் மிக அருமை ரிஸான். சொக்க வைக்கும் வார்த்தைக் கையாடல்கள். பாராட்டுக்கள்//
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :-)
அன்பின் நண்பர்களுக்கு,
வணக்கம்.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை, 03) மாலை ஆறு மணிக்கு, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
உங்கள் வருகையையும் ஆசிகளையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
satharanama samugam othikki vidum ninaivu prilnthavargalin nilaiyaai iyarkkai othakka villai polum
Post a Comment