Monday, November 1, 2010

ஏமாற்றங்களின் அத்திவாரம்

ஏமாற்றங்களின் அத்திவாரம்
மிகப் பலம் வாய்ந்தது

வாழ்நாள் முழுவதற்குமான
ஏமாற்றச்சுமையைத் தாங்கிக் கொள்ளும்படியாக
சிறுவயது முதலே இடப்படுமது
ஒரு விதையைப் போல நடப்படுவது

காலங்களை உறிஞ்சி வளரும்
அத்திவார மரம் எப்பொழுதும்
ஏமாற்றத்தின் பூக்கள் கொண்டே சிரிக்கிறது
எனினும்
நிழலில் அமர்ந்தே ஏமாற்றுபவர்களின்
தலையில் விழும்படியான காய்களெதையும்
இறப்புவரையிலும் தராதபடியால்
ஏமாற்றத்தின் வேர்கள் உறுதியாக ஊடுருவுகின்றன
ஒட்டுண்ணித் தாவரம் போல

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
20091216

நன்றி
# கலைமுகம் இதழ் 50 - ஒக்டோபர் 2010
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் எழுத்தாளர்கள்

16 comments:

பூங்குழலி said...

காலங்களை உறிஞ்சி வளரும்
அத்திவார மரம் எப்பொழுதும்
ஏமாற்றத்தின் பூக்கள் கொண்டே சிரிக்கிறது

நல்ல வரிகள்
வழக்கமான ரிஷான் பாணியில் கவிதை .ஏமாற்றங்கள் ,புறக்கணிப்புகள் இல்லாத உலகத்தை நாம் இழந்து விட்டோமா ரிஷான் ?உங்கள் கவிதைகளை படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது .

ராமலக்ஷ்மி said...

//ஏமாற்றங்களின் அத்திவாரம்
மிகப் பலம் வாய்ந்தது

வாழ்நாள் முழுவதற்குமான
ஏமாற்றச்சுமையைத் தாங்கிக் கொள்ளும்படியாக
சிறுவயது முதலே இடப்படுமது
ஒரு விதையைப் போல நடப்படுவது

காலங்களை உறிஞ்சி வளரும்
அத்திவார மரம் எப்பொழுதும்
ஏமாற்றத்தின் பூக்கள் கொண்டே சிரிக்கிறது//

அருமை ரிஷான்.

Thenusha Eswaram said...

ஏமாற்றங்கள் பழகிடுது வாழ்க்கையில் அப்படியே

அருமையா இருக்கு

Shammi Muthuvel said...

All ways the disappointment carry a wary of emotions,it may not kill but it would sustain the kill...a good one Rishan

Fathima Rizafa said...

ஏமாற்றத்தின் வேர்கள் உறுதியாக ஊடுருவுகின்றன
ஒட்டுண்ணித் தாவரம் போல....nice one.

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//காலங்களை உறிஞ்சி வளரும்
அத்திவார மரம் எப்பொழுதும்
ஏமாற்றத்தின் பூக்கள் கொண்டே சிரிக்கிறது

நல்ல வரிகள்
வழக்கமான ரிஷான் பாணியில் கவிதை .ஏமாற்றங்கள் ,புறக்கணிப்புகள் இல்லாத உலகத்தை நாம் இழந்து விட்டோமா ரிஷான் ?உங்கள் கவிதைகளை படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது .//

:-)
ஏமாற்றங்கள், புறக்கணிப்புக்கள், துரோகங்களால் தான் உலகம் பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது சகோதரி. பணமும், செல்வாக்கும் மட்டுமே அனைத்தையும் ஆளுகிறது. அன்பு கூட இவற்றின் அளவுகோல்களால்தான் அளக்கப்படும் நிலையில் ஏமாற்றங்கள், புறக்கணிப்புக்கள், துரோகங்களால் உலகம் பூரணப்படுத்தப்பட்டிருப்பதிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லையல்லவா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

////ஏமாற்றங்களின் அத்திவாரம்
மிகப் பலம் வாய்ந்தது

வாழ்நாள் முழுவதற்குமான
ஏமாற்றச்சுமையைத் தாங்கிக் கொள்ளும்படியாக
சிறுவயது முதலே இடப்படுமது
ஒரு விதையைப் போல நடப்படுவது

காலங்களை உறிஞ்சி வளரும்
அத்திவார மரம் எப்பொழுதும்
ஏமாற்றத்தின் பூக்கள் கொண்டே சிரிக்கிறது//

அருமை ரிஷான்.//

:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் தேனுஷா,

//ஏமாற்றங்கள் பழகிடுது வாழ்க்கையில் அப்படியே

அருமையா இருக்கு//

:-)
கருத்துக்கு நன்றி தோழி :-)

M.Rishan Shareef said...

Dear Shammi,

//All ways the disappointment carry a wary of emotions,it may not kill but it would sustain the kill...a good one Rishan//

Thanks a lot for the comment friend :-)

M.Rishan Shareef said...

அன்பின் ஃபாத்திமா ரிஸாஃபா,

//ஏமாற்றத்தின் வேர்கள் உறுதியாக ஊடுருவுகின்றன
ஒட்டுண்ணித் தாவரம் போல....nice one.//

கருத்துக்கு நன்றி தோழி :-)

விஜி said...

*ஏமாறத மனுஷங்க என்று யாருமே இல்லை ரிஷான்.*
*ஏமாற்றுபவன் கூட எங்கோ ஏமாந்துதான் போகிறான்.*
*சின்ன வயதிலேயே படிச்ச பாட்டி வடை சுட்ட கதைதெரியும் தானே?!!:)*
*"முத்து" படத்தில ரஜினி சொன்னது போல.*
*ஒரு தடவை ஏமாந்தா அவன் குத்தம், ஒவ்வொரு முறையும் ஏமாந்தால் அது நம்மோட
குத்தம்:)".

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//*ஏமாறத மனுஷங்க என்று யாருமே இல்லை ரிஷான்.*
*ஏமாற்றுபவன் கூட எங்கோ ஏமாந்துதான் போகிறான்.*
*சின்ன வயதிலேயே படிச்ச பாட்டி வடை சுட்ட கதைதெரியும் தானே?!!:)*
*"முத்து" படத்தில ரஜினி சொன்னது போல.*
*ஒரு தடவை ஏமாந்தா அவன் குத்தம், ஒவ்வொரு முறையும் ஏமாந்தால் அது நம்மோட
குத்தம்:)".//

:-)))))
உண்மைதான்.. :-)
கருத்துக்கு நன்றி தோழி :-)

Ashok D said...

வேறென்ன... அருமைதான் :)

தமிழ் said...

/ஏமாற்றங்களின் அத்திவாரம்
மிகப் பலம் வாய்ந்தது

வாழ்நாள் முழுவதற்குமான
ஏமாற்றச்சுமையைத் தாங்கிக் கொள்ளும்படியாக
சிறுவயது முதலே இடப்படுமது
ஒரு விதையைப் போல நடப்படுவது/

நிசம் தான்

M.Rishan Shareef said...

அன்பின் அஷோக்,

//வேறென்ன... அருமைதான் :)//

:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் திகழ்,

///ஏமாற்றங்களின் அத்திவாரம்
மிகப் பலம் வாய்ந்தது

வாழ்நாள் முழுவதற்குமான
ஏமாற்றச்சுமையைத் தாங்கிக் கொள்ளும்படியாக
சிறுவயது முதலே இடப்படுமது
ஒரு விதையைப் போல நடப்படுவது/

நிசம் தான்//

ம்ம்.... :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !