சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும்
இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி
என்னை சிறையிலிட்டுக் கொண்டேன்
வெளியேற முடியா வளி
அறை முழுதும் நிரம்பி
சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில்
மூடியிருந்த யன்னலின் கதவுகளைத் தட்டித் தட்டி
நீரின் ரேகைகளை வழியவிட்டது மழை
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# மறுபாதி இலக்கிய இதழ்-06, வைகாசி-ஆவணி 2011
# விடிவெள்ளி
நன்றி
# மறுபாதி இலக்கிய இதழ்-06, வைகாசி-ஆவணி 2011
# விடிவெள்ளி
5 comments:
நீரின் ரேகைகளை வழிய விட்டது மழை ...அருமை ..ரிஷான்.
நலம்தானே ?
arumai
அருமையிலும் அருமை..எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..
அன்பின் பூங்குழலி,
//நீரின் ரேகைகளை வழிய விட்டது மழை ...அருமை ..ரிஷான்.
நலம்தானே ?//
நலம் அன்புச் சகோதரி.
நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி
அன்பின் சூர்யா,
//arumai//
உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது..நன்றி நண்பரே :-)
Post a Comment