அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி
அதே நிலா, அதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்
எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை
நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்
அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது
இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்
- எம்.ரிஷான்
ஷெரீப்,
இலங்கை
20100717
நன்றி
# மறுபாதி - கவிதைகளுக்கான இதழ் - 06 , வைகாசி-ஆவணி 2011
# உயிர்மை
# திண்ணை
# மறுபாதி - கவிதைகளுக்கான இதழ் - 06 , வைகாசி-ஆவணி 2011
# உயிர்மை
# திண்ணை
24 comments:
அருமையாக எழுதப்பட்டு இருக்கிறது.
Rishan its Superb
Rishan its superb
akkaraiyilathu kidaththal nichchayam thandanai
பல பெண்களின் மனசை அடையாளம்காட்டி எங்கள் மனசை தொடுகிறது அக்கறையை யாசிக்கும் இளவரசியின் கதை.
இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
அருமை
Its really nice Rishan!!!!!
very Nice.
Nice one !
wow!
நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள் ..... ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும் (அருமையாக இருக்கிறது. )
இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா ஒரு சிறு ஓடம் போதும்....
மீண்டும் இக்கரை தீண்டா - போயே போய்விடும் ஓடம் மீட்சி பெருமூச்சின் முத்திரை வெளிப்பாடு.
அன்பின் சித்ரா,
//அருமையாக எழுதப்பட்டு இருக்கிறது.//
உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி. :-)
அன்பின் பரங்கிபேட்டை நண்பர்கள்,
//Rishan its Superb//
கருத்துக்கு நன்றி நண்பர்களே :-)
அன்பின் சக்தி,
//akkaraiyilathu kidaththal nichchayam thandanai//
நிச்சயமாக :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் ஜெயபாலன் ஐயா,
//பல பெண்களின் மனசை அடையாளம்காட்டி எங்கள் மனசை தொடுகிறது அக்கறையை யாசிக்கும் இளவரசியின் கதை.//
உங்கள் வருகையும் கருத்தும் பெரும் ஊக்கத்தைத் தருகிறது. நன்றி அன்பு ஐயா !
அன்பின் பூங்குழலி,
//இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
அருமை//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புச் சகோதரி :-)
அன்பின் ஹேமா,
//Its really nice Rishan!!!!!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)
அன்பின் நூருல் அமீன்,
//இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா ஒரு சிறு ஓடம் போதும்....
மீண்டும் இக்கரை தீண்டா - போயே போய்விடும் ஓடம் மீட்சி பெருமூச்சின் முத்திரை வெளிப்பாடு.//
அருமையான கருத்து.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)
brother rishan..u r great .......
அன்பின் இஜ்லான் நிஸ்தார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)
பனிவாள் கீறலின் இசையென
ஒற்றை ஆண் குரல்
மீனவர் குடிசையிலிருந்து
தபேலாவின் தாளத்தைக் கிளித்து வருகிறது
கட்டுப்பாடுகளற்ற கனவுகளுக்கு சொந்தக்காரியின் ஆழ்மன ஆர்வங்கள் அழகான வரிகளில். மிக அழகு. வாழ்த்துக்கள் ரிஷான்.
Post a Comment