நித்திரையிலயர்ந்த கணமொன்றில்
தனித்துவிழும் ஒற்றை இலை
விருட்சத்தின் செய்தியொன்றை
வேருக்கு எடுத்துவரும்
மௌனத்திலும் தனிமையிலும்
மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில்
வந்தமர்ந்து காத்திருக்கிறான்
இறப்பைக் கொண்டுவரும்
கடவுளின் கூற்றுவன்
நிலவுருகி நிலத்தில்
விழட்டுமெனச் சபித்து
விருட்சத்தை எரித்துவிடுகிறேன்
மழை நனைத்த
எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும்
இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது
ஈரத்தில் தோய்ந்த
ஏதோவொரு அழைப்பின் குரல்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# வடக்குவாசல் - நவம்பர், 2011
# மறுபாதி - கவிதைகளுக்கான இதழ்
# விடிவெள்ளி
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை
நன்றி
# வடக்குவாசல் - நவம்பர், 2011
# மறுபாதி - கவிதைகளுக்கான இதழ்
# விடிவெள்ளி
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை
13 comments:
//தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும்//
மழைநேரம்,ஆளரவமற்ற முன்மதியம்,
திடீரென விழித்துக்கொள்ளும் நடு இரவு ஆகியன நிழலாடும் சொல், வார்த்தை.
கவிதை அருமை ரிஷான்
அன்பின் காமராஜ்,
//தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும்//
மழைநேரம்,ஆளரவமற்ற முன்மதியம்,
திடீரென விழித்துக்கொள்ளும் நடு இரவு ஆகியன நிழலாடும் சொல், வார்த்தை.
கவிதை அருமை ரிஷான்//
உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)
உங்கள் ஊர்த் தமிழ் கவிஞர்களிமிருந்து வித்த்யாசப்பட்டவை உங்கள் கவிதைகள். சொற்சிக்கனம் உங்களிடம். பெரும்பாலானவர்களிடம் நீண்ட நீண்ட வரிகளில் பிரகடனங்க்ள் வந்து விழும்.
வெ.சா அவர்களின் பாராட்டு ரிஷானுக்கு மகுடம் !
வாழ்த்துகள் ரிஷான் !
அன்பின் வெங்கட் சாமிநாதன் ஐயா,
நேற்றிரவு, எழுத்தாளர் பெருமாள் முருகன் தொகுத்த 'பிரம்மாண்டமும் ஒச்சமும்' தொகுப்பில் 'சி.சு.செ. என்றொரு ஆளுமை' என்ற உங்களது கட்டுரையை வாசித்து வியந்து கொண்டிருக்கையில்தான் உங்கள் கருத்து வந்திருக்கிறது. என்ன ஒற்றுமை பார்த்தீர்களா? :-)
//உங்கள் ஊர்த் தமிழ் கவிஞர்களிமிருந்து வித்த்யாசப்பட்டவை உங்கள் கவிதைகள். சொற்சிக்கனம் உங்களிடம். பெரும்பாலானவர்களிடம் நீண்ட நீண்ட வரிகளில் பிரகடனங்க்ள் வந்து விழும்.//
உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்வையும் ஊக்கத்தையும் தருகிறது.
மிகவும் நன்றி ஐயா !
அன்பின் நேசமித்ரன்,
//வெ.சா அவர்களின் பாராட்டு ரிஷானுக்கு மகுடம் !
வாழ்த்துகள் ரிஷான் !//
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி !
அழகிய வரிகள் பாராட்டுக்கள்
//நிலவுருகி நிலத்தில்
விழட்டுமெனச் சபித்து
விருட்சத்தை எரித்துவிடுகிறேன்//
நல்ல சொல்லாடல். நயமான பின்னல். கவிதை அருமை.
அன்பின் தமிழ்த்தோட்டம்,
//அழகிய வரிகள் பாராட்டுக்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)
அன்பின் தோழன் மபா,
////நிலவுருகி நிலத்தில்
விழட்டுமெனச் சபித்து
விருட்சத்தை எரித்துவிடுகிறேன்//
நல்ல சொல்லாடல். நயமான பின்னல். கவிதை அருமை.//
உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. மிகவும் நன்றி நண்பரே :-)
/தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும்//
தங்களின் கவிவரிகள் மிக அருமை சொல்லாடல்கள் சிறப்பு..
மரணத் தூதுவன்
மனிதர்களின் மத்தியிலும்
உலாவிக்கொண்டிருக்கிறான்
மர்மான முறையில்
உலகெங்கிலும்....
அன்புடன் மலிக்கா,
///தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும்//
தங்களின் கவிவரிகள் மிக அருமை சொல்லாடல்கள் சிறப்பு..
மரணத் தூதுவன்
மனிதர்களின் மத்தியிலும்
உலாவிக்கொண்டிருக்கிறான்
மர்மான முறையில்
உலகெங்கிலும்....//
நிச்சயமானதும் ஆழமானதுமான கருத்து.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)
//தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும்//
மிக நுட்பமான கவித்துவ வரிகள்
கவிதை அருமை !
Post a Comment