ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும்
நீர்ப்பாம்புகளசையும்
தூறல் மழையிரவில் நிலவு
ஒரு பாடலைத் தேடும்
வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில்
மூங்கில்கள் இசையமைக்கும்
அப் பாடலின் வரிகளை
முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும்
ஆல விருட்சத்தின்
பரந்த கிளைக் கூடுகளுக்குள்
எந்தப் பட்சிகளின் உறக்கமோ
கூரையின் விரிசல்கள் வழியே
ஒழுகி வழிகின்றன
கனாக்கள்
நீர்ப்பாம்புகள் வௌவால்கள்
இன்னபிறவற்றை
வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள்
தூறல் மழையாகிச் சிதறுகின்றன
ஆவியாகி
பறவைகளோடு சகலமும் மௌனித்த இரவில்
வெளியெங்கும்
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எங்கள் தேசம் இதழ் - மே 01 - 15, 2012
# மலைகள் இணைய இதழ் - 01
# திண்ணை
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எங்கள் தேசம் இதழ் - மே 01 - 15, 2012
# மலைகள் இணைய இதழ் - 01
# திண்ணை
7 comments:
அருமை ரிஷான்.
கூரையின் விரிசல்கள் வழியே
ஒழுகி வழிகின்றன
கனாக்கள்
நல்லாய் எழுதிறாய் நண்பா. உன் கனவுகள் வளரட்டுக்கும்
வ.ஐ.ச.ஜெயபாலன்
//கூரையின் விரிசல்கள் வழியே
ஒழுகி வழிகின்றன
கனாக்கள்// ஆகா, அற்புத வரிகள். வாழ்த்துக்கள் ரிசான்!
அன்பின் ராமலக்ஷ்மி,
//அருமை ரிஷான்.//
வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிகவும் நன்றி அன்புச் சகோதரி !
அன்பின் ஜாவித் ரயீஸ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !
அன்பின் நண்பர் வ.ஐ.ச.ஜெயபாலன்,
//நல்லாய் எழுதிறாய் நண்பா. உன் கனவுகள் வளரட்டும்//
உங்கள் வருகையும் கருத்தும் வாழ்த்தும் பெரும் ஊக்கத்தைத் தருகிறது.
மிகவும் நன்றி அன்பு நண்பரே !
அன்பின் கலைமகன் பைரூஸ்,
//ஆகா, அற்புத வரிகள். வாழ்த்துக்கள் ரிசான்!//
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !
Post a Comment