காற்றுக் குதிரைகள் கிளர்ந்து கிளப்பிய
தூசுப் படலத்தினுள்
சேர்த்து வைத்திருந்த இனிய பாடல்களும்
அந்தி விசும்போடு சிதைந்தழிந்தன
பகல் முழுதும் தீக் கண்களால்
பார்த்திருந்த வெயில்
மேகக் கூட்டத்துக்கு
மேலும் நீர் கோர்த்தது
கதவுகளைத் திறந்தேதான்
வைத்திருக்கிறேன்
எந்த ஓவியனாவது வந்து
வெயிலைப்போல
அல்லது சாரலைப்போல
ஏதேனும் கிறுக்கிச் செல்லட்டும்
ஒரு தபால்காரனாவது வந்து
ஏதேனும் தந்துசெல்லட்டும்
ஒரு வண்ணத்துப்பூச்சி
பூக்களின் வாசனைகளோடு
வந்துசெல்லட்டும்
அன்றேல்
மெதுநடைப் பூனையொன்றேனும்
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# யாத்ரா இதழ் - 20, ஜனவரி 2012
# எதுவரை இதழ் - 03, ஜூலை 2012
# உயிர்மை
# திண்ணை
6 comments:
இன்றே தங்கள் தளம் கண்டேன்.. மிக அருமையான வரிகள்.. இன்றுமுதல் தொடர்கிறேன்..
நல்ல கவிதை,கதவுகளை மட்டுமல்ல.
மனதையும் திறந்து வைத்தாலே இதெல்லாம் இதெல்லாம் சரியாகிபோகும் என்பதே இந்த நேரத்து யதார்த்தமாக இருக்கிறது.
அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com
அன்பின் நண்பர் கோவி,
உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வினைத் தருகிறது. மிகவும் நன்றி நண்பரே.
அன்பின் விமலன்,
//நல்ல கவிதை,கதவுகளை மட்டுமல்ல.
மனதையும் திறந்து வைத்தாலே இதெல்லாம் சரியாகிபோகும் என்பதே இந்த நேரத்து யதார்த்தமாக இருக்கிறது.//
நிச்சயமாக. அருமையான கருத்து.
நன்றி நண்பரே !
அன்பின் டி.கே.தீரன்சாமி,
நன்றி நண்பரே !
Post a Comment