காதல் வானத்திலேறி
இதய வானவில்லில் குதித்து அதன்
நிறமிழந்த பகுதிகளுக்கு நீ
சாயமடித்த பொழுதில்தான்
என்னறைக்கு உதிர்ந்திருக்கவேண்டும்
சூழ விழுந்தவற்றை
எனதிருப்பிடம் வந்த பாதங்கள்
வஞ்சகமாய்க் கொண்டுவந்து சேர்த்தன
அந்தரத்தில் நின்றவற்றை
அவதூறு சுமந்த காற்று
அள்ளி வந்து தெறித்தது
உன் தவறால்
பெரும்பாரமாய் அழுத்தும்
வண்ணங்களால் நிறைந்ததென்னறை
என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை
அறை முழுதும்
சிதறிக்கிடக்கின்றன
நீ தெறித்த வண்ணங்கள்
மௌனத்தின் வண்ணத்தை மட்டும்
நான் முழுதும் பூசிக்கொள்கிறேன்
எஞ்சிய வண்ணங்களை
நீயேயள்ளிக் கொண்டுபோ
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
13 comments:
நல்லா இருக்குங்க...
:)
//உன் தவறால்
பெரும்பாரமாய் அழுத்தும்
வண்ணங்களால் நிறைந்ததென்னறை//
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
அன்பின் ரிஷான்
((அந்தரத்தில் நின்றவற்றை
அவதூறு சுமந்த காற்று
அள்ளி வந்து தெறித்தது))
இந்த வரிகளின் பொருளைப் பின் தொடர்ந்து இக் கவிதையைப் படித்துக் கொண்டு போகும் பொழுது கொஞ்சம் வலிக்கவே செய்கிறது.
அன்பின் பழமைபேசி,
//நல்லா இருக்குங்க...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கவின்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சுரேஷ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
//((அந்தரத்தில் நின்றவற்றை
அவதூறு சுமந்த காற்று
அள்ளி வந்து தெறித்தது))
இந்த வரிகளின் பொருளைப் பின் தொடர்ந்து இக் கவிதையைப் படித்துக் கொண்டு போகும் பொழுது கொஞ்சம் வலிக்கவே செய்கிறது.//
அனேகமான காற்று சுவாசத்தோடு வலிகளையும் அவதூறுகளையும் கூடவே சுமந்துவருகின்றனவே.. :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
//என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை//
சமயங்களில் காலம் வண்ணங்களை அழித்து விட வாய்ப்பிருக்கிறது...
//என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை//
சமயங்களில் காலம் வண்ணங்களை அழித்து விட வாய்ப்பிருக்கிறது...
அன்பின் கவிநயா,
////என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை//
//சமயங்களில் காலம் வண்ணங்களை அழித்து விட வாய்ப்பிருக்கிறது...//
ஆமாம். காலத்தின் கரங்களிலுள்ள அழித்துவிடுவதும் அழியாக் கறையாக ஆக்கிவிடுவதுவும். :(
அழித்துவிடுமென நம்புவோம் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
//அறை முழுதும்
சிதறிக்கிடக்கின்றன
நீ தெறித்த வண்ணங்கள்
மௌனத்தின் வண்ணத்தை மட்டும்
நான் முழுதும் பூசிக்கொள்கிறேன்
எஞ்சிய வண்ணங்களை
நீயேயள்ளிக் கொண்டுபோ//
அட்டகாசம் ரிஷான்.. மிக அழகா எழுதி இருக்கீங்க..
அன்பின் சரவணகுமார்,
//அட்டகாசம் ரிஷான்.. மிக அழகா எழுதி இருக்கீங்க..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment