Monday, March 2, 2009
எம் மண்
நடந்து நடந்து பாதங்கள் வெடித்தன
வாழ்விடம் குறித்த கனவுகள் பெருகி
ஏக்கங்கள்
தாண்டும் பொழுதுகளிலெல்லாம் வழியலாயிற்று
சொந்தத் தரை மண்ணிட்டுப்
போற்றி வளர்க்கும் செடியொன்றின்
கிளைப் பூக்களுக்கு அவாவி
எல்லா இடர்களுக்குள்ளும்
எம் சுவடுகள் திரிகின்றன
நிலவும் பார்த்திற்று சூரியன் கொண்டுபோன
நீர்த்துகளும் பார்த்திற்று
இன்னும் அனைத்தும் பார்த்திட
வாழ்வின் அறுவடைக்கு முன்னர்
விடியலைத்தான் காணவில்லை
' வரிசை வரிசையாய் மனிதர்கள்
ஆயுதங்கள் கொண்டு
இடையில் கோடுகிழித்துச் சலனங்களை
ஏற்படுத்து
சுமைகளை அந்தரத்தில் விட்டு
திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடிப்போகட்டும்
மனிதர்கள் எறும்பல்லவே
ஒன்றுகூடுதல் ஆபத்து
அவர்களுக்குள் மொழி இருக்க
தேசம் பற்றிய இலட்சியங்கள் இருக்க
தாய்மண் தந்த வீரம் வழிநடத்துகிறது '
எனக் குறிப்புகளெடுத்து
அப்பாவி ஜீவன்களின் உயிரெடுத்தல் குறித்துப்
பாடங்கள் நடத்து
தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
நன்றி - யுகமாயினி ( பெப்ரவரி, 2009 )
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
valaikalin varikalaaga irukkiRathu. thanks
துயரமும் கொப்பளிக்கிறது. பணியாத நம்பிக்கைகளும் துளிர்க்கிறது
வாழ்த்துக்கள் நண்பரே!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஏதோ மனதை உறுத்துகிறது.
தீராநதி வாசித்தேன். அ. முத்துலிங்கம் தாம் எழுதும் பத்தியில் தங்களைக் குறிப்பிட்டிருந்தார் 'நல்ல கவிஞரென'. அந்த மாபெரும் எழுத்தாளரின் அபிப்ராயம் உங்கள் தோள்கள் மீது புகுத்தி இருக்கும் சுமையை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பகிர்ந்து கொள்ள தோண்றியது. சொல்லிவிட்டேன். வாழ்த்துக்கள்!
ரிஷான் நல்லா இருக்கு உங்கள் கவிதை
மனதை உறுத்தும் துயரம் தோய்ந்த வரிகளில் உறுதியையும் உரைக்கிறது கவிதை.
நிறைய எழுதுங்க நண்பா.
Dear Friend!
Greetings for good work!
I visited Mavanella in 2002 + kegalle,kandy too!
I have relative Mr.Rajendran having a shop in M-town!Do you know him!Say hallo!to him!
//ஆயுதங்கள் கொண்டு
இடையில் கோடுகிழித்துச் சலனங்களை
ஏற்படுத்து
சுமைகளை அந்தரத்தில் விட்டு
திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடிப்போகட்டும்//
மிகவும் பாதித்த வரிகள் ரிஷு. விடியல் விரைவில் வர வேண்டும்.
//தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல//
அப்பப்பா என்ன அருமயான வரிகள்.
தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல
குறிப்பா இந்த வரி பிரமாதம்.... ஒரு சோறு பதம் என்பது போல.... ஆகாயம் தாண்டி வலியைப் பிரதிபளிக்கிறது இவ்வார்த்தைகள்...
அருமை என்று சொல்லிவிட்டு செல்வது நல்லதல்ல...... ஏனெனில் சில படைப்புகள் பாராட்டுக்கு அப்பாற்பட்டது..
நிதர்சனமான வரிகள் நண்பரே!
என்றும் காணும் விடியல் இந்த தேசம்?!
//நிலவும் பார்த்திற்று சூரியன் கொண்டுபோன
நீர்த்துகளும் பார்த்திற்று
இன்னும் அனைத்தும் பார்த்திட
வாழ்வின் அறுவடைக்கு முன்னர்
விடியலைத்தான் காணவில்லை//
கோபம் தளர்ந்து கொஞ்சம் விரக்தி தெரிகிறது உங்கள் வரிகளில் ரிஷான் .சொந்த
ஊருக்கு போய் வந்ததன் வெளிப்பாடோ .....விரைவில் விடியட்டும் என்று
வேண்டிக் கொள்வோம் மனம் தளராமல்
//தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல//
இந்த உணர்வு தான் ரிஷி நம் நம்பிக்கையின் ஆணி வேர்
அருமை ரிசான்
//தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல//
அதுதான் எங்கள் 'மண்'.....
// நன்றி - யுகமாயினி ( பெப்ரவரி, 2009 )//
ரிஷான் இந்தப்பத்திரிகையில் தானே உதவி ஆசிரியராக இருந்தார் தியாகி முத்துக்குமார்?
அன்பின் நண்பர் கானாபிரபா,
//valaikalin varikalaaga irukkiRathu. thanks//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் நண்பர் மாதவராஜ்,
//துயரமும் கொப்பளிக்கிறது. பணியாத நம்பிக்கைகளும் துளிர்க்கிறது
வாழ்த்துக்கள் நண்பரே!//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் நிர்ஷன்,
//என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஏதோ மனதை உறுத்துகிறது.//
நீண்ட நாட்களின் பின்னர் உங்களைக் காண்கிறேன். நலம்தானே ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !
அன்பின் செல்வேந்திரன்,
//தீராநதி வாசித்தேன். அ. முத்துலிங்கம் தாம் எழுதும் பத்தியில் தங்களைக் குறிப்பிட்டிருந்தார் 'நல்ல கவிஞரென'. அந்த மாபெரும் எழுத்தாளரின் அபிப்ராயம் உங்கள் தோள்கள் மீது புகுத்தி இருக்கும் சுமையை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பகிர்ந்து கொள்ள தோண்றியது. சொல்லிவிட்டேன். வாழ்த்துக்கள்! //
என்னை மகிழ வைக்கும்படியான செய்தியொன்றை எழுதிச் சென்றிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லியிருப்பதைப் போலவே நான் பெரிது மதிக்கும் எழுத்தாளர் என்னில் பெரும் பொறுப்பைச் சுமத்தியிருக்கிறார். அந் நம்பிக்கை சிதறாது நான் பாதுகாக்கவேண்டும்.. முயல்கிறேன் !
வருகைக்கும் தகவலுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் நண்பர் பிச்சுமணி,
//ரிஷான் நல்லா இருக்கு உங்கள் கவிதை//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நண்பர் இப்னு ஹம்துன்,
//மனதை உறுத்தும் துயரம் தோய்ந்த வரிகளில் உறுதியையும் உரைக்கிறது கவிதை.
நிறைய எழுதுங்க நண்பா.//
இன்ஷா அல்லாஹ்..எழுதுகிறேன் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் நண்பர் ஷான் நல்லையா,
//Dear Friend!
Greetings for good work!
I visited Mavanella in 2002 + kegalle,kandy too!
I have relative Mr.Rajendran having a shop in M-town!Do you know him!Say hallo!to him! //
திரு.ராஜேந்திரன் என்ன கடை செய்கிறார் நண்பரே ? அவரைப் பற்றிய மேலதிக விபரங்களைத் தரின், அறிந்துகொள்ள இலகுவாக இருக்கும். எனது மின்னஞ்சல் வழி தொடர்புகொள்ள முடியுமா?
mrishanshareef@gmail.com
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் கவிநயா,
////ஆயுதங்கள் கொண்டு
இடையில் கோடுகிழித்துச் சலனங்களை
ஏற்படுத்து
சுமைகளை அந்தரத்தில் விட்டு
திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடிப்போகட்டும்//
மிகவும் பாதித்த வரிகள் ரிஷு. விடியல் விரைவில் வர வேண்டும்.//
உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் கலை,
////தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல//
அப்பப்பா என்ன அருமயான வரிகள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ஆதவா,
//தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல
குறிப்பா இந்த வரி பிரமாதம்.... ஒரு சோறு பதம் என்பது போல.... ஆகாயம் தாண்டி வலியைப் பிரதிபளிக்கிறது இவ்வார்த்தைகள்...
அருமை என்று சொல்லிவிட்டு செல்வது நல்லதல்ல...... ஏனெனில் சில படைப்புகள் பாராட்டுக்கு அப்பாற்பட்டது..//
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் நண்பர் ஷீ-நிசி,
//நிதர்சனமான வரிகள் நண்பரே!
என்றும் காணும் விடியல் இந்த தேசம்?!//
இதே கேள்விதான் விடுதலை விரும்பும் எல்லோரினதும் விழிகளிலும் தொக்கி நிற்கிறது..விடை தான் தெரியவில்லை :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் பூங்குழலி,
//விரைவில் விடியட்டும் என்று
வேண்டிக் கொள்வோம் மனம் தளராமல்//
நிச்சயமாக...!
கருத்துக்கு நன்றி சகோதரி !
அன்பின் சிவா,
தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல
//இந்த உணர்வு தான் ரிஷி நம் நம்பிக்கையின் ஆணி வேர்//
ஆமாம் சிவா. அந்த உணர்வு முழுமையாக இருப்பதனால்தான் அநீதிகளுக்கெதிராக ஒவ்வொருவராலும் போராடமுடிகிறது.
கருத்துக்கு நன்றி நண்பரே !
// அருமை ரிசான்//
நன்றி தேனுஷா !
// தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல//
//அதுதான் எங்கள் 'மண்'.....//
ஆமாம் விஜி சுதன்.
எங்கள் மண் என்று சொல்லும்போதே ஒரு உத்வேகம் பிறக்கிறதல்லவா?
//நன்றி - யுகமாயினி ( பெப்ரவரி, 2009 )//
//ரிஷான் இந்தப்பத்திரிகையில் தானே உதவி ஆசிரியராக இருந்தார் தியாகி முத்துக்குமார்?//
இல்லை சகோதரி.
அவர் பணிபுரிந்தது 'பெண்ணே நீ' எனும் பத்திரிகையில்.
கருத்துக்கு நன்றி சகோதரி !
//வரிசை வரிசையாய் மனிதர்கள்
ஆயுதங்கள் கொண்டு
இடையில் கோடுகிழித்துச் சலனங்களை
ஏற்படுத்து
சுமைகளை அந்தரத்தில் விட்டு
திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடிப்போகட்டும்
மனிதர்கள் எறும்பல்லவே
ஒன்றுகூடுதல் ஆபத்து
அவர்களுக்குள் மொழி இருக்கதேசம் பற்றிய இலட்சியங்கள் இருக்க
தாய்மண் தந்த வீரம் வழிநடத்துகிறது '
எனக் குறிப்புகளெடுத்து
அப்பாவி ஜீவன்களின் உயிரெடுத்தல் குறித்துப்
பாடங்கள் நடத்து
தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல....///
ம்ம் வலிகளே வாழ்க்கையான பின் நம்பிக்கை ஒன்று தானே எம்மிடம் மிச்சமுள்ளது ..
நன்றி ரிஷான் ..
மனதை பிசைகிறது ரிஷான்..
கவிதை அற்புதம்.
அருமை ரிசான்
வலிகளைத் தாங்கிக் கொண்டு நம்பிக்கையைப் பேசும் நல்ல கவிதை ரிஷான்.
//நிலவும் பார்த்திற்று சூரியன் கொண்டுபோன
நீர்த்துகளும் பார்த்திற்று
இன்னும் அனைத்தும் பார்த்திட
வாழ்வின் அறுவடைக்கு முன்னர்
விடியலைத்தான் காணவில்லை//
அந்த விடியல் விரைவில் வர எல்லோரும் பிரார்த்திப்போம்.
அன்பின் சக்தி,
//ம்ம் வலிகளே வாழ்க்கையான பின் நம்பிக்கை ஒன்று தானே எம்மிடம் மிச்சமுள்ளது ..
நன்றி ரிஷான் ..//
நிச்சயமாக சினேகிதி. அந்த நம்பிக்கையுமில்லாவிட்டால் வாழ்தலிலிருந்து நாமும் எப்பொழுதோ அகற்றப்பட்டிருப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி !
அன்பின் சரவணகுமார்,
//மனதை பிசைகிறது ரிஷான்..
கவிதை அற்புதம்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் சுவனப்பிரியன்,
//அருமை ரிசான்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ராமலக்ஷ்மி,
//வலிகளைத் தாங்கிக் கொண்டு நம்பிக்கையைப் பேசும் நல்ல கவிதை ரிஷான்.
//நிலவும் பார்த்திற்று சூரியன் கொண்டுபோன
நீர்த்துகளும் பார்த்திற்று
இன்னும் அனைத்தும் பார்த்திட
வாழ்வின் அறுவடைக்கு முன்னர்
விடியலைத்தான் காணவில்லை//
அந்த விடியல் விரைவில் வர எல்லோரும் பிரார்த்திப்போம்.//
நிச்சயமாக !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
Post a Comment