எனதான தனிமையை
இருட்டைப் போல உளவு பார்த்து
அடர் சருகுகள் பேய்களின் காலடியில்
மிதிபடும் ஓசையைக்
கனவுகள் தோறும் வழியவிட்டு
நெஞ்சு திடுக்கிட்டலறும்படி
அச்சமூட்ட முயலுமுனது
புலன்கள் முழுதும் பகை நிரம்பிக்
காய மறுத்திற்று
சாத்தான்களுலவும் வானின் மத்தியில்
முகில்களின் மறைப்புக்குக் காவிச்சென்றெனது
சிறகுகளகற்றிப் பறக்கவிடுகிறாய்
விசித்து விசித்தழும் மெல்லிய இதயத்தோடு
வீழ்ந்து நொறுங்குமெனது
இறுதிக் கணத்தில் தொங்கியபடி
கேட்கிறதுன் விகாரச் சிரிப்பு
பற்றுறுதியற்று
அழுந்தி வீழ்ந்த கண்ணாடி நேசத்தில்
பழங்கானல் விம்பங்களைக் கொடுங்காற்று
காலங்கள் தோறும் இரைத்திட
உனது வரையறைகளை
நீ விதித்த கட்டுப்பாடுகளை
விஷச்சர்ப்பமொன்று விழுங்கட்டும்
ஆதி தொட்டுக் காத்துவரும் வைரமாயவை
உருப்பெற்றுக் கக்கியபின் கொன்று
காவல்பாம்பாக நீயே மாறு
இலகுதானுனக்கு
கொன்றொழிப்பதும் காவல் காப்பதுவும்
காவலெனச் சொல்லிச் சொல்லிக் கொன்றொழிப்பதுவும்
-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# உன்னதம் செப்டம்பர், 2009 இதழ்
# திண்ணை இணைய இதழ்
15 comments:
அன்பு நண்பர் ரிஷான்,
கவிதை வரிகள் நன்றாகவே இருக்கின்றன. அதிலும் இறுதிவரிகள் சத்தியமான வார்த்தைகள்.
/* கொன்றொழிப்பதும் காவல் காப்பதுவும்
காவலெனச் சொல்லிச் சொல்லிக் கொன்றொழிப்பதுவும் */
வேலியே பயிரை மேய்வது பல தேசங்களில் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. மக்களை காக்க ஏற்படுத்தப்பட்ட அரசுகளே மக்களை கொன்றொழிப்பது கொடூரத்தின் உச்சம்.
Hi Rishan,
Congrats!
Your story titled 'காவல் நாகம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th October 2009 08:36:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/125787
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
கவிதை நன்று வாழ்த்துகள் ரிஷான்.
//எனதான தனிமையை
இருட்டைப் போல உளவு பார்த்து//
தனிமையை உளவு பார்க்கும் இருட்டு
நல்ல ஆரம்பம்.....
//அடர் சருகுகள் பேய்களின் காலடியில் //
அதானே ...பயமுறுத்தாமல்
கவிதை எழுதுவதா ?
//மிதிபடும் ஓசையைக்
கனவுகள் தோறும் வழியவிட்டு
நெஞ்சு திடுக்கிட்டலறும்படி
அச்சமூட்ட முயலுமுனது
புலன்கள் முழுதும் பகை நிரம்பிக்
காய மறுத்திற்று//
அருமை
//சாத்தான்களுலவும் வானின் மத்தியில்
முகில்களின் மறைப்புக்குக் காவிச்சென்றெனது
சிறகுகளகற்றிப் பறக்கவிடுகிறாய்
விசித்து விசித்தழும் மெல்லிய இதயத்தோடு
வீழ்ந்து நொறுங்குமெனது//
பரிதவிப்பை சொல்லும் வரிகள்
//இறுதிக் கணத்தில் தொங்கியபடி
கேட்கிறதுன் விகாரச் சிரிப்பு
பற்றுறுதியற்று //
இந்த ஒரு சொல் கவிதையின் அச்சாணி போல்
//பழங்கானல் விம்பங்களைக் கொடுங்காற்று
காலங்கள் தோறும் இரைத்திட
உனது வரையறைகளை
நீ விதித்த கட்டுப்பாடுகளை
விஷச்சர்ப்பமொன்று விழுங்கட்டும்
ஆதி தொட்டுக் காத்துவரும் வைரமாயவை
உருப்பெற்றுக் கக்கியபின் கொன்று
காவல்பாம்பாக நீயே மாறு
இலகுதானுனக்கு
கொன்றொழிப்பதும் காவல் காப்பதுவும்
காவலெனச் சொல்லிச் சொல்லிக் கொன்றொழிப்பதுவும்//
ஆழ்ந்த உணர்வுகளை சொல்லும் கவிதை ரிஷான்
கண்ணாடி நேசம்..புது உவமை ரிஷான் வழக்கம்போல இந்தக்கவிதையும் சிறப்பு..வலிகளை ஏந்திய வார்த்தைகள்கொண்ட கவிதை
ரிஷானின் கவிதைதை படிக்கும் போதெல்லாம் எனக்குள் எழும் கேள்வி. எங்க இருந்துதான் வார்த்தைகளை பிடிக்கிறாரோ தெரியலை.. அருமையான கவிதை. வளமான சொல்லாட்சி
பலவற்றறை சொல்லாமல் சொல்கிறது கவிதை
அன்பின் ஷேக் தாவூத்,
//அன்பு நண்பர் ரிஷான்,
கவிதை வரிகள் நன்றாகவே இருக்கின்றன. அதிலும் இறுதிவரிகள் சத்தியமான வார்த்தைகள்.
/* கொன்றொழிப்பதும் காவல் காப்பதுவும்
காவலெனச் சொல்லிச் சொல்லிக் கொன்றொழிப்பதுவும் */
வேலியே பயிரை மேய்வது பல தேசங்களில் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. மக்களை காக்க ஏற்படுத்தப்பட்ட அரசுகளே மக்களை கொன்றொழிப்பது கொடூரத்தின் உச்சம்.//
மிகச் சரி. இந்தக் கொடூரங்கள் வழிவழியாகத் தொடர்கின்றன. பாதுகாப்புக்காக எனச் சொல்லிக்கொண்டு காவல் மீறுகின்றன. :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பா !
அன்பின் நிர்ஷா,
//பலவற்றறை சொல்லாமல் சொல்கிறது கவிதை//
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !
அன்பின் லாவண்யா,
//கவிதை நன்று வாழ்த்துகள் ரிஷான்.//
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !
அன்பின் பூங்குழலி,
வழமை போலவே விரிவான, ஆழமான கருத்து.
நன்றி சகோதரி !
அன்பின் ஷைலஜா அக்கா,
//கண்ணாடி நேசம்..புது உவமை ரிஷான் வழக்கம்போல இந்தக்கவிதையும் சிறப்பு..வலிகளை ஏந்திய வார்த்தைகள்கொண்ட கவிதை//
:))
கருத்துக்கு நன்றி அக்கா !
அன்பின் சிவா,
//ரிஷானின் கவிதை படிக்கும் போதெல்லாம் எனக்குள் எழும் கேள்வி. எங்க இருந்துதான் வார்த்தைகளை பிடிக்கிறாரோ தெரியலை.. அருமையான கவிதை. வளமான சொல்லாட்சி //
:))
கருத்துக்கு நன்றி நண்பரே !
எதிரொலி
நயமாக எடுத்துரைத்திருக்கின்றாய்
-அம்மா
அன்பின் சீதாலக்ஷ்மி அம்மா,
//எதிரொலி
நயமாக எடுத்துரைத்திருக்கின்றாய்
அம்மா//
:)
கருத்துக்கு நன்றி அன்பு அம்மா !
Post a Comment