Sunday, November 1, 2009

நினைவின் கணங்கள்


பெரும்பெரும் வலிநிறை
கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும்
நகர்ந்து வந்த கணங்கள்
சில பொழுதுகளில் அழகானவைதான்
புன்னகை தருபவைதான்

ஒரு தனித்த அந்தி
எல்லாக் கணங்களையும்
விரட்டிக்கொண்டு போய்
பசுமைப் பிராந்தியமொன்றில்
மேயவிடுகிறது
நீ வருகிறாய்

மேய்ச்சல் நிலத்திலிருந்த
கணங்களனைத்தையும் உன்னிரு
உள்ளங்கைகளிலள்ளி உயரத்தூக்கி
கீழே சிதறட்டுமென விடுகிறாய்
எல்லாம் பள்ளமென ஓடி
நினைவுகளுக்குள் புதைகிறது

மீளவும்
நினைவின் கணங்கள்
மலையிறங்கக் காத்திருக்கின்றன

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை

31 comments:

மாதேவி said...

நல்ல கவிதை.

"மீளவும்
நினைவின் கணங்கள்
மலையிறங்கக் காத்திருக்கின்றன" ஆமாம் முடிவேது.

ஃபஹீமாஜஹான் said...

"ஒரு தனித்த அந்தி
எல்லாக் கணங்களையும்
விரட்டிக்கொண்டு போய்
பசுமைப் பிராந்தியமொன்றில்
மேயவிடுகிறது
நீ வருகிறாய்"

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான். உங்கள் கவிதையிலும் மொழியிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சியானது.
வாழ்த்துக்கள்.

பென்னேஸ்வரன் said...

அருமை ரிஷான்.

விஜி said...

தலைப்புக்கு பொருத்தமான வார்த்தைக் கோர்வைகள் ரிஷான்.

//ஒரு தனித்த அந்தி
எல்லாக் கணங்களையும்
விரட்டிக்கொண்டு போய்
பசுமைப் பிராந்தியமொன்றில்
மேயவிடுகிறது
நீ வருகிறாய்//


இந்த இனிய வரிகளை மிகவும் ரசித்தேன் ரிஷான்..நினைவின் கணங்கள்...இனிமை.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பு நண்பர் ரிஷான்,
நல்ல கவிதை.
வாசிப்பதற்கு கவிதை வரிகள் அழகாக இருக்கின்றது.

காந்தி said...

எல்லாம் பள்ளமென ஓடி
நினைவுகளுக்குள் புதைகிறது


- பிடித்த வரிகள்...ரிஷ்...

என்ன? தாயகம் வந்ததும் எழுதிய முதல் கவிதையா? :-)

அன்புடன்
~காந்தி~

M.Rishan Shareef said...

அன்பின் மாதேவி,

//நல்ல கவிதை.

"மீளவும்
நினைவின் கணங்கள்
மலையிறங்கக் காத்திருக்கின்றன" ஆமாம் முடிவேது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//"ஒரு தனித்த அந்தி
எல்லாக் கணங்களையும்
விரட்டிக்கொண்டு போய்
பசுமைப் பிராந்தியமொன்றில்
மேயவிடுகிறது
நீ வருகிறாய்"

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான். உங்கள் கவிதையிலும் மொழியிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சியானது.
வாழ்த்துக்கள்.//

உங்கள் தொடர்ந்த ஊக்குவிப்பும் வழிகாட்டுதலும்தான் என்னை இந்த நல்வழியில் செலுத்துகிறது சகோதரி !

அதற்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

//அன்பு நண்பர் ரிஷான்,
நல்ல கவிதை.
வாசிப்பதற்கு கவிதை வரிகள் அழகாக இருக்கின்றது.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் பென்னேஸ்வரன்,

//அருமை ரிஷான்.//


கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//தலைப்புக்கு பொருத்தமான வார்த்தைக் கோர்வைகள் ரிஷான்.

//ஒரு தனித்த அந்தி
எல்லாக் கணங்களையும்
விரட்டிக்கொண்டு போய்
பசுமைப் பிராந்தியமொன்றில்
மேயவிடுகிறது
நீ வருகிறாய்//


இந்த இனிய வரிகளை மிகவும் ரசித்தேன் ரிஷான்..நினைவின் கணங்கள்...இனிமை.//


:)
கருத்துக்கு நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் காந்தி அக்கா,

நலமா அக்கா? என்ன ஆளையே காணவில்லை? :)

//எல்லாம் பள்ளமென ஓடி

நினைவுகளுக்குள் புதைகிறது


- பிடித்த வரிகள்...ரிஷ்...

என்ன? தாயகம் வந்ததும் எழுதிய முதல் கவிதையா? :-)//


கருத்துக்கு நன்றி அக்கா !

பூங்குழலி said...

//ஒரு தனித்த அந்தி
எல்லாக் கணங்களையும்
விரட்டிக்கொண்டு போய்
பசுமைப் பிராந்தியமொன்றில்
மேயவிடுகிறது
நீ வருகிறாய//

அழகான கவிதை

Kavinaya said...

அழகான வெளிப்பாடு ரிஷு. பலரும் எடுத்துக் காட்டியுள்ள வரிகளே எனக்கும் பிடித்தவை.

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

////ஒரு தனித்த அந்தி
எல்லாக் கணங்களையும்
விரட்டிக்கொண்டு போய்
பசுமைப் பிராந்தியமொன்றில்
மேயவிடுகிறது
நீ வருகிறாய//

அழகான கவிதை//

கருத்துக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//அழகான வெளிப்பாடு ரிஷு. பலரும் எடுத்துக் காட்டியுள்ள வரிகளே எனக்கும் பிடித்தவை.//

நீண்ட நாட்களின் பின்னர் வந்திருக்கிறீர்கள். நலமா சகோதரி?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

இளசு said...

மேய்ச்சலுக்கான பச்சைவெளியில்
கொட்டி இருந்தவை..
திடப்புற்களா?
திரவத் துளிகளா?
அரூபக் காற்றா?


மனவெளியில் பல பிம்பங்களைத் தீட்டும்
அபூர்வத் தூரிகை ரிஷானின் விரல்!

அசந்தேன் வரிக்கட்டு, கருத்தாழம் கண்டு!

கவிதா said...

*நல்லா இருக்கு உங்க கவிதை..
எனக்கு ஒருமுறைக்கு மூன்று முறை படித்த பிறகுதான் புரிந்தது..
நன்றாக எழுதி இருகிங்கள் வாழ்த்துக்கள் *

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் இளசு,

//மேய்ச்சலுக்கான பச்சைவெளியில்
கொட்டி இருந்தவை..
திடப்புற்களா?
திரவத் துளிகளா?
அரூபக் காற்றா?


மனவெளியில் பல பிம்பங்களைத் தீட்டும்
அபூர்வத் தூரிகை ரிஷானின் விரல்!

அசந்தேன் வரிக்கட்டு, கருத்தாழம் கண்டு! //

மிக அழகான மொழிநடையில் உங்கள் கருத்தினைக் கண்டு மகிழ்கிறேன்.
நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கவிதா,

//நல்லா இருக்கு உங்க கவிதை..
எனக்கு ஒருமுறைக்கு மூன்று முறை படித்த பிறகுதான் புரிந்தது..
நன்றாக எழுதி இருகிங்கள் வாழ்த்துக்கள் //

:)
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

மஞ்சுபாஷிணி said...

அழகான வரிகள் ரிஷன்.... வாழ்த்துக்கள் கவிதை மிக அருமை...

M.Rishan Shareef said...

அன்பின் மஞ்சுபாஷிணி,

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)

செல்வா said...

எந்த வலி நிறைந்த வாழ்க்கையிலும்
தகுந்த துணை கிடைக்கும் போது
அல்லது துணையின் நினைவுகள்
வலி மறக்கச் செய்பவை...

துணையின் துணை சிறு பொழுதாயினும்
பெரும் பொழுதின் வலி சுமக்கும் வலிமை தரும்.

இங்கே துணையெனச் சுட்டப் படுவது ஏதோ?

வறுமையில் வாடும் கவிஞனுக்கு
கவிக் குழந்தைகள் பிறக்கும் நேரம்

இன்னும் பல உருவகங்களாக உறவுகளாகப் பிரியும் பொருள் நிறைந்த கவிதையாகப் படுகிறது...

இது தான் கருவா...?

வாழ்த்துக்கள் ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் செல்வா,

//எந்த வலி நிறைந்த வாழ்க்கையிலும்
தகுந்த துணை கிடைக்கும் போது
அல்லது துணையின் நினைவுகள்
வலி மறக்கச் செய்பவை...

துணையின் துணை சிறு பொழுதாயினும்
பெரும் பொழுதின் வலி சுமக்கும் வலிமை தரும்.

இங்கே துணையெனச் சுட்டப் படுவது ஏதோ?

வறுமையில் வாடும் கவிஞனுக்கு
கவிக் குழந்தைகள் பிறக்கும் நேரம்

இன்னும் பல உருவகங்களாக உறவுகளாகப் பிரியும் பொருள் நிறைந்த கவிதையாகப் படுகிறது...

இது தான் கருவா...?

வாழ்த்துக்கள் ரிஷான். //

உங்கள் கருத்து மகிழ்ச்சி தருகிறது.
கவிதையை வாசிக்கையில் அவரவரது உணர்வுகளில், நினைவுகளில் தோன்றுவதையிட்டு கவிதையை எண்ணிக் கொள்ளலாம்.
உங்கள் சிந்தனை வித்தியாசமானதாக இருக்கிறது.

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

அமரன் said...

//மனவெளியில் பல பிம்பங்களைத் தீட்டும்
அபூர்வத் தூரிகை ரிஷானின் விரல்!//

அண்ணனின் இந்தக் கட்டை கண்டபிறகுமா பங்காளி
உன்னில் இந்தக் கேள்வி பிறந்தது!!!!!!!!

அமரன் said...

இன்று என்ற கோடு பிரிக்கும் இரு காலங்கள் நேற்றும் நாளையும். நேற்றிலும் நாளையிலும் இழைந்தோடும் நினைவுகள் நிஜமாக இருக்க நேற்றய நினைவுகள் நினைவில் நின்று நிலைத்த மாயத்தோற்றத்தைத் தந்துவிட்ட நிலையில், இருகாலச் சக்கரங்களில் பயணிக்கும் கணங்களாகவே இந்தக்கவிதை எனக்குப் படுகிறது.

அந்தி நேர மயக்கத்தில் ஆனந்த நினைவுக் கணங்களின் நாட்டிய நிகழ்ச்சி; கடந்து சென்றவற்றை கடத்தி வந்தோ கனவுப்பூக்களைக் கற்பனைத் தாளத்துக்கு ஆடவைத்தோ அழகான காயம் ஏற்படுத்தி விடுகின்றன. வழிந்தோடும் குருதியையும் வியர்வையும் குழைத்து கைகளில் மோந்து வானருவியாகப் பாயவிடும் தேவதை ஒவ்வொரு கற்பனையிலும் புதுப்புது மங்கல தோரணம் கட்டுகிறாள். உரு அகக் கருக் கொள்கிறாள்.

கடையில் எங்கிருந்து வந்ததோ அங்கேயே அடங்கியது என்று ஆனந்தத்தின் ஆணிவேரை அடையாளம் காட்டி கீதாச்சார வேஷம் பூண்கிறாள். வட்டப்பாதையில் வண்ணம் பூசுகிறாள்.

அழகோவியம் கவியானது! ஆழமறிந்தால் ஆனந்தத்துக்குப் பாலம் அமைக்கலாம்.

வாழ்த்துகள் ரிஷான்

இளசு said...

செல்வா, அமரனின் பின்னூட்டங்கள்... மெய்சிலிர்க்கிறேன்..

இவர்களின் அண்ணன் என்பதில் பூரிக்கிறேன்..

M.Rishan Shareef said...

அன்பின் அமரன்,

உங்கள் தெளிவான, விரிவான கருத்து மகிழ்விப்பதோடு, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கிறது நண்பரே.
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் இளசு,

//செல்வா, அமரனின் பின்னூட்டங்கள்... மெய்சிலிர்க்கிறேன்..//

நானும் நண்பரே :)
மகிழ்வாகவும் உணர்கிறேன்.
கருத்துக்கு நன்றி நண்பரே !

பாரதி said...

வார்த்தைப் பயன்பாடு வியப்பை அளிக்கிறது.
அழகான பின்னூட்டங்கள் அதற்கு கட்டியம் கூறுகின்றன.
கவிஞர் எதை நினைத்து இக்கவிதையை படைத்தார் என அறிய ஆவல்.
இனிய பாராட்டு நண்பரே.

M.Rishan Shareef said...

அன்பின் பாரதி,

//வார்த்தைப் பயன்பாடு வியப்பை அளிக்கிறது.
அழகான பின்னூட்டங்கள் அதற்கு கட்டியம் கூறுகின்றன.
கவிஞர் எதை நினைத்து இக்கவிதையை படைத்தார் என அறிய ஆவல்.
இனிய பாராட்டு நண்பரே. //

ஒரு தனித்த அந்தியில் நல்ல ஞாபகங்களை மீட்டிப் பார்க்கையில், அதில் எட்டிப் பார்க்கும் பழைய நேசத்தின் சோகம், அந்த இனிமைகளை தலைகீழாகப் புரட்டிவிடுவதை கவிதையில் குறிப்பிட முனைந்திருக்கிறேன். :)

கருத்துக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !