அன்பின் நண்பர்களுக்கு,
காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 03, 2010) மாலை ஆறு மணிக்கு, இந்தியா, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது.
எனது கவிதைத் தொகுப்பை கவிஞர் சுகிர்தராணி வெளியிட கவிஞர் உமா ஷக்தி பெற்றுக் கொள்கிறார். எனது தொகுப்புடன் சேர்த்து மொத்தம் எட்டு ஈழத்து நூல்கள் அந் நாளில் வெளியிடப்படவிருக்கின்றன.
இது சம்பந்தமாக காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் திரு.கண்ணன் சுந்தரம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய அறிமுகம் கீழே...
திரு.கண்ணன் சுந்தரம், கவிஞர் சுகிர்தராணி, கவிஞர் உமா ஷக்தி, நேர்காணல் அறிவிப்பாளர் திரு.கானா பிரபா மற்றும் எனது கவிதைகளோடு இங்கு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
விழாவுக்கு உங்கள் வருகையையும் நல்லாசிகளையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்
13 comments:
இனிய வாழ்த்துக்கள் தம்பி.
வாழ்த்துக்கள் றிஸான்.. மிகவும் மகிழ்ச்சியான செய்தி..
வாழ்த்துக்கள் நண்பா.. வெற்றீயடைவீர்கள்..
Kalakkunga nanba
வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ரிஷான்.
வாழ்த்துக்கள் தோழரே
வாழ்த்துக்கள் ரிஷான்
நேற்று காலச்சுவடு புத்தக வெளியீட்டு விழாவில் எம்.ரிஷான் ஷெரிப்பின்" வீழ்தலின் நிலம்'',ரஷ்மியின் ''ஈதேனின் பாம்புகள்'' ஆகிய கவிதைத்தொகுப்புகளை வாங்கினேன்.
அன்பின் நண்பர்கள்
# சம்மா
# தேனம்மை லக்ஷ்மணன்
# கானா பிரபா
# திகழ்
# ராமலக்ஷ்மி
# மன்னார் அமுதன்
# ராஜா
# விஜய் மகேந்திரன்
உங்கள் அன்பான வாழ்த்துக்களில் பெரிதும் மகிழ்கிறேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட எனது புத்தகவெளியீட்டு விழா சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட மற்றும் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி !
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி..!
உங்கள் 'ஆதித் துயர்' கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி !
மிகவும் மகிழ்ச்சியான செய்தி
இனிய வாழ்த்துக்கள் ரிஷான்.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி முஹம்மத் :-)
Post a Comment