துல்லியமான நீர்ப்பரப்பு
கூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறது
சலனமற்றிருக்கிறது ஈர நிலத்தின் சயனம்
போர்வையின் பாசிப் பூக்களும் பசிய அலங்காரங்களும்
அசைந்தசைந்து
காற்றின் தாலாட்டுக்களை இசைக்கின்றன மௌனமாய்
உன் கையிலொரு மதுக் குவளை
'அதிதிகளாய்ப் பறவைகள் வந்திரையும்
மா கடலின் மேலேயான வானம் பற்றித் தெளிவாகத் தெரியும்
சமுத்திரம் பற்றி மட்டும் சொல்' என்றாய்
'இறுதி மதுவில் கரைந்தழியும் பேரண்டம்'
வேறென்ன சொல்ல இயலும்
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - # அம்ருதா இதழ்-பெப்ரவரி
2015, # வல்லமை இதழ் # தமிழ் எழுத்தாளர்கள் இதழ், # நவீன விருட்சம் இதழ் # வார்ப்பு
இதழ்
No comments:
Post a Comment