கொழுத்த வெயில் பரவிய தார்வீதியின்
மேலுதிர்ந்த ஒற்றைப் பூவினை
ஏழை யாசகனொருவனின் மெலிந்த பாதமொன்று
மிதித்து நகர்கிறது
மிதிபடாவிடினும்
தாரோடு சேர்ந்து இதழ்கள் கறுக்க
இன்னும் பொசுங்கியிருக்கக்கூடும்
உதிர்த்த விருட்சத்துக்குத் தெரியவில்லை
பூவின் வலி
விருட்சத்தின் வேர்களும் கானகமொன்றிலிருந்து
எப்பொழுதோ அகற்றப்பட்டிருக்க
கொடும் நகரத்துக்குள் பூக்கள் உதிர்க்க
நிழல் சருகுகளையா தேடமுடியும்
மரத்திலிருந்து உதிர்ந்த
ஒற்றைக் காகத்தின் நிழல் மட்டும்
கறுப்பாகப் பறந்தவாறே
அடுத்த தெருவுக்குச் செல்கிறது
அத்தனையும் பார்த்தவாறு
கொடிய வெயில் அப்படியே இருக்கிறது
இப்பொழுது என்ன செய்தபடி இருக்கிறாயென
உன்னைக் கேட்கவிழையும் என்னையும் பார்த்தபடி
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
( நன்றி - யாத்ரா - இலங்கையிலிருந்து வெளிவரும் கவிதைகளுக்கான இதழில் பிரசுரமான கவிதை )
24 comments:
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
கவிதை அருமை.
//இப்பொழுது என்ன செய்தபடி இருக்கிறாயென
உன்னைக் கேட்கவிழையும் என்னையும் பார்த்தபடி//
’உதிர்த்த விருட்சத்துக்கு எப்படித் தெரியவில்லையோ பூவின் வலி அது போல உனக்கும் தெரியவே போவதில்லை என் மனதின் வலி’
//அத்தனையும் பார்த்தவாறு
கொடிய வெயில் அப்படியே இருக்கிறது//
என்றும் கொள்ளலாமா ரிஷான்?
சிறு நிகழ்வை அழகு கவிதையால் பொறுத்தியிருக்கிறீர்கள்...
சருகுகளும் கவிகளாகும் உங்களைப் போன்ற கவிஞர்கள் இருந்தாலே!!
தொடருங்கள்.
நல்லாருக்கு ரிஷான்...
அன்பின் ரிஷான்
இலங்கையிலிருந்து வெளிவரும் காத்திரமான இதழொன்றில் உங்கள் கவிதை வெளிவந்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள்
தொடர்ந்தும் இத்தகைய இதழ்களுக்குச் சிறந்த கவிதைகளை எழுத வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
அருமை. என்னமோ செய்கிறது ரிஷான். வாழ்த்து சொல்லும் மனநிலை இல்லை. எங்கும் அமைதி வரட்டும்.
அனுஜன்யா
கொடும்வெயிலில் அலைக்கழிக்கப்பட்டதொரு பூவின் அவலத்தை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான்.
நிறைவான கவிதைகள் நிறையவே எழுதுங்கள். வாழ்த்துகள்.
அற்புதம் ரிஷான்.. மூழ்கி கிடந்தேன்..
ஒரு வேளை வெயிலை பற்றி ஒரு கவிதை என்னிடமிருந்து வந்தால், இந்த கவிதையின் பாதிப்பு இருக்கும்..
அன்பின் ராமலக்ஷ்மி,
//கவிதை அருமை.
//இப்பொழுது என்ன செய்தபடி இருக்கிறாயென
உன்னைக் கேட்கவிழையும் என்னையும் பார்த்தபடி//
’உதிர்த்த விருட்சத்துக்கு எப்படித் தெரியவில்லையோ பூவின் வலி அது போல உனக்கும் தெரியவே போவதில்லை என் மனதின் வலி’
//அத்தனையும் பார்த்தவாறு
கொடிய வெயில் அப்படியே இருக்கிறது//
என்றும் கொள்ளலாமா ரிஷான்?//
நிச்சயமாக சகோதரி :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் ஆதவா,
//சிறு நிகழ்வை அழகு கவிதையால் பொறுத்தியிருக்கிறீர்கள்...
சருகுகளும் கவிகளாகும் உங்களைப் போன்ற கவிஞர்கள் இருந்தாலே!!
தொடருங்கள்.//
உங்களைப் போல ஊக்கமளிக்கும் கவிஞர்களுக்காகவே நிச்சயம் தொடர்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் தமிழன்-கறுப்பி,
//நல்லாருக்கு ரிஷான்...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
//இலங்கையிலிருந்து வெளிவரும் காத்திரமான இதழொன்றில் உங்கள் கவிதை வெளிவந்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள்
தொடர்ந்தும் இத்தகைய இதழ்களுக்குச் சிறந்த கவிதைகளை எழுத வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.//
உங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகளும், விமர்சனங்களுமே இது போன்ற காத்திரமான இதழ்களுக்கு எழுத என்னைத் தூண்டின. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் சகோதரி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் அனுஜன்யா,
//அருமை. என்னமோ செய்கிறது ரிஷான். வாழ்த்து சொல்லும் மனநிலை இல்லை. எங்கும் அமைதி வரட்டும். //
கவிதையின் உள்ளார்ந்த பொருளைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் இப்னு ஹம்துன்,
//கொடும்வெயிலில் அலைக்கழிக்கப்பட்டதொரு பூவின் அவலத்தை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான்.
நிறைவான கவிதைகள் நிறையவே எழுதுங்கள். வாழ்த்துகள்.//
நிச்சயமாக எழுதுகிறேன்.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சரவணகுமார்,
//அற்புதம் ரிஷான்.. மூழ்கி கிடந்தேன்..
ஒரு வேளை வெயிலை பற்றி ஒரு கவிதை என்னிடமிருந்து வந்தால், இந்த கவிதையின் பாதிப்பு இருக்கும்.. //
என் ஒவ்வொரு கவிதைகளுடனும் கூடவே வரும் உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கின்றது. நிச்சயமாக எழுதுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
உங்க பதிவு விகடனில் பிரசுரமாகியுள்ளது
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
வாழ்த்துக்கள்
//உதிர்த்த விருட்சத்துக்குத் தெரியவில்லை
பூவின் வலி
விருட்சத்தின் வேர்களும் கானகமொன்றிலிருந்து
எப்பொழுதோ அகற்றப்பட்டிருக்க
கொடும் நகரத்துக்குள் பூக்கள் உதிர்க்க
நிழல் சருகுகளையா தேடமுடியும் //
பூவின் வலியை என்னாலும் உணர முடிகிறது .. உங்கள் வரிகளின் ஊடே ..
//அத்தனையும் பார்த்தவாறு
கொடிய வெயில் அப்படியே இருக்கிறது
இப்பொழுது என்ன செய்தபடி இருக்கிறாயென
உன்னைக் கேட்கவிழையும் என்னையும் பார்த்தபடி.///
ம்ம் .. பார்த்தபடித்தான் இருக்கிறது எப்பொழுதும் ..
உங்கள் வரிகளின் மீதான என் பிரமிப்பு இன்னும் கூடிக்கொண்டே போகிறது ரிஷான் .. வாழ்த்துக்கள் தோழரே ..
அருமை..
விகடனில் வந்ததிற்கும் வாழ்த்துகள்.
அன்பின் ஜீவா,
//உங்க பதிவு விகடனில் பிரசுரமாகியுள்ளது
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
வாழ்த்துக்கள் //
வருகைக்கும், பகிர்வுக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சக்தி,
//பூவின் வலியை என்னாலும் உணர முடிகிறது .. உங்கள் வரிகளின் ஊடே ..
//அத்தனையும் பார்த்தவாறு
கொடிய வெயில் அப்படியே இருக்கிறது
இப்பொழுது என்ன செய்தபடி இருக்கிறாயென
உன்னைக் கேட்கவிழையும் என்னையும் பார்த்தபடி.///
ம்ம் .. பார்த்தபடித்தான் இருக்கிறது எப்பொழுதும் ..
உங்கள் வரிகளின் மீதான என் பிரமிப்பு இன்னும் கூடிக்கொண்டே போகிறது ரிஷான் .. வாழ்த்துக்கள் தோழரே ..//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)
அன்பின் வண்ணத்துப்பூச்சியார்,
அழகிய பெயர் உங்களுக்கு..பிடித்திருக்கிறது !
//அருமை..
விகடனில் வந்ததிற்கும் வாழ்த்துகள்.//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
உதிர்த்த விருட்சத்துக்குத் தெரியவில்லை
> பூவின் வலி//
உதிர்த்த விருட்சத்துக்கும் தெரியவில்லை, மிதித்த மனிதனுக்கும்
தெரியவில்லை - மென்மையான அப்பூவின் வலி -
ஆனால் எங்கிருந்தோ உங்கள் கவிதையைப் படிக்கும் என் மனதில் மெலிதான சோகம்
தோன்றச் செய்து விட்டதே அந்தப் பூ...
வாழ்த்துகள் ரிஷான்
மைதிலி
அன்பின் மைதிலி,
//உதிர்த்த விருட்சத்துக்குத் தெரியவில்லை
> பூவின் வலி//
உதிர்த்த விருட்சத்துக்கும் தெரியவில்லை, மிதித்த மனிதனுக்கும்
தெரியவில்லை - மென்மையான அப்பூவின் வலி -
ஆனால் எங்கிருந்தோ உங்கள் கவிதையைப் படிக்கும் என் மனதில் மெலிதான சோகம்
தோன்றச் செய்து விட்டதே அந்தப் பூ...
வாழ்த்துகள் ரிஷான்
மைதிலி //
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி :)
பூவின் வலி பூவைத் தவிர வேறு யாருக்கும் (முழுதாகத்) தெரிய வாய்ப்பில்லைதான். பெருமூச்சைத் தவிர்க்க முடியவில்லை :( அழகான கவிதை.
Post a Comment